மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

உலக மக்கள் வாழ்வியல் துன்பங்களில் அல்லலுற்று அலைந்த போது துன்பங்களுக்கு காரணம் ஏதென்று தெரியாமல் இருந்தனர். மதங்கள் இவற்றிற்கான காரணமென்று கடவுள்களை கைகாட்டின. இந்த துன்பங்கள் போன ஜென்மத்தின் பாவம் என்று இவ்வுலகில் இல்லாத இடத்தை சுட்டி நின்றன. வறுமையும், கொடுமையும் சகிக்க வேண்டிய சுமைகள் என்று போதனை செய்தன. ஆனால் உழைப்பவனின் உதிரம் பெருஞ் செல்வமாய் எங்கே சேருகின்றன என்பதை இந்த மதங்களும் மதபோதகர்களும் அறிவார்கள். ஆனால் அவர்கள் தங்களது வர்க்கத்தை சார்ந்தவர்கள் சுகமாய் வாழவே மதத்தின் பெயரால் மூடி மறைத்தனர்.
ஆனால் உழைப்பவனின் உரிமைகள் குறித்து பலர் கனவு கொண்டிருந்தனர். ஆனால் அதை எப்படி அடைவது, அல்லது எப்படி அவனது உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது குறித்து அவர்களால் விளக்க முடியவில்லை. ஆனால் உபரி என்ற வார்த்தையை அதன் அணிவேரை ஆராய்ச்சி செய்த முதல் மனிதன் காரல்மார்க்ஸ் மட்டுமே. குடும்பங்கள் தோன்றாத சமூக அமைப்பில் அதாவது புராதான பொது உடைமை சமூகத்தின் எச்சங்களை ஆராய துவங்கி, தனி சொத்து தோன்றிய அடிப்படையான உபரி எப்படி உழைக்கும் வர்க்கத்தின் உதிரத்தால் விளைகிறது என்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கினார்.
இன்று கணிணித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் உழைப்புச்சுரண்டல் நடந்துக்கொண்டே இருக்கிறது. கிராமங்கள் துவங்கி நகரங்கள், பெருநகரங்கள் என வீதிகள் முழுவதும் கொடிபோல படர்ந்துக்கொண்டே இருக்கிறது இந்த கொடுமை. எனவேதான் மார்க்ஸ் என்ற மாமனிதன் சொன்னார்.
உலக தொழிலாளர்களே ஒன்றுபடுகள்! இழப்பதற்கு எதுவுமில்லை அடிமை சங்கிலியை தவிர!
அவரது பிறந்த நாளில் உழைப்பவர்களின் உரிமைக்கு கரம் கொடுப்போம்!

3 comments

  1. kvijaysfi Says:
  2. nichayam kural kodupom thozhar..... nichiyam nam kural makkal jananayaga puratchiku vazhi vagukkum endra nambikkaiyodu... ondru paduvom.... poraduvom.... marxiyam vellattum... makkal jananayaga puratchi vellattum...

     
  3. நிச்சயமாய் உலகத் தொழிலாளர்கள் ஒன்று கூடி முதலாளிய ஆதிக்கச் சக்திகளின் கனவுகளை தகர்த்தெறிந்து சமத்துவமான உலகம் பிறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை......
    மார்க்ஸ் பற்றிய எனது பதிவையும் நேரமிருப்பின் பார்வையிடவும் ...

    காலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்
    http://spggobi.blogspot.com/2010/05/blog-post_05.html

     
  4. vijai, gopi thanks for your comments

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark