மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

16.07.2004 ஆண்டு காலையில் கும்பகோணத்தில் 94 குழந்தைகள் கல்வி வியாபார தீயால் பொசுக்கப்பட்டனர். அந்த கொடூரம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் உருன்டோடி விட்டது. அந்த சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களில் அங்கு சென்றதும், எரிந்து உருகி கிடந்த பிஞ்சுகளை பார்த்ததும், அவர்களின் பெற்றோர்கள் கதறி துடித்ததும் நேற்று நடந்தது போல இன்னும் கண்முன்னே உள்ளது.
சம்பவம் நடந்தது பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் கவர் ஸ்டோரிகளை தீட்டினர், தீயே உனக்கு இதயம் இல்லையா? சாவே உனக்கு சாவு வராதா? என்றெல்லாம் கருப்பு வண்ணத்தில் போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. நமது அரசாங்கம் வழக்கம் போல உடனடியாக விசாரனை கமிஷன் அமைத்தது. இந்த தேசத்தில் மலிவாகவும் விரைவாகவும் அமைக்கப்படுவது கமிஷன்கள் மட்டும்தான் என்பது மீண்டும் நிருபனமானது.  கூரை இருக்கும் பள்ளிகள் உடன் அப்புறப்படுத்தப்பட்டன. கூரை உள்ள பள்ளிகளுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது. இந்த கலோபரங்களில் அந்த குழந்தைகள் மரணத்திற்கு அந்த கும்பகோணம் பள்ளியில் இருந்த கூரை மட்டுமே காரணம் என்று காரணம் காட்டப்பட்டது. எரிந்தது வெறும் தீயா? பற்றியது வெறும் கூரை மட்டும்தானா? கருகியது வெறும் பிஞ்சுகளின் உடல்கள் மட்டும்தானா?
   இல்லை நிச்சயம் இல்லை. கல்வி வியாபாரிகளின் லாபவெறியால் அந்த குழந்தைகள் குடிசைகளில் வைத்து எரிக்கப்பட்டனர். குறுகலாக உயர்ந்து நின்ற ஒரே கட்டிடத்தில் சரஸ்வதி ஆங்கிலப் பள்ளி, சரஸ்வதி தொடக்கப் பள்ளி, கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவைகளை நடத்தி அதனுள் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஆட்டுக்குட்டிகளை போல அடைத்து பணம் ஒன்றே குறிக்கோலாய் அலைந்தவர்கள் லாப வெறிதானே இந்த கொலைகளுக்கு காரணம். அந்த கல்வி நிலைய பணவெறியர்கள் மட்டுமல்ல, அந்த பள்ளிக்கு அனுமதி வழங்கியவர்கள், அந்த பள்ளியை இத்தனை ஆண்டு காலம் அனுமதித்த அரசாங்கம் ஆகியவர்கள் குற்றவாளிகள் இல்லையா? குற்றம் நடந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
    அப்போது இருந்த ஜெயலலிதா ஆட்சிமாறியது. கருனாநிதியின் ஆட்சி வந்தது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக வழக்கு வேகம் பிடித்தது. அதன் பின்பு 24 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 486 நபர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். தேனொழுக பேசும் தற்போதைய முதல்வர் வார்த்தைகளை நம்பிய அப்பாவி பெற்றோர்கள் எப்படியும் நீதி கிடைக்கும் என்று நம்பினர். ஆனால் நடந்தது சோகமானது. ஆறு ஆண்டுகளாக இந்த சாட்சிகளில் ஒருவர் கூட விசாரிக்கப்பட்டவில்லை. வழக்கு இன்னும் முழுமையான விசாரனைக்கு வரவில்லை. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமியும் மாவட்ட தொடக்க கல்வி இயக்குனர் கண்ணனையும் வட்டாச்சியர் பரமசிவத்தையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளனர். நமது நீதிமான்கள் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளை ஒரு சாட்சியைகூட விசாரனை செய்யாமல் விடுவித்துள்ளனர். குற்றவாளிகளில் இன்னும் பலர் அரசு சம்பளம் பெற்று ஆடம்பரமாய் வாழ்ந்து வருகினறனர். குழந்தைகளை தீயில் பறிகொடுத்த பெற்றோர்கள் நடுவீதியில் ஆற்றாமையால் ஆறாய் கண்ணீர் வடித்துக்கொன்டிருக்கின்றனர்.
    நமது நீதிமான்கள் தானாகவே இவர்களை விடவில்லை நமது தமிழக அரசாங்கம் இந்த மூன்று பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆகவே விடுவிக்கப்பட்டனர் என்று இவ்வழக்கில் அரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் மதுசூதனன் கூறுகிறார். இது நியாயமா? நீதியா? அரசின் இந்த வஞ்சகம் சரியானதா? எளிவர்கள் குழந்தைகள் எரிந்து கரிக்கட்டையாய் ஆனால் ஆள்பவர்கள் இப்படிதான் நடந்துக்கொள்வார்களா? கன்றுவின் மரணத்திற்கு நீதி கேட்ட பசுவின் கேள்விக்கு தனது மகனை தேர்ச்சக்கரத்தில் பலியிட்ட மனுநீதி அரசனின் வாரிசு என்று இலக்கிய வாய்வீச்சு வீரர்களின் ஆட்சியில் இந்த அநீதி நடக்கலாமா?   
 இவர்கள் இலட்சனம் கூட நமக்கு தெரியும். ஆனால் சமூகத்தின் பொதுவெளியில் இதை எதிர்த்து ஆத்திரம் வர மறுப்பதுதான் மிகவும் ஆபத்தானது. இந்த கொடூரத்தை நமது ஊடகங்கள் வழக்கம் போல மூடி மறைத்து அன்றைய தினத்திலும் மாணாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மூழ்கினர். செய்திதாள்களில் ஓரத்தில் இந்த செய்தி மறைக்கப்பட்டது. போபால் விஷவாயு தீர்ப்பில் அய்யோக்கியன் ஆண்டர்சன் குற்றவாளி பட்டியலில்  இருந்தும் அவனை கைது செய்ய வக்கில்லாத அரசும், அவனுக்கு தண்டனை தர மறுக்கும் நீதிமன்றமும் உள்ள நமது தேசத்தில் சமூக பொதுவெளி போராட்டங்களே நீதியை பாதுகாக்கும். 
நண்பர்களே கும்பகோணத்தில் எரிந்து சிதைந்த்து நமது குழந்தைகள் இல்லைதானே? அதனால் மவுனமாய் இருக்க போகிறோமா? இல்லை வீதியில் இறங்கி போராட போகிறோமா? கும்பகோணத்தில் பற்றிய தீ தேசத்தை எரித்தும் முன் விழித்திடுவோம்!

9 comments

 1. poet udhaya Says:
 2. தினகரன் அலுவலகம் எரித்ததில் விடுதலை , பள்ளிக்கூடம் எரித்ததில் விடுதலை , அவர்கள் அனைவரும் விடுதலையாகதான் உள்ளார்கள் ... பொது மக்களை தவிர ...நீதியை காக்கும் நீதிபதிகள் நீதிக்கு புறம்பாக செயல்படுவதனால் தான் தவறு செய்தால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் தவறுசெய்பவர்களை இன்னும் தூண்டுகிறது...போராட்டம் ஓங்கட்டும் .... t

 3. Narayanan Says:
 4. தோழர்,
  கண்ணன், மாவட்ட தொடக்க கல்வி இயக்குனர் அல்ல, மாநில முழுமைக்குமான தொடக்க கல்வி இயக்குனர். இந்த கொலையாளிகள் விடுதலையான செய்தி பார்த்ததுமே அதிர்ந்து போனேன். இன்னும் கண்ணுக்குள்ளே அந்த கருகிய பிஞ்சுகள். இந்த மந்திரிகளுக்கும் அரசுகளுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும்
  நீதி மான்களுக்கும் இதயம் என்பதே கிடையாதா? பலரை காவு வாங்கிய இவர்களை விசாரிப்பதில் ஏன் இத்தனை தாமதமோ? எப்படித்தான் தூக்கம் வருகிறதோ?
  கேவலம் பணத்திற்காக தானே இதனை கொடுமைகள் நடக்கின்றன. மக்களும் உணர்ச்சி பிழம்பில் கண்ணீர்விட்டு கருப்பு சுவரொட்டி பார்த்து, சிறிது காலம் கடந்த பின் மறந்து
  விட்டார்கள். இந்த கொடுமையை எதிர்த்து போரடதவன் மனிதனே இல்லை. நாம் களம் இறங்காமல் இவர்கள் மாறப்போவதில்லை. களம் என்றவுடன் போர்கலமோ அல்லது சிறைவாசமோ அல்ல, நாம் அனைவரும் சில மணி நேரம் இந்த கொடுமைக்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு வந்தாலே போதும். இந்த வழக்குக்கு ஒரு முடிவு வந்துவிடும்.

  நா.நாராயணன்

 5. ”நீதியை காக்கும் நீதிபதிகள் நீதிக்கு புறம்பாக செயல்படுவதனால் தான் தவறு செய்தால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் தவறுசெய்பவர்களை இன்னும் தூண்டுகிறது”
  சரியான வார்த்தைகள் உதயா. பின்னூட்டத்திற்கு நன்றி!

 6. ”””நீதி மான்களுக்கும் இதயம் என்பதே கிடையாதா? பலரை காவு வாங்கிய இவர்களை விசாரிப்பதில் ஏன் இத்தனை தாமதமோ? எப்படித்தான் தூக்கம் வருகிறதோ?”””
  நாராயணன், அதனால்தான் இப்படிபட்ட தீர்ப்புகள் தொடர்ந்து வருகிறது. தூக்கத்தை கலைப்போம் நிச்சயம் ஒரு நாள்!

 7. Dear Rams Says:
 8. தோழர் ரமேஷ் அவர்களுக்கு,
  இந்த மாதிரி கொடுரமான நிகழ்ச்சிகளுக்கு பிறகும், சட்டட்தை தவறாக பயன்படுத்தும் நீதிபதிகளை தண்டிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
  சினிமாவால் சீரழியும் இளைஞர்களை, உங்களின் இந்தமாதிரியான கட்டுரைகள் சிந்திக்க தூன்டும்
  வாழ்த்துக்கள் ரமேஷ்...

 9. thanks dear rams.thanks for your comment for this artical

 10. மிகவும் சரியான பதிவு! எழுதிய தோழர் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  கல்வி தனியார்மயம் என்கிற விசயம்தான் இக்கொடிய நிகழ்வுக்கு அடிப்படை என்பதுவும், இது விபத்து அல்ல திட்டமிட்ட படுகொலை என்பதுவும்கூட மிகச்சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

  ஆனால், இதற்குத் தீர்வாக நீதிமன்றங்கள் முறையாக நடந்துகொண்டால் போதும் என்றும், தவறு செய்யும் நீதிபதிகளைத் தண்டிக்க வேறொரு சட்டம் வேண்டும் என்றும் குறிப்பிடப்படுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

  ஏனெனில், இந்த போலிஜனநாயக கட்டமைப்பே ஒரு மோசடிதான். இந்த ஜனநாயகத்தை இடைவிடாது தாங்கிக் கொண்டிருக்கும் தூண்களாக சித்தரிக்கப்படுவதில் நீதித்துறைதான் அனைத்திலும் முன்னிறுத்தபப்டுகிறது. ஆனால், நீதித்துறை என்பது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற மறுகாலனிய பயங்கரத்தைத் தான் அனைத்து வகையிலும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது; மக்களுக்கான ஜனநாயகத்தை அல்ல.

  வேறொரு சட்டம் இயற்றப்பட்டாலும் அதுவும் இவர்களால்தான் நிறைவேற்றப்படவேண்டும் என்கிற நிலை இருக்கையில் அத்தகைய சட்டத்தை இயற்றி என்ன பயன்?

  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களும் இந்தப் போலிஜனநாயகத் துண்களின் காலடியில் குப்பைக்காகிதங்களாகக் கிடைக்கும் போது நீதிமன்றங்களுக்குள்ளே நீதியைப் பெறமுடியாது.

  நீதிமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதையை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள, 26 ஆண்டுகள் கடந்து வழங்கப்பட்ட போபால் தீர்ப்பைக் கொஞ்சம் கவனித்தாலே போதும்.

  எனவே, நீதி என்பதை நீதிமன்றங்களின் சுவர்களுக்குள்ளே நின்று பெறமுடியாது. அதை மக்கள் மன்றத்தின் மூலமாகத்தான் பெறமுடியும். உண்மையான ஜனநாயகத்தை உருவாக்குகின்ற புரட்சிகர போராட்டங்கள் உருவாகும் போது இத்தகைய அநீதிமான்களுக்கு முறையான தீர்ப்பும் உரிய தண்டனையும் வழங்கப்படும்.

  எனவே, கும்பகோணம் குழந்தைகளின் படுகொலை உள்ளிட்ட அனைத்து கொடூர நிகழ்வுகளையும் மூடிமறைத்து முதலாளித்துவத்தின் செருப்பாகக் காட்சியளிக்கும் இந்திய நீதிமன்றங்கள் மீது நமக்கு ஏற்படுகின்ற கோபம் நியாயமானது என்றால், நம்முடைய எதிர்வினைகள் இப்படியான எதிர்ப்புகளைப் பதிவதோடு நின்றுவிடாமல், உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கித்தரும் புரட்சியை நோக்கி நாம் அணிதிரள வேண்டியதும் அவசியம் என்றாகிறது. நன்றி!

  புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
  து. சுரேஷ்.
  letusdebate1@gmail.com
  letsdebate1.blogspot.com

 11. மிகவும் சரியான பதிவு! எழுதிய தோழர் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

 12. sakthi Says:
 13. எளிவர்கள் குழந்தைகள் எரிந்து கரிக்கட்டையாய் ஆனால் ஆள்பவர்கள் இப்படிதான் நடந்துக்கொள்வார்களா?

  பணக்காரன் வீட்டில் இருக்கும் நாய்க்கு உள்ள மரியாதை கூட ஏழை குழந்தைகளுக்கு இல்ல சகோ

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark