மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

 """""""""""""நாங்கல்லாம் மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்க"""""""""""""""""""""""

எனவே பெரியோர்களே தாய்மார்களே........
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை அளித்தது. இதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு அலைகளால் ராஜா, அமைச்சர் பதவியை கடந்த நவம்பர் 14ம் தேதியன்று ராஜினாமா செய்தார் என்பது தாங்கள் அறிந்த ஒன்றே.... இந்த சுழலில்    ராஜா வகித்து வந்த பதவி கபில் சிபலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ராஜா எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. அகில உலகமே எதிர்பார்த்த இந்த மகிழ்சியான உற்சாகமான காட்சி எதிர்பார்க்கப்பட்டது போல நேற்று நடந்துள்ளது
என்பதை
மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கிறோம்............

இதனை தொடர்ந்து  வந்த செய்திகள்...
1 . முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டது, திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணியைப் பாதிக்காது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.ஆனால் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கடி தருவதற்காகவே ராசா மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பாக முனுமுனுக்கப்படுகிறது.
2 .  ராசா கைது விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி "இது சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி. அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. சட்டம் தனது கடமையை செய்யும் என்று ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கூறி வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றார்.
அதே போல இந்தக் கைதால் காங்கிரசுடனான உறவில் எந்தப் பிரச்சனையும் வராது என்று திமுக அறிவித்துள்ளது. (எவ்வுளோ அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னாங்களோ )
3 . ஸ்பெக்டரம் வழக்கில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் , அனைத்து கேள்விகளையும் சி.பி.ஐ.,யிடம் கேளுங்கள் எனவும் கூறியுள்ளார்.( அப்ப இந்த விவகாரத்தில் இழப்பு எதுவும் இல்லைன்னு சொன்னது சி.பி.ஐய கேட்டுதானா தலைவா )
4 . ஸ்பெக்ட்ரம்  முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். ( அவர்கள்  அவரு சொந்தகாரங்களாம்)
5 . ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பாக மாஜி மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருப்பதை அ.தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். திருநெல்வேலியில் அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (அம்மா கைதானப்ப உடன்பிறப்புகளுக்கு இந்த ஐடியா தெரியல பாத்திங்களா?)
6 .  ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் தொலை தொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் இன்று  பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது. மேலும் விசாரணையின் போது கிடைத்த தகவல் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., அறிவித்துள்ளது.
7 . "ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா கைது மட்டும் போதாது. இந்த விவகாரத்திற்கு காரணமான முதல்வர் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும்"அ. தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை. (எப்படி எப்படி !!!!)

கண்ணுக்குத் தெரியாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு நாட்டையே உலுக்கியது. நாட்டுக்கு பேரிழப்பை எற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமெண்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால், பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. எதிர்ப்பு வலுக்கவே பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. இருப்பினும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என விளக்கங்களையும், பேட்டிகளையும் அளித்து வந்தார். முதல் முறையாக கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று ‌டில்லி மற்றும் சென்னை, பெரம்பலூரில் இருக்கும் ராஜாவின் வீடுகள், அவரது உறவினர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது. 

அதன் பிறகு அவர் ராஜினாமா செய்தது முதல் நடந்த நாடகங்களை தாங்களே அறிவீர்கள். ஆனால் கலைஞர் டெல்லி சென்ற மறு தினத்தில் இந்த கைது நடந்திருப்பது காங்கிரஸ் விரும்பியபடி அவர்களுக்கு சட்டசபை தேர்தலில் இடங்கள் கிடைக்காததே காரணம் என  நமது "டெல்லி" வட்டாரங்கள் கூறுகிறது.  அல்லது நமது அரசியல் "வல்லுனர்கள்"கூறுகின்றனர்.

முன்னாள் தொலைதொடர்பு அதிகாரி ஏ. கே .ஸ்ரீவத்சவா, அக்கா நிரா ராடியா, ஹவாலா தரகர்கள் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின், கிரின் ஹவுஸ் புரமோட்டர் சாதிக் பாஷா, அண்ணா  பல்கலைகழக ஏ.ராமசந்திரன் உள்ளிட்ட இன்னும் பலரின் கைதுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பாத்திருப்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் அவை நடக்கலாம் அல்லது காங்கிரஸ் திமுக சீட்டு பேரம்  அதற்குள் முடித்தால் நடக்காமலும் போகலாம் என்பதை பொதுமக்கள்  அறிக.

இருப்பினும் அரசியல் சாணக்கியர், இந்திய அரசியலின் சூத்திரதாரி, தென்னாட்டு அரசியல் வித்தகர் என்றெல்லாம் புகழ்ப்பட்டவரின் டெல்லி பயண பரிசாக இந்த கைது நடந்திருப்பதுதான் முதலாளித்துவ அரசியலின் கோரமுகம். நேர்மை இல்லாமல் முதுகில் குத்திக்கொண்டே முகத்தில் குறுநகை காட்டி மக்களை ஏமாற்றுவது முதலாளித்துவ அரசியலின் அடிப்படை. ஊழல்  அவர்களது உடன்பிறப்பு. இந்த முதலாளித்துவ அரசியலை விழத்தாமல் ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை.  

7 comments

  1. Sadhikcdm Says:
  2. சுயநலத்திற்காகவும் தன்மக்கள் நலனுக்காகவும் நாட்டுமக்கள் நலனை காவு கொடுப்பவர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்ததே . பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சியினரையே பலி கொடுப்பவர் கருணாநிதி என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்

     
  3. Anas Says:
  4. nice..........appa tata - birla va enna pandrathu....

     
  5. chenguttuvan Says:
  6. WOWW CBI IS ALIVE... KADANTHA 2 VARUDAMA SETHTHU KIDANTHUCHU IPPA THIDIRNU ENTHIRUCHUCHU, UNMAILAYE UYIR VANTHURUCHA ILLA BURN PANNUM POTHU THIDIRNU NADUVULA ENTHIRUCHU DOPAKKATTINU VILUME ATHUVA? SONIYAVUKKE VELICHAM!

     
  7. chenguttuvan Says:
  8. WOWW CBI IS ALIVE... KADANTHA 2 VARUDAMA SETHTHU KIDANTHUCHU IPPA THIDIRNU ENTHIRUCHUCHU, UNMAILAYE UYIR VANTHURUCHA ILLA BURN PANNUM POTHU THIDIRNU NADUVULA ENTHIRUCHU DOPAKKATTINU VILUME ATHUVA? SONIYAVUKKE VELICHAM!

     
  9. அன்புள்ள சாதிக்
    /////பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சியினரையே பலி கொடுப்பவர் கருணாநிதி என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்/////
    இனியும் அவர் அப்படிதான் நடந்துக்கொள்வார். தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.

     
  10. தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி புரட்சியாளன்...
    சோனியா, மன்மோகன் கைதானாலும் ஆகலாம் டாடா - பிர்லா போன்றோர் கைதாக மாட்டார்கள்.ஏனெனில் உண்மையில் நடப்பது அவர்களது ஆட்சிதானே! இவர்கள் பொம்மலாட்டபொம்மைகள்

     
  11. தங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி செங்குட்டுவன்...
    சோனியாவுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கு வெளிச்சம்.. யோசித்தால் தெரியும்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark