மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


பாரதிய ஜனதாவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சும் வினைகளை விதைத்து விஷங்களை அறுவடை செய்வதில் வல்லவர்கள். பல மநிலங்களில் தேர்தல் வருகின்ற சமயமாதலால் தங்கள் வேலைகளை மீண்டும் துவக்கி உள்ளனர். எந்த மாநிலத்திலும் இந்த கட்சியை யாரும் மதிக்கவில்லை. எனவே இவர்களே முதன் முதலாக பல மாநிலங்களில் "முதலில்" வேட்பாளர்களை அறிவித்தனர். (இன்னும் இந்த ஊரு நம்புவதாக இவரகள் நினைப்பு) அறிவித்தால் போதுமா ஏதாவது மதம் சார்ந்த கருத்துக்களை கடுமையாக கிளப்பி விட்டால்தானே ஓட்டுப் பெட்டியில் பத்து இருபது ஓட்டுகளாவது விழும். இதோ அத்வானி திருவாய் மலர்ந்துள்ளார். அதுவும் முதலை அழுத கதையாய் ... 

""""""""""""""""""""""""1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் கட்சிக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், மசூதி இடிக்கப்பட்டு 15 நாள்களுக்குப் பிறகு ஒரு செய்தித்தாளில் தான் எழுதிய கட்டுரையில் இதைக் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர்  13 .03 .11   அன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அயோத்தி இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் மிகவும் சோகமான நாளாக பாபர் மசூதி இடிப்பு தினம் அமைந்துவிட்டது என்று இணையதளத்தில் இத்தகவலை பதிவு செய்துள்ளார் அத்வானி. அயோத்தி இயக்கத்தில் பங்கு பெற்றதை நான் இருப்பதை பெருமையாகவே கருதுகிறேன். ஆனால் மசூதி இடிக்கப்பட்ட பிறகு கட்சியின் மதிப்பு பெருமளவு சரிந்துவிட்டதற்காக மிகவும் வருத்தப்பட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி இயக்கத்தில் இணைந்திருந்த அமைப்புகளால் என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது மிகப் பெரும் தவறாகும். அனைத்துக்கும் மேலாக எவ்வித சட்ட சிக்கலும் இன்றி, சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டிருந்த வேளையில் மசூதி இடிக்கப்பட்டது மிகப் பெரிய சோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பாராத வகையில் அயோத்தி இயக்கத்தினர் ஒன்று திரண்டு மசூதியை இடித்ததால் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. இருப்பினும் அன்றைய நிகழ்வுக்கு எவருமே பொறுப்பாக முடியாது என்றும் அந்த கட்டுரையில் அத்வானி குறிப்பிட்டுள்ளார்""""""""""""""""""""

இப்போது தெரிகிறதா அய்யோக்கியதனமான பேச்சு என்றால் எதுவென? இடித்ததற்கும் வருத்தப்படுவார், பங்கேற்பு அளித்ததற்கு மகிழ்ச்சியடைவார். இடித்திருக்கக்கூடாது. ஆனால் தடுக்க முடியவில்லை. எதிபாராமல் அயோத்தி இயக்கத்தினர் ஒன்று திரண்டு மசுதியை இடித்ததால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாம். அப்படியானால் இவர் ரதயாத்திரை நடத்தி மக்களை மதவெறி மூலம் திரட்டியதும், வழிஎல்லாம் ரத்த ஆறு ஓடியதும் பாபர் மசுதியை இடிக்க அல்லவா?  இந்த யாத்திரை கொசுபிடிக்கவா நடத்தாப்பட்டது. 

இவர்கள் எப்போதும் இப்படிதான்.. ஒன்றை செய்வார்கள் அதில் கடுமையான பின்னடைவு வந்தால் அப்படியே மாற்றி பேசுவார்கள். காந்தியை படுகொலை செய்த போதும், காமராஜரை படுகொலை செய்ய முயன்ற போதும், குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை படுகொலை செய்த போதும் முன்னுக்கு பின் முரணாக பேசி, பதுங்கி தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். 

அத்வானியோ அல்லது பா.ஜ.கட்சியின் ஆதரவு பத்திரிக்கைகளோ பாபர் மசுதிக்காக்க கண்ணீர் வடிப்பது அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி வாக்குகளை சேர்க்கும் தந்திரம்தான். மசூதி இடிக்கப்பட்ட செய்தியை தேர்தல் சமயத்தில் மதவெறி சக்திகளை உற்சாகப்படுத்தவும், பொதுவானவர்களுக்கு ஏதோ உண்மையிலேயே இவர்கள் வருந்துவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதுமே இவர்களது நோக்கம். இந்த  நோக்கம் வெற்றியடையாது.  

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark