மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

மத்திய அரசாங்கம் தனது மத்திய துறை முலம் எம்ப்ளாயிமென்ட் நியுஸ் என்ற பத்திரிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் இந்திய அரசுத்துறைகளில் மற்றும் பல அரசுசார நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் குறித்து தகவல்களும் , தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்படுகிறது. எட்டு ரூபாய் விலையில் ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் இந்த பத்திரிகை வெளிவருகிறது.  இந்த பத்திரிக்கையை தமிழில் வெளியிட்டால் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்.
தமிழை செம்மொழியாக மாற்றியது தாங்கள் தான் என்று மார்தட்டும் கட்சி மத்திய அரசில் அங்கம் வகிப்பதால் இதனை எளிதில் செய்ய முடியும் . செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நிலையில் இந்த பனி மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். பலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது   தமிழில் பல வகையான புதுமைகளை செய்து பார்க்க  வெறும் பேச்சுக்கள் விர உரைகள் மட்டும் போதாது. அந்த மொழி ஆக்கப்பூர்வமான வேலைகளை சமுகத்தில் செய்திட வேண்டும் எனவே இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமான இந்த பணியை மத்திய மாநில அரசுகள் செய்திட அனைவரும் குரல் கொடுப்போம். தமிசகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருக்கிற 62 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டிய கலைஞர் அரசு சமிபத்தில் அரசானை 170 ௦மூலம் ஒய்வு பெற்றவர்களுக்கு வேலை என அநியாயம் செய்துள்ளது. எனவே தமிழில் வேலைவாய்ப்பு செய்திகளை கொடுக்கும் என்று நம்ப முடியாது எனவே அனைவரும் குரல் கொடுத்தால்தான் இது நடக்கும்.

3 comments

  1. இந்தப் பரதேசிகள் ஹிந்தியில் தேர்வுகளை நடத்துவதை நிறுத்தினாலே பெரிய விஷயம் .

     
  2. நல்ல கருத்து.
    இந்த கோரிக்கையை வென்றெடுக்க தாங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

     
  3. நண்பர்கள் மகேந்திரன் எட்டப்பராசன் மற்றும்
    சீ.பிரபாகரன் தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி..
    இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்பவும்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark