மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

ஜப்பானில் ஆயிரக்கணக்கான மக்களையும், வாழ்விடங்களையும், மனித உழைப்பின் அடையாளங்களையும் சில நிமிடங்களில் இயற்கை துடைத்தெறிந்தது. மானுடம் சந்தித்த கொடூர அழிவுகளில் என்றும் நிலைத்திருக்கும் அழிவு இது. தொலைக்காட்சிகளில் பதற பதற பார்த்த நிமிடங்கள் அப்படியே உறைந்துள்ளது. தொடர்ந்து வருகின்ற செய்திகளும், புகைப்படங்களும் மனதை உறைய வைக்கின்றன. பூகம்பம், சுனாமி, அணு உலை வெடிப்பு என நமது சகோதர மனித இனம் அங்கு கொடூரங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பேரழிவு தாகுதலின் கடைசி நிமிடம் வரை வாழ்வின் கனவுகளை சுமந்து திரிந்த மனித இனம் சுதாரிக்க நேரம் இல்லாமல் அழிந்த துயரத்தின் சுவடுகளை விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஊடகங்களில் பார்த்துகொண்டு இருந்த போது, நமது நாட்டின் சுனாமி நினைவுகள் எழுந்து வந்தது. 

ஆழிப்பேரலையின் தாக்குதல் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கடலூர் மாவட்டம் கிள்ளை கிராமத்தின் பக்கம் உள்ள எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் இருந்தேன். எம்.ஜி.ஆர் திட்டு என்ற கிராமம் புகழ் பெற்ற சுற்றுலா தளமான பிச்சவாரத்தின் அருகில் உள்ள கிராமம். மாவட்ட  நிலப்பரப்பின் இறுதியில் ஆற்றுக்கும் கடலுக்கும் இடையிலுள்ள ஒரு தீவு கிராமம். நாங்கள் சென்ற போது சுனாமியின் கோரதாண்டவம் முடிந்து மொத்த ஊரும் அழிந்திருந்தது. எங்கும் பிணங்கள் நிறைந்திருந்தது. மரங்களில், வீட்டு கூறைகளில், தெருக்களில் பிணங்கள் அடைந்திருந்தன. ஊரில் ஒரு மரணமெனில் ஊரே அழுவும் ஊரே மரணமடைந்தால் யார் அழுவது? அழுது கண்ணீர் வற்றிப்போன சொந்தங்களால் அழுவதற்கு சக்தி இல்லாமல் பிணங்கள் அள்ளிச் செல்லப்பட்டது. ஊரிலிருந்து திரும்பி தனது உறவினருடன் கிராமத்திற்கு வந்திருந்த ஒரு குழந்தை அழுதுக்கொண்டிருந்திருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்த நான் அந்த குழந்தையிடம் அமர்ந்து பேச்சுக்கொடுத்தேன். 

தம்பி உன் பேரென்ன?

......... அழுகைமட்டும்

சொல்லு கண்ணா உன் பேரென்ன?

"இங்கதான் எங்க வீடு இருந்துச்சு"

சரிம்மா.. உன் பேரென்ன?

"இங்கதான் எங்க வீடு இருந்துச்சு"

சரி செல்லம் .. ஒன்னும் ஆகல.. என்னை பார், உன் பேரென்ன?

''அந்த வீட்டுல எங்க அம்மா, அப்பா, அக்கா இருந்தாங்க"

அவனது இரு கைகளையும் பிடித்து " ஒன்னும் ஆகல அழுவாத என்றேன்.

"மாமா .. எங்க வீடு எங்க? அதுல இருந்த அம்மா எங்க?  

அந்த குழந்தையிடம் என்ன சொல்ல? 

எனது வாழ்வில் பதில் சொல்ல முடியாமல் நான் தவித்த அந்த கனங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. 

ஒன்று நிச்சயம் ...அமெரிக்காவின் ஏகாதிபத்திய கனவு வெறியின் வன்முறையில், ஒரு பரிசோதனை கட்டத்திற்காக ஹிரோஷிமா, நாகசாகியில் லட்சம் மக்களை பலி கொடுத்து, அந்த கொடூரத்தை வென்று, மீண்டும் எழுந்து நின்று உலகை திரும்பிப் பார்க்க வைத்த எங்கள் சொந்தங்களே. உங்களுக்கு எங்கள் கண்ணீரை மட்டுமல்ல நம்பிக்கைகளையும் தருகிறோம். நாம் வெல்லுவோம் ஒர் நாள். 


5 comments

 1. /உங்களுக்கு எங்கள் கண்ணீரை மட்டுமல்ல நம்பிக்கைகளையும் தருகிறோம். நாம் வெல்லுவோம் ஒர் நாள். / நிச்சயம்!

   
 2. உங்களுக்கு எங்கள் கண்ணீரை மட்டுமல்ல நம்பிக்கைகளையும் தருகிறோம். நாம் வெல்லுவோம் ஒர் நாள். //

  நாமும் இணைகிறோம்..

  அம்மக்கள் பட்ட துன்பம் அளவில்லாதது.. ஒவ்வொரு முறையும் நமக்கு படிப்பினை தருது...

   
 3. An unfortunate event. Lets pray for their recovery and safety. Thanks for the post.

   
 4. rashmi Says:
 5. dunno how to react to this... how much can one single country take?? was what i thought when i heard of the tsunami.. makes you wonder if everything is about fate.. but whats important is to fight the fate.. if humans make mistakes we can fight.. how can we fight nature? we can only give our support and try helping them as far as possible.. the loss can never be compensated!

   
 6. பின்னூட்டம் அளித்துள்ள மிடில்கிளாஸ் மாதவி, எண்ணங்கள், ரவிக்குமார் மற்றும் ரேஷ்மி அனைவருக்கும் நன்றி.

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark