மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

வெவ்வாலாய் மாறியதன் காரணமறிய...

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, June 29, 2010



அனாதி காலம் தொட்டே
தலைகீழாய் தொங்கியபடி இருந்த 
வெவ்வால்கள் திடுமென நேராய் நின்றன
சூரியவெளிச்சம் பட்டுமறையும் 
அவைகளின் இயல்புகள் 
மாறத்துவங்கின மாற்றொமொன்றே
மாறாது என்கிறபடியாக..
பல்லாயிரம் ஆண்டுகளாய்
நேராகவே நடந்த மனிதர்கள்
தலைகீழாய் தொங்கினர்
வெளிச்சம் பட்டு மகிழும் 
மகிழன்கள் மருகினர் ஒளிபார்த்து
கோர்வையாய் இடைவெளி நகர்ந்தது
காலப்பெருவெளி மாற்றி செய்தது.
காலங்களின் எழுச்சியுடன்
கலகங்கள் முளைக்கும் காலங்களில்
களம் மாறிய காலமாய் தலைகீழாக நின்றனர்.
தங்கத்தால் ஆன தொட்டில்கள் 
தலைகீழாய் நின்ற மனிதர்களுக்கு எதிரே நின்றது 
அவர்கள் 
தலைகீழாய் நின்றதால் இருள் கவிழ்ந்தது.
எழுந்த பரவச நிலையில்
தலைகீழாக இருக்கவே
விரும்பினர்.
சொற்களை அடுக்கி 
வேட்டையாடுபவர்கள்
இடைவெளி இல்லா 
இலவசங்களை வீசியதன் விளைவெனவும்
செவ்வக பெட்டியில் எண்களை மாற்ற
ரெக்கைகளை வளர்த்து
அலைவரிசை பார்த்து 
வெளியே வந்த கண்களும்
நீண்ட காதுகளுமாய் நடந்தவர்கள்
எல்லாம் நல்லபடியாக நடப்பதாக நம்பி
வானம் பார்த்துக்கொண்டே இருந்ததால்
வருவதை முதலில் சுகிக்க எண்ணி
உயர்ந்த இடங்களில்
தலைகீழாய் தொங்க துவங்கினர் 

5 comments

  1. கவிதை அருமை

     
  2. kumaresan Says:
  3. என்ன தோழர், நீங்களும் இப்படி மறைபொருளாய் பேசத் தொடங்கிவீட்டீர்கள்? நேரடியாகப் பேசுவதுதானே உங்கள் சிறப்பு? ஒருவேளை இந்த நடையும் உங்களுக்கு வரும் என்று காட்டிக்கொள்வதற்காக இப்படி எழுதினீர்களா?
    எளிய வாசகனாய் இதைப் படித்ததில், இது வெளியாகியுள்ள காலப்பின்னணியோடு இணைத்து நான் புரிந்துகொள்வது இதைத்தான்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெறும் ஆரவாரங்களோடு முடிவடைந்துவிட்டது, இதில் பங்கேற்றவர்கள் வெளிச்சங்களில் மயங்கி வவ்வாலாய்த் தொங்க சம்மதித்துவிட்டார்கள் என்பதாகத்தான் புரிந்துகொள்கிறேன்.
    சில அறிவிப்புகள் தொடர்போராட்டங்களின் வெற்றி. இந்த அறிவிப்புகளுக்கே இவ்வளவு நீண்ட போராட்டங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. மைய அரசு வாய் திறக்கத் தயாராக இல்லாத நிலையில் போராட்டங்கள் இன்னும் அடர்த்தியாகத் தொடர வேண்டியிருக்கிறது. மக்களை நோக்கிய பார்வையோடு போராடுகிறவர்கள் தற்போதைய அறிவிப்புகளின் நன்மைகளை வரவேற்று, முழுமையான மாற்றங்களுக்குத் தொடர்ந்து போராடுவார்கள். எல்லாம் வீண் என்று கரித்து ஒதுக்கிவிடவும் மாட்டார்கள், இதுவே போதும் என்று முடங்கிவிடவும் மாட்டார்கள். இந்தக் கண்ணோட்டத்துடன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
    ஒருவேளை நான் கவிதையைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே.

     
  4. நன்றி உலவு .காம்

     
  5. நன்றி உலவு .காம்

     
  6. அன்பு தோழர் அ.கு
    வணக்கம். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...
    இலவசங்களை மூலதனம வைத்து மக்களை தொலைகாட்சிக்குள் கட்டும் பண்பாட்டு சுரண்டலை சொல்ல வந்த கவிதை என்று ''' நம்பி'' எழுதிவிட்டேன். நீங்களாவது பரவாயில்லை. இது பின் நவீனத்துவ கவிதை என்று ஒரு நண்பர் தொலைபேசியில் சொன்னார். " நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்"". நல்ல விஷயத்தை புரியாமல் சொல்வது பின் நவீனத்துவம் எனில் இந்த சோதனை முயற்சி இதோடு போகட்டும்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark