மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


- மேலே உள்ள படங்கள் உங்கள் இதயத்தை உருகச்செய்யும். மனித நேயம் உள்ள எந்த ஒரு உயிரும் ஒரு நிமிடம் ஆடித்தான் போகும். இந்த படங்கள் போர் நடந்த சுழலில் எடுக்கப்பட்டது இல்லை. உறங்கும் போது எப்படி ஏன் எதற்காக இறக்கிறோம் என்று தெரியாமல் மரணமடைந்த அப்பாவிகளின் மரணம் இது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இரவு 11.0 மணி அளவில் போபாலில் அமெரிக்க நாட்டின் யூனியன் கார்படு தொழிற்சாலையில் 27 டன் மீத்தேன் ஐசோசனையடு விஷவாயு கசிவு ஏற்பட்டது. டிசம்பர் 3 அதிகாலை 12.30 மணிக்கு அபாய மணி ஒலிக்கப்பட்டது. 3 மணிக்கு 40 ஆயிரம் கிலோ எடையுள்ள டேங்க் வெடித்து விஷவாயு பரவியது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள் கொத்துகொத்தாய் இறந்தனர். காற்றின் திசையின் வழியே ஓடியிருந்தால் பல்லாயிரம் மக்கள் தப்பியிருக்கமுடியும் ஆனால் குழப்பத்தில் காற்றின் எதிர்திசையில் ஓடினர். சோதனைச் சாவடி எலிகளைபோல நமது சகோதர சகோதரிகள் மாண்டுபோனார்கள். இதை விபத்து என்பதைவிட முதலாளித்துவத்தின் அலட்சிய மற்றும் லாபவெறியில் ஏற்பட்ட கொலை என்றே சொல்லலாம். காரணம் மீத்தேல் ஐசோசயனட் வாயு 5 டிகிரி செல்சியசுக்கு குறைவான குளிரில் இருக்கவேண்டும். ஆனால் அந்த நிறுவனத்தில் 1984 ஜூன் மாதத்திலிருந்தே குளிரூட்டும் கருவி வேலை செய்யவில்லை. அதாவது 6 மாதங்களாக. எப்போதும் விபத்து நடக்கலாம் என்ற சூழல். லாபத்தை பெருக்க உற்பத்தியை மட்டுமே பார்த்த நிறுவனம் மக்கள் பாதுகாப்பை கவனிக்க தவறியது. விபத்து நடந்த அன்று 350 டிகிரி என்ற உயர் வெப்பம் ஏற்பட்டதால் வாயு டேங்க் வெடித்தது. 
இந்த கொடூர விபத்தில் 25.000 (இருபத்தி ஐந்தாயிரம்) பேர் மரணமடைந்தனர். 5 லட்சத்து 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் நமது அரசாங்கம் இறந்தது மூவாயிரம் பேர் என்றும், பாதிக்கப்பட்டது ஒரு லட்சம் பேர் என்றும் அறிக்கைவிட்டது. இன்றுவரை அந்த நிலைபாட்டில்தான் இருக்கிறது. ஆனால் இன்றுவரை அங்கு தினமும் 6,000 மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுவாசநோய், இரப்பை பிரச்சனைகள், தொடர்ந்து கருகலைதல், நரம்பு பிரச்சனைகள், தொற்று நோய்கள், மனநோய், தோல்நோய்கள், போன்றவை தொடர்ந்து மக்களை வாட்டி வருகிறது. தற்போது அந்த நகரத்தில் கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் ஊனத்துடனும், உடல் நலக்குறைவுடனும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கேன்சர் மற்றும் உடல் உறுப்பு செயல் இழந்து பிறக்கின்றது. நடைபிணங்களாக தங்களுக்கே அந்நியாமான அந்தமனிதர்கள் மீது நமது அரசாங்கங்கள் அக்கரை கொள்ளவில்லை. 
இந்த அலட்சிய படுகொலைகளையும் அந்த அமெரிக்க கம்பெனியையும் பாதுகாக்ககவே நமது அரசுகளும் நீதிமன்றங்களும் இதுவரை செயலாற்றி உள்ளன. நமது அரசு இதை தொழிற்சாலை விபத்து என எளிமையாய் கூறியது. அந்த கம்பெனிமீது வழக்கு பதிவுசெய்து முதல் தகவல் அறிக்கை தந்து குற்றம்சாட்ட மூன்று ஆண்டுகள் தாமத்தப்படுத்தியது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன இதோ 26 ஆண்டுகளுக்கு பிறகு 25 ஆயிரம் மக்களை பலி கொண்ட வழக்கின் நீதி வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கு தலா இரண்டு ஆண்டு சிறையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளது நீதிமன்றம். அவர்கள் 25 ஆயிரம் வழங்கி ஜாமினில் செல்லாம் என்ற சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.  இந்தியா வெக்கங்கெட்ட தேசம் என மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் முக்கிய குற்றவாளி அமெரிக்காவை சேர்ந்து வாரன் ஆன்டர்சன் குறித்து எந்த தீர்ப்பும் இல்லை. ஏனெனில் அவன் தலைமறைவு குற்றவாளியாம். 
1984ல் விபத்து நடந்த நான்கு நாட்கள் கழித்தே வாரன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டன். ஆனால் சிலமணி நேரங்களிலேயே அவன் ஜாமினில் வெளியேறி, மாநில அரசின் விமானம் மூலம் டில்லி சென்று அங்கிருந்து தனி விமானம் முலம் அமெரிக்கா தப்பிச்சென்றான். இதுவரை திரும்பவில்லை. மோசமாக நிர்வாகிக்கப்பட்டது தான் விபத்துக்கு காரணம். எந்த நேரத்திலும் விபத்து ஏற்படலாம் என்று அவனுக்கு தெரியும். ஆனால் பாதிக்கப்படுவது இந்திய நாட்டு மக்கள்தானே என்ற அலட்சியம். நியூயார்க் அருகில் லாங்ஐஸ்லண்ட் தீவில் தற்போது உல்லாசமாக வாழ்ந்துவருகிறான். இதைவிட கொடுமை அந்த நேரத்தில் கார்பைடு ஆலையில் வெளியான விஷ வாய்வில் இருந்த ரசாயன விபரங்களை, வர்த்தக ரகசியம் என்று கூறி இவன் வெளியிட மறுத்தான். அந்த ரசாயன கலவை தெரிந்தால்தான் டாக்டர்களால் துள்ளியமான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். அதை கூட செய்யமறுத்த அந்த பாதகனை, இந்த வழியில் பலரை கொலை செய்த அவனை இந்தியாவும் தன்னிடம் ஒப்படைக்க கடுமையாக போராடவில்லை அமெரிக்காவும் ஒப்படைக்க தயாரில்லை. இந்த தீர்ப்பில் அவனை குற்றவாளியாக அறிவிக்கக்கூட நமது நீதிமன்றம் தயாரில்லை. அந்த நிறுவனம் வழங்கிய தொகை 700 கோடி அதைபிரித்தால் தலா பாதிக்கப்பட்டவர்களுக்கு 12,500 ரூபாய் கிடைக்கும். இதற்கே கால்நூற்றாண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. 
இந்த விபத்திலிருந்து இந்தியா எந்த பாடத்தையும் படித்ததாக தெரியவில்லை தற்போது நமது அரசாங்கம் மக்கள் எதிர்ப்பையும் மீறி அமெரிகாவிடம் போடவுள்ள 3,50,000 கோடி மதிப்பிலான அனுசக்தி ஒப்பந்தத்தில் அனுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் காப்பீடு தொகை 2,785 கோடி மட்டுமே. அதிலும் 500 கோடியை மட்டுமே சம்பந்தபட்ட கம்பெனி கொடுக்கும் மீதி தொகையை நமது அரசாங்கம் தான் கொடுக்க வேண்டும். 
சரி, உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் வாருங்கள் "இந்தியா என் தாய் நாடு, இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர், ஆன்டர்சன் போன்ற அமெரிக்கர்களும் இதில் அடக்கம். வெறும் 25 ஆயிரம் இந்தியர்களை கொலைசெய்த குற்றத்திற்காக நமது சகோதரரை தண்டிக்க அனுமதியோம்" வாழ்க பாரதம்.


4 comments

  1. kalil Says:
  2. அருமை தோழரே ,
    இந்தியா ஒரு வெட்கம் கெட்ட தேசம் என்பதனை மறுபடியும் நிருபித்து உள்ளது இந்த தீர்ப்பு . இன்னும் எத்தனையோ வெட்கம் கெட்ட செயல்களை மறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.பணம் தேடி அமெரிக்க கால் நக்கி அலையும் இந்த அரசியல் மிருகங்கள் இதனை ஆதரித்து கொண்டு இருக்கிறார்கள் .

    இதற்கு முடிவு தான் என்ன?

    சுயநலம் இல்லா பொதுநலம் விரும்பும் ஒரு தலைவர் .

    அது நிசம் ஆகுமோ ? கனவாகி போகுமோ ...

    நன்றி
    கலீல்

     
  3. அன்பு ரமேஷ் !

    போபால் கயவர்கள் குறித்து இணைய உலகில் இதுவரை நான் படித்தவற்றுள் ஆகச் சிறப்பான கட்டுரை உங்களுடையது ...

    தங்கள் வரிகள் என் முன்னால் விரிகின்றன ....

    "மாற்றம் வரும் என்று நினைத்து ஏதும் செய்யாமல் இருப்பது மாற்றத்தை தாமதப்படுத்தவே உதவும், மாற்றம் நடந்திட உன் அசைவில் முதலிம் மாற்றம் வேண்டும் நண்பனே! என்ன செய்வதாய் உத்தேசம்?"

     
  4. "".பணம் தேடி அமெரிக்க கால் நக்கி அலையும் இந்த அரசியல் மிருகங்கள் இதனை ஆதரித்து கொண்டு இருக்கிறார்கள்""

    KaLiL.... உங்கள் கோபம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !

     
  5. பிரியமுள்ள நியோ தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark