மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


தமிழக முதல்வர் கருணாநிதியை 9.5.2010 மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் ஆகியோருடன் ஆலய நிலங்களில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சென்று சந்தித்தனர். இச்சந்திப்பின்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோயில் நிலங்களில் குடியிருப்போர் பிரச்சனைகள் சம்பந்தமாக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்து, ஆலய நிலங்களில் குடியிருப்போரின் வாடகையை குறைக்கக் கோரியும், முன்தேதியிட்டு வாடகை செலுத்த வேண்டு மென்று தீர்மானித்ததை ரத்து செய்யக்கோரியும் வலி யுறுத்தப்பட்டது. விபரங்களைக் கேட்டறிந்த தமிழக முதல்வர், கோரிக்கைகளை பரிசீலிப்பது சம்பந்தமாக துணைக் குழு அமைப்பது குறித்தும், அக்குழுவின் அறிக்கையை அரசுபெறும் வரை குடியிருப்போர் யாரையும் வெளியேற்றாமல் இருப்பது குறித்தும் ஆலேசித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்களிடம் தெரிவித்தார். கோயில் நிலங்களை குடியிருப்பவர்களிடம் சொந்தமாக ஒப்படைக்க வேண்டும் என்றுகூட அவர்கள் கேட்கவில்லை. அப்படி கேட்பது ஒன்று தவறில்ல. எனினும் வாடகையை குறைக்கக் கோரியும், முன்தேதியிட்டு வாடகை செலுத்த வேண்டு மென்று தீர்மானித்ததை ரத்து செய்யக்கோரியுமே அவர்கள் சந்தித்தனர் உடன் ஆலைய நிலங்கள் அய்யோ போகிறதே என பாரதிய ஜனதா கட்சி ஒப்பாரி வைக்க துவங்கிவிட்டது.

கோயில் நிலங்களைத் தானமாக தருவதற்கு அரசுக்கு உரிமை இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கைவிட்டுள்ளார். கோயில்களின் வளர்ச்சிக்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும் உதவும் வகையில் தர்ம சிந்தனை உள்ள பலர் கோயில்களுக்கு தங்கள் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை வழங்கினர். இப்போதும் வழங்கி வருகின்றனர். அத்தகைய சொத்துகளைப் பாதுகாத்து, அவை வழங்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமை. ஆனால் அந்தக் கடமையை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுவது போல், ஆலய சொத்துகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. சமூக சிந்தனையோ, ஆன்மிக சிந்தனையோ இல்லாதவர்களின் கைகளில் இன்று கோயில் நிர்வாகங்கள் உள்ளன. இதனால் கோயில் நிலங்களில் குடியிருப்போர் பலர், அதற்கான குறைந்தபட்ச வாடகையைக் கூட தர மறுக்கின்றனர். மேலும், இப்போது அந்த ஆலய சொத்துகளை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை எப்படியாவது தமிழக அரசை ஏற்க வைத்துவிட முடியும் என்பது போல கோயில் நிலங்களில் குடியிருப்போரின் நடவடிக்கைகள் உள்ளன. அவர்களின் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் உள்ளன.

கோயில் நிலங்களை குடியிருப்போருக்கு தர வேண்டும் என்ற அர்த்தமற்ற கோரிக்கையை வலியுறுத்த இடதுசாரி கட்சித் தலைவர்கள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இப்பிரச்னை குறித்து ஆராய ஒரு குழு அமைக்கவும், குழுவின் அறிக்கை வரும் வரை குடியிருப்போரை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி உறுதி அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி இவ்வாறு கூறியது உண்மைதானா என்பதை தமிழக அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். கோயில் நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் அல்ல. அரசுக்கு சொந்தமானதும் அல்ல. அவை கோயிலுக்குச் சொந்தமான பட்டா நிலங்கள். கோயில் நிலங்களைப் பாதுகாப்பது மட்டுமே அரசின் வேலை. அதை விற்கவோ, தானமாக அளிக்கவோ அரசுக்கு உரிமை இல்லை. இதை கோயில் நிலங்களில் குடியிருப்போரும், தமிழக அரசும் உணர வேண்டும். எனவே, இப்பிரச்னைக்காக அரசு குழு அமைப்பது தேவையற்றது. இது, கோயில் சொத்துகளை தவறாகப் பயன்படுத்த அரசே உதவுவதாக ஆகிவிடும். இந்த நியாயமற்ற கோரிக்கைக்கு அரசு துணை போகக் கூடாது.

இதுதான் அவரது அறிக்கை. கோயில் நிலங்களை குடியிருப்போருக்கு தர வேண்டும் என்ற அர்த்தமற்ற கோரிக்கையை வலியுறுத்த இடதுசாரி கட்சித் தலைவர்கள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துள்ளனர் என்று பொய்யயை சொன்னது மட்டுமல்ல பிரசனையையும் திசைதிருப்புகிறார். அப்படியே கேட்டாலும் அது அர்த்தமற்ற கோரிக்கையா?

ஆலையங்களுக்கு சொந்தமான நிலங்கள் இவர்கள் சொன்னது போல கோயில்களின் வளர்ச்சிக்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும் உதவும் வகையில் தர்ம சிந்தனை உள்ள பலர் கோயில்களுக்கு தங்கள் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை வழங்கினர் என்பது உண்மையா? அப்படிதான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலஙகள் கிடைத்தாதா? அரசு அதிகாரத்தால், வன்முறையால், அடக்குமுறையால் பெறப்பட்டது என்று வரலாறு கூறுவது உண்மையில்லையா? ஆடும் திலைலையம்பலவனுக்கும், ஆரூரானுக்கும் அப்படிதான் நிலங்கள் குவிந்ததா? மடங்களுக்கும் மடாதிபதிகளுக்கும் அன்பாகத்தான் நிலங்கள் வழங்கப்பட்டதா? காஞ்சி சங்கரன் போன்ற கிரிமினல்கள் கொலைகார ரூபம் எடுத்தது ஏன்? மக்கள் நிலங்களை கோயில்களுக்கு ஒட்டுமொத்தமாய் அள்ளிக்கொடுத்த சோழர்கள் ஆட்சியின் வரலாறு பொன். ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல நடிகின்றனறா?

சோழர் காலத்தில் கோயிலுக்கு உரிமையாக இருந்த திருவொற்றியூர் மற்றும் சில ஊர்களில் பல வரிகளுக்கு விலக்குதரப்படிருந்தது. கோவிலின் வரி வருவாயை உயர்த்த எண்ணிய மூன்றாம் ராசராசன் தனது ஏழாம் ஆட்சியாண்டில் (கி.பி 1225) வெட்டி, புடவை முதல், திரைகாசு, ஆசுவிகள் காசு, குடுகாசு, இனவரிகாசு, கார்த்திகை காசு, வெளிச்சின்னம், வெட்டிகாசு, சிறுபாடி காவல், கங்காணி காசு, குற்றதண்டம், பட்டிதண்டம் போன்ற பலவரிகளையும் உவச்சர், நெசவாளர், எண்ணெய் ஆட்டுவோர் போன்றோர் செலுத்த வேண்டிய வரிகளையும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்து அவை கோவிலுக்கு சேர வேண்டும் என்று ஆனையிடப்பட்டது திருவொற்றியூரில் பதியப்பட்டுள்ளது. இப்படி மக்கள் உழைப்பு சுரண்டப்படது மட்டுமல்ல. நிலங்களும் அதிகாரத்தால் வளைக்கப்பட்டது. மே.து.ராசுகுமார் எழுதிய "சோழர் காலநிலவுடமை பின்புலத்தில் கோயில் பொருளியல்" என்ற புத்தகம் ஆதாரத்துடன் இந்த அதிகார கொள்ளையை அம்மபல்படுத்துகிறது.

"பரகேசரிவர்மன் என்று கூறும் சோழ மன்னனின் 13ஆம் ஆட்சியாண்டு விருதாசலக் கல்வெட்டு திருமுதுகுன்றத்தில் (விருதாசலம்) இருந்த சூரியதேவன் கோவிலுக்கு நெற்குப்பையில் இருந்த குடிமக்கள் புன்செய் நிலத்தை கொடையளித்தார்கள்"' என்று கூறுகிறது. கோயிலுக்கு நிலம் கிடைத்தப்பின்னர் அந்த நிலம் நன்செய் நிலமாக மாறியது. எப்படியெனில் இந்த நிலத்துக்கு நீர் வள வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் மக்களால் பயன்படுத்த முடியவில்லை. தண்ணீர் கோயில் கட்டுப்பாட்டில் இருந்தது. சாதாரன மகளுக்கு நீர் வழங்க ஆலைய நிர்வாகிகளான பிராமணர்களும், வேளாளர்களும் தயாரில்லை. நிலம் கோவிலுக்கு எழுதிவாங்கப்பட்டதும் அந்த நிலம் விளையும் நிலமாக மாற்றப்படது. ஆக தண்ணீர் கொடுக்காமல் சதிசெய்து பெறப்பட நிலம் இது. இந்த ஒரு சான்று மட்டுமல்ல இன்னும் இருக்கிறது. ஆக்கூரில் இருக்கும் ராசராசனின் ஆறாம் ஆண்டு ஆட்சியாண்டுக் கல்வெட்டு, நிலம் கோயிலுக்கு வந்தவுடன் கோயிலுக்குரிய நீர் வள வாய்க்கால் வழியாக நீர் பெற்றதை கூறுகிறது. ஆக நீர் வள வாய்ப்புகள் யாவும் கோயில்களுடன் தொடர்புடையவர்களின் மேலாண்மையின் கீழ்தான் இருந்தன என்பதை தெரிவிக்கிறது. அதாவது வேளாளர், பிராமணர் போன்ற நிலவுடைமையாளர் பிடியில்தான் இருந்தன. ஆக தண்ணீர் என்ற கருவி மூலம் நிலங்களை பிடுங்கி உள்ளனர்.

வேளச்சேரியில் கிடைத்துள்ள முதலாம் ராசேந்திரனது 6ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1018), வேளச்சேரி கிராமத்தில் இருந்த பிராமணர் அல்லாதோர் நிலங்கள் யாவும் கட்டாயப்படுத்தப்பட்டுக் கோயிலுக்கு விற்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளது. இந்த கட்டாய படுத்தி நிலம் பிடுங்கும் வேலையை கிராமச் சபையோ, ஊர் அவையோ தன்னிச்சையாக செய்திருக்க முடியாது. ஆகவே, அரசின் அனுமதியுடன் இந்த நிலகொள்ளை நடந்திருக்ககூடும் என்பதே உண்மை.

கி.பி 1090 ஆம் அண்டு முதல் குலோத்துங்கனின் இருபதாம் ஆண்டு கூவம் கல்வெட்டு வேறு ஒரு செய்தியை தருகிறது. வீரராசேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி 1065) அக்கிலிப்பட்டன் என்பவனுக்கு நிலம் ஒன்று விற்கப்பட்டது. இந்த நிலம் தங்களுக்குறியது என மதுராந்தகநல்லூர், நரசிங்கமங்கலம் மற்றும் இரு ஊர்களைச் சேர்ந்த நான்கு சபைகள் உரிமை கொண்டாடின. நிலம் யாருக்கு உரியது என முடிவு செய்ய இயலவில்லை. வாங்கியவன் முழிக்க, சபையினர் கோயிலுக்கு சொந்தமாக்கலாம் என்று சொனதும் முதலாம் குலோத்துங்கனின் இருபதாம் ஆட்சியாண்டில் அந்த நிலம் கோயிலுக்கு உரித்தகப்படது.

ஆக தண்ணீரால். அதிகாரத்தால், பஞ்சாயத்தால் என பலரூபங்களில் நிலங்கள் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. மேற்கண்டவை சில உதாரணங்களே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் இது தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இதுபற்றி தேவையெனில் பின்பு விரிவாக பார்ப்போம்!

இது ஒருபுறம் இருக்க..

தமிழகத்தில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனை கிடையாது. மேலும் ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் குடும்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மிக அதிகமாக உள்ள அரசு புறம்போக்கு, தரிசு நிலங்கள் 50 லட்சம் ஏக்கரில் அரசு ஆணை 131 படி வீட்டுமனை வழங்க முடியாது. நீர்வழி புறம்போக்கு, நீர் நிலைபுறம்போக்கு, சாலை புறம்போக்கு நிலங் களில் வீட்டுமனை தர முடியாது. மலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு 1168 ஆணை படி வீட்டுமனை பட்டா வழங்க முடியாது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற சென்னை மாநகரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வீட்டுமனை தர முடியாது. கோவில், மடம், அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போருக்கே, சாகுபடி செய்வேருக்கே பட்டா தரமுடியாது என சட்டம் தடுக்கிறது. உபரி நிலங்களை நிலமற்றேருக்கு வழங்க சட்டரீதியான தடை உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசியல் சாசனம் 9வது அட்டவணைப்படி திருத்தம் நிறைவேற்றி வழங்க வேண்டும். 50 ஆண்டுகாலமாக இதனையும் திமுக அரசு செய்யவில்லை. நத்தம் புறம்போக்கு என்பது குடியிருப்பு பகுதிதான், இதில் பட்டா வழங்க எந்த சட்ட சிக்கலும் இல்லை. இருப்பினும் இதில் குடியிருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கே பட்டா தரவில்லை. மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் பட்டா வழங்க முடியாது என தடை ஆணை போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திமுக அரசு பட்டா தருவதாக கூறுவதெல்லாம் நில ஆக்கிரமிப்பாளர்களால் அதிஷ்ர்டவசமாக விட்டுப்போன வகைப் படுத்தப்பட்ட நிலங்களில்தான். களம், மந்தை, கள்ளாங்குத்து, பாட்டை போன்ற 14 வகைப்பட்ட புறம்போக்கு நிலங்களில் தான் வீட்டுமனை தரும் வாய்ப்பு உள்ளது. இது அரசு தேவைபோக மிக, மிக சொற்ப அளவே வீட்டுமனை தர முடியும். என்ன தான் 10 ஆண்டு குடியிருந்தது, 5 ஆண்டு என குறைந்தாலும், மேலும் குறைத்து 3 ஆண்டுகளாக கொண்டு வந்தாலும் 30 லட்சம் குடும்பங்களுக்கும் வீட்டுமனை தரும் வாய்ப்பு இல்லை. இந்த நிலைமையில் தான் முதலமைச்சர் கலைஞர் 6,47,848 வீட் டுமனைப்பட்டா கொடுத்ததாக கூறுகிறார். வீட்டுமனை கொடுத்த பல இடங்களில் பட்டா கொடுத்தார்கள். வீட்டுமனை காட்ட வில்லை. முன்பு கலைஞர் ஆட்சிகாலத்தில், காமராசர் ஆட்சி காலத்தில் கொடுத்த பட்டாக் களை மறுபடியும் கொடுத்துள்ளனர். பல இடங்களில் ஏரிகளில், குளங்களில் பட்டா வழங் கப்பட்டுள்ளது.

திமுக அரசு கிராம வாரியாக, பயனாளிகள் பெயருடன் பட்டா கொடுத்த விபர பட்டியலை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஒட்டி பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் அது யோகித்தையான நடவடிக்கையாகும் ஆனால் இதுவரை அந்த வேலை செய்யப்படவில்லை. சொற்ப வீட்டுமனை கொடுத்து விட்டு, லட்சக்கணக்கில் கொடுத்ததாக விளம்பரம் செய்கிறது; தம்பட்டம் அடிக்கிறது திமுக அரசு.

நிலங்களை மக்களுக்கு பிரித்துக்கொடுக்க ஆளும் ஆட்சியாளரகள் ஏன் தொடர்ந்து மறுக்கின்றனர். இது அவர்களது வர்க்கம் சார்ந்த நிலைபாடு என்வே உழைக்கும் வர்க்கம் இணிந்து போராடமல் தீர்வு கிடைக்காது

14 comments

  1. Anonymous Says:
  2. டேய் பருப்பு. அது என்ன பாரதிய 'சனதா'? அப்படிப் பாத்தா உன் பேரை ரமெசுன்னு இல்ல எழுதணும்? வெண்ணை.

     
  3. OOthari Says:
  4. I am not understanding your statments...I think you want the goverment occupy the lands of temple and give it to people who dont have place to live...Is that so?

    Why you are always referring the old proofs to make your more strong...

    I think you want the goverment should give following things as free of cost:
    1. House
    2. Power
    3. Even Salary (Without working)...

    You want the public will increase the population alone...

    Instead you ask the goverment for employment and earn everything from your salary

     
  5. பருப்பு மற்றும் வெண்ணை பொருட்களை விற்பணை செய்யும் மளிகை கடை உரிமையாளர் அணாணி அவர்களே பாரதிய சனதாவுக்காக கோபப்படாதீர்கள் தேவையெனில் பாரதிய ஜனதா என்றே அழைப்போம். சரியா. முடித்தால் சொந்த பெயருடன் தங்கள் வீரத்தை காட்டவும். நன்றி

     
  6. உதயா.. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அரசு நிலங்களை கொடுப்பது மக்களின் உரிமை என்பதே எனது வாதம்

     
  7. hariharan Says:
  8. மக்களின் நிலங்கள் கோயில் நிலங்களாக மாறியது மன்னராட்சி காலம். மக்களாட்சியிலாவது அது நிலமில்லா வீடில்லா மக்களுக்கு ஏன் சேரக்கூடாது, at least இந்துக்களுக்காகவது கொடுத்தால் பாஜக ஒத்துக்கொள்ளுமா?

     
  9. Anas Says:
  10. உதைய‌ ந‌ன்ப‌ரே ,,உண‌வு,உடை,உர‌ங்க‌ இட‌ம்.அகிய‌ மூன்ரும் ந‌ம‌து பிற‌ப்பு உரிமை . அதை யாருக்காக‌வும் நாங்க்ள் விட்டுக்கொடுக்க‌ மாட்டோம்...

     
  11. Anonymous Says:
  12. BJP is terrorist party.The party policy its against the relegion of christian,musilms. so that in this issue bjp policy is attitude should reflected and support of culprit policy following status against poor people..

     
  13. நண்பர் அரிகரன் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி....
    "நிலமில்லா வீடில்லா மக்களுக்கு ஏன் சேரக்கூடாது, at least இந்துக்களுக்காகவது கொடுத்தால் பாஜக ஒத்துக்கொள்ளுமா?" எண்ற உங்கள் கேள்வி சரிதான். ஆனால் எந்த இந்து மக்கள்? தலித்துகள் அதில் அடக்கமா என்பதும் முக்கிய கேள்வி அல்லவா?

     
  14. புரட்சியாளன் மற்றும் பூவை ஆகிய நண்பர்களுக்கு நன்றி

     
  15. Unknown Says:
  16. எந்த ஒரு விசயத்தையும் சரியான தீர்வு காண வேண்டும் எனில் அவை சார்ந்த வரலாற்று பூர்வமுடன் காண்பதே சரியானது அதைதான் தோழர் SGR செய்திருக்கிறார் .
    anonymous என்ற வார்த்தை ஆங்கில இல்லக்கியம் தோன்றிய காலம் தொட் டே பெயர் தெரியாது போன இலக்கியவாதிகளுக்கு பயன்படுத்தப்பட்டது .ஆனால் இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியில் அது எப்படி கீழ்த்தனமாக பயன்பட்டித்தபடுகிறது என்பதை ஆங்கில அறிஞர்கள் கண்டால் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு நிச்சயம் வருத்தபடுவார்கள்...

     
  17. koodai Says:
  18. தாங்கள் இவ்வளவு விரிவான வரலாற்று சான்றிதழைக் கொண்டு விரிவான விளக்கத்தை அளித்து நியாயத்தை எடுத்துவைத்தமைக்கு நன்றி!நன்றி!
    கோயில் நிலங்களில் குடியிருந்து வருவோரில் 99 % சதவீதம் பேர் ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அரசு தன்னிச்சையாக ஒரு சட்டத்தை இயற்றியது.அதனை நடைமுறைபடுத்தவில்லை.அதன் பின் வந்த அதி மு க அரசும் அதனை கண்டுகொள்ளவில்லை .திரும்பவும் பொறுப்பேற்ற திமுக அரசு வந்த உடனேயே அந்த சட்டத்தை நடைமுறைபடுத்த துவங்கியது.
    அறநிலையத்துறை வாடகைதாரருக்கு அனுப்பிய கடிதத்தில் பல லட்சங்கள் பாக்கி என்று மக்கள் மத்தியில் குண்டைத் தூக்கி போட்டது.
    எப்படிஎன்றால் சுமார் 60 ரூபாய் வாடகை கட்டுபவருக்கு 4000 ரூபாய் வாடகை நிர்ணயித்து கடந்த ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு நான்கு லட்சம் ,ஐந்து லட்சம் என வாடகை பாக்கி யாக நிர்ணயித்து குடியிருப்போரை மிரட்டிவருகிறது.
    உண்மையிலேயே அறநிலையத்துறை கோயில் மேம்பாட்டில் அக்கறை கொண்டு இதனை செயல் படுத்துகிறதா?இப்படியாக வரும் வசூலிக்கும் பணத்தை அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை கொள்ளையடிக்க போட்ட திட்டமா?
    தற்போது கோயில்களில் திருப்பணிகள் செய்வது யார்?
    விழாக்கள் நடத்துவது யார்?
    அனைத்தும் உபயதாரர்கள்தான்.
    அதிலும் குறிப்பாக அடிமனைகுடியிருப்போர்தான் .
    அப்படியிருக்கும்போது நியாயமான வாடகை நிர்ணயிக்காமல் கந்துவட்டி கும்பலைபோல் நடந்துகொள்வது ஏன்? நியாயமான விலைக்கு பட்டா கொடுத்தால் கூட கோயில்களுக்கு பலகோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.அதன்முலம் கோயிலுக்கு வேண்டிய பராமரிப்பு வேலைகளைச் செய்யலாம்.
    பல ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலவுசெய்து வீடு கட்டியோர்,பழுதுபார்த்தோர் இப்படி ஒரு நிலைமை வருமென்று தெரிந்திருந்தால் அந்தக் காசை புறநகர் பகுதியில் இடம் வாங்கிப் போட்டிருந்தால் தற்போது கோடிக்கணக்கில் மதிப்பாகியிருக்கலாம்.
    கோயில் நிலம் தானே,அறுபது நூறு வருடங்கள் இங்கே வாழ்ந்தாயிற்று இனிமேல் எங்கே செல்வது? என்று யோசனை செய்தவர்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனையா?
    தமிழக அரசே! அறநிலையத்துறையை கலைத்துவிடு.நாங்கள் கோயில்களை சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம்.
    கோயில் நிலமென்பது கடவுளே கோயில்களுக்கு கொடுத்த நிலமல்ல.நம்மைபோன்ற மக்கள் வாரிசு இல்லாதோர் கொடுத்த நிலம் தான்.
    சொந்த மண்ணில் மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் !அதன் பிறகு பக்கத்து நாட்டு மக்களை வாழவைக்கலாம்! http://kooodai.blogspot.com/2010/05/blog-post.html

     
  19. மதுசூதனன் தங்கள் கருத்துக்கு நன்றி

     
  20. கோடி தங்கள் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி

     
  21. Dear Rams Says:
  22. திரு ரமேஷ் அவர்களின் ஆழமான கருத்துக்களை வரவேற்கிறேன் ....

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark