மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

நண்பர் திபக் வாசுதேவன் தனது "தமிழ்த்தென்றல்" (http://thamizhththendral.blogspot.com/) வலைதளத்தில் மெட்டி, ஒட்டியாணம், கொலுசு போன்றவைகள் அணிவது குறித்து அவருக்கு வந்த ஆங்கில  மின்னஞ்சலின் தமிழாக்கத்தை பதிவிட்டிருந்தார். அது அவருடைய கருத்தில்லை இரூப்பினும் மூடபழக்க வசக்கங்களுக்கு அறிவியல் சாயம் அடிப்பது சரியா என்ற நோக்கத்துடன் அவருக்கு அனுப்பிய பின்னுட்டத்துடன் உங்கள் விவாதத்திற்கு முன்வைக்கிறேன்.


முதலில் அந்த கருத்துக்கள்    
ஒட்டியானம் அணிவதன் நோக்கம்

ஒரு நண்பர் மூலம் ஆங்கிலத்தில் கிடைத்த மின்மடல் ஒன்றினை இங்கு தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொள்கின்றேன்.

ஒட்டியானம் என்பது வயிற்றினை சுற்றி அணியப்படும் ஒரு அணிகலனாகும். இப்போது இது அதிக அளவில் பயன்படுவதில்லை. இதன் பயன் பெரும் அளவில் தொப்பை விழுவதை/குண்டாவதை தடுக்கிறது.

பல இடங்களில் 'தொப்பை பெல்ட்' என்று குறு-விளம்பர நோட்டீஸ் பார்த்திருப்பீர்கள். இது ஒட்டியானத்திலிருந்து அவர்கள் ஆராய்ந்து கொண்டு வந்தது தான்.



கொலுசு அணிவதன் நோக்கம்

ஒரு நண்பர் மூலம் ஆங்கிலத்தில் கிடைத்த மின்மடல் ஒன்றினை இங்கு தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொள்கின்றேன்.

கொலுசு அல்லது சலங்கை அணிந்து கொள்வாதால் நடக்கும் போதும் பிற வேலைகள் செய்யும் போது ஏற்படும் அதிர்வுகள் மூலம் நம் உடல் சக்தி வெளியில் செல்லாமல் மீண்டும் உடலுக்குள்ளேயே செலுத்துவதர்க்கு உதவுகிறது


மெட்டி அணிவதன் நோக்கம்

நம் நாட்டுப் பெண்கள் திருமணம் ஆன பின் கால்களில் மெட்டி அணிந்திருப்பார். இந்த மெட்டி திருமணமாகி விட்டது என்ற அடையாளச் சான்று மட்டும் அல்ல. அதன் நோக்கம் இன்னும் சில அறிவியல் சார்பாகவும் இருக்கின்றன.

மெட்டிகள் முக்கால்வாசி வெள்ளியில் செய்யப்பட்டிருகுக்கும்; இரண்டு-மூன்று வளையங்கள் அதில் இருக்கும்; கால் கட்டை விரலிலிருந்து இரண்டாம் விரலில் அணிவது வழக்கம். இதன் நோக்கம் மாத விடாய் சரியான நேரத்தில் இருக்க வேண்டும் என்றும் சுகப் பிரசவமாக இருக்க வேண்டும் என்பதுவே. இதற்கான காரணம், இரண்டாம் விரலில் உள்ள நரம்புகள் கருப்பப் பை வழியாக இருதயத்தினை அடைகின்றது. நடக்கும் போதும் மற்றும் பல வேலைகள் செய்யும் போது ஏற்படும் உரசல்களால் ரத்த ஓட்டம் சரியாகிறது; வெள்ளி நல்ல கடத்தியாக இருப்பதால் பூமியிலிருந்து தாது பொருட்கள் மூலம் சத்துகள் உடலின் பாகங்களுக்கு கிடைக்கின்றன.

ஒரு நண்பர் மூலம் ஆங்கிலத்தில் கிடைத்த மின்மடல் ஒன்றினை இங்கு தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொள்கின்றேன்


அன்புள்ள்  திபக் வணக்கம் . தங்களது பதவி குறித்து சிலகருத்துகளை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஆங்கில மின் அஞ்சலை தாங்கம் மொழியாக்கம் செய்துள்ளிர்கள். அது உங்கள் கருத்துகளாய் இல்லாதது நிம்மதி.
கொலுசு,  மெட்டி, ஒட்டியானம் அணிவதன் நோக்கம் என தாங்கள் எழுதியுள்ளது முழுமையான பதிவல்ல என நினைக்கிறேன். இதற்கு ஒரு வரலாற்று காரணம் இருக்கிறது. அந்த காரணம் சமூக பின்னணி கொண்டது. 
ஆதிகால மனிதன் கணங்களாக வழ்ந்த போது தாய்வழி வழிசமூகமே நிலைபெற்று இருந்தது. விவசாயத்தை கண்டுபிடித்ததும், சமூகத்தை வழிநடத்தியதும் பெண்களே! குழந்தையின் அடையாளம் தாய்வழிபட்டதே! அதன் பின்னால் பின்பு பெண் அடிமையானால். கடுமையான அடக்குமுறையால் அடிமையாக்கப்பட்டால், வேட்டையில் பழகிய ஆண்கள் பெண்களை வேட்டையாட துவங்கினர். தந்தை வழி சமூகமாக அறியப்பட்டது. இதன் காரணம் சமூகத் தளத்தில் மிகவும் முக்கியமானது. மக்கள் கூட்டம் அதிகமானதால் எழுந்த உபரி உற்பத்தியும் அதனால் எழுந்த சொத்தும் புதிய சிந்தனைகளை விதைத்தது.
அதாவது கிடைத்த சொத்தை தனது குடும்பம், தனது இரத்த உறவுகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அல்லது சிந்தனை வந்தது. எனவே ஆண் தக்கென ஒரு மனைவி வேண்டும் என்ற விருப்பம் கொண்டான். அதுவரை ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக பழக்கம் இல்லாத காரணத்தல் பெண்கள் அதை ஏற்கவில்லை. கடுமையான குழப்பம் நிலவியது. போராட்டங்கள் நடந்தது.
இதன் விளைவு, தனக்கான ஒரு பெண்னை தேர்ந்தெடுத்த் ஆண் அவளை அடங்கிப்போகச் சொன்னான். அவள் அடங்க மறுதால். அவளை வன்முறை துணையுடன் இருப்பிடத்தில் அடைத்து வைத்து அவள் தப்பி ஓடமல் இருக்க கழுத்தில், கைகளில், கால்களில், இடுப்பில் கணமான இரும்பு சங்கிலிகள் பூட்டப்பட்டது.
ஓடமுடியாமல் கட்டுபடுத்தப்பட்டால். இது பல்லாண்டுகாலம் நீடித்தது. இதனுடன் அச்சம், நாணம், மடம், பயிற்பு என்பவைகள் கற்பிதம் செய்யப்பட்டது. கற்பு சார்ந்த போதனைகள் உருவாக்கப்பட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது பெண்கள் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டது. ( இது ஆண்களுக்கல்ல.. )அவள் தொடர்ந்து உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் கட்டுப்படுத்தப்பட்டதால் மீறுவது குறையத்துவங்கியது. பின்பு கணமான இரும்பு சங்கிலிகளில் அடர்த்தி குறைக்கப்பட்டது. பின் அது செப்பு என்றானது. அதன்பின் அது தங்க வடிவம் கொண்டு இன்று தாலியாய், வளையலாய், அட்டிகையாய், ஒட்டியானமாய், கொலுசாய் பரிணமித்து இருக்கிறது. ஆக இந்த அலங்கர பொருட்கள் எல்லாம் பெண்களின் அடிமைச்சின்னம்.
நமது இளைய தலைமுறை தங்களது திருமணத்தில் தாலியை மறுப்பது, சாதிமறுப்பு திருமணம் செய்வது, நகைகளை அணிய நமது துணையை வலியுறுத்தாமல் இருப்பது, நாமும் அணியாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். காலகாலமாய் ஆண் சமூகம் பெண்களுக்கு இழைத்த அநீதிகளை களைய நம்மால் ஆன செயலாய் இதனைச்செய்வோம்.

11 comments

  1. Anonymous Says:
  2. varungala sudanthira(anaithilum) samuthayam uruvakka namum munvaravendum.

     
  3. உங்களது இந்த வரலாற்று மேற்கோளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?

     
  4. Anonymous Says:
  5. nanparea... unmaiyin mathipu ungal varigalil arigirean... nandri...

     
  6. SUMAN Says:
  7. உங்களில் சிலருக்கு பகுத்தறிவு என்ற நோய் (?)பரவியுள்ளது. அது உண்மையான பகுத்தறிவாக இருந்தால் மகிழ்ச்சி ..

    ஆனால் சமயம் கூறும் அனைத்துமே மூடப்பழக்கங்கள் என்று கூறுவதை விடுத்து உண்மையான பகுத்தறிவுடன் ஆராய்ந்து எழுதுங்கள்.

     
  8. www.bogy.in Says:
  9. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

     
  10. Anas Says:
  11. nice

     
  12. Unknown Says:
  13. comrade your last article was good and this article shows the nature of history allways pull back and lie thought are allways came front and rule the general mind of the people.
    your article broke that concepts and shows the truth of human generation in the histrocial views.red salute for your works...

     
  14. பின்னூட்டம் செய்த பகத், அணாணி, முருகன், புரட்சியாளன், மதுசூதனன் அணைவருக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டம் ஊக்கப்படுத்துகிறது.

     
  15. பின்னூட்டம் செய்த பா. வேல்முருகணுக்கு நன்றி. தாங்கள் இப்படிபட்ட விபரஙக்ளை தெரிந்துக்கொள்ள ராகுல்ஜி புத்தகங்களை படிக்கவும்.

     
  16. பின்னூட்டம் செய்த சுமனுக்கு நன்றி.
    "உங்களில் சிலருக்கு பகுத்தறிவு என்ற நோய் (?)பரவியுள்ளது. அது உண்மையான பகுத்தறிவாக இருந்தால் மகிழ்ச்சி .." என எழுதியதுக்கு நன்றி."ஆனால் சமயம் கூறும் அனைத்துமே மூடப்பழக்கங்கள் என்று கூறுவதை விடுத்து உண்மையான பகுத்தறிவுடன் ஆராய்ந்து எழுதுங்கள்." என்று எழுதியுள்ளீர்கள் சமயங்கள் சார்ந்த முற்போக்கு விசயங்கள் இருப்பதாக எனகு தெரியவில்லை தெரிந்தால் தாங்கள் எழுதுவது நலம்

     
  17. guna Says:
  18. உங்களது இந்த வரலாற்று மேற்கோளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark