மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



சேதுசமுத்திரத்திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வெள் ளியன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் இந்த உண்ணாவிரத போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

சேதுக்கால்வாய்த் திட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இடதுசாரிகள் ஆத ரவுடன் நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டது. பெரும் பான்மையான பணிகள் முடிந்த சூழலில் இன்னும் 300 சதுரமீட்டர் தூரமே மீதம் உள்ள நிலையில், பிற்போக்கு சக்திகளின் தலையீட்டாலும், தங்களுடைய ஆட்சியில் இத்திட் டத்தை நிறைவேற்ற ஒப்புக் கொண்ட பாஜக இத்திட்டத்தை எதிர்த்து மதரீதியாக பிரச்சனையை உருவாக்கியதாலும் காங்கிரஸ் ஆட்சி யாளர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி உள்ளனர். திட்ட ஒதுக்கீட்டில் முழுத் தொகையுமான 2400 கோடி ரூபாயை செலவு செய்து முடித்துவிட்டு, திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறை வேறுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாற்று வழித்தடத்தில் இத்திட்டத்தை அம லாக்க ஒரு புதிய கமிஷனை அமைத்துள்ளது. இது திட்டத்தை மேலும் தாமதப்படுத்தவே உதவும்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமலாக்கக்கோரி 1998இல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 2000ஆம் ஆண்டு நவம் பர் 28-ல் தில்லியில் நாடா ளுமன்றம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. 2008இல் தமிழகத்தில் மூன்று முனைகளிலிருந்து 3000 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12 வெள்ளியன்று புதுதில்லியில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தமிழகம் முழுவது மிருந்து ஏராளமான இளம் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதுதில்லியில் குவிந்தனர்.

போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிதிசசெயலாளர் நூருல் ஹூடா, வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் இந்திய மாணவர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் ஜ.செல்வா உள்ளிட்டோர் உரையாற்றினர். உண்ணா விரதத்தை பிருந்தாகாரத் துவக்கிவைத்தார். சித்தாராம் எச்சூரி  முடித்து வைத்தார்.



சேதுக் கால்வாய் திட்டம் : திமுக நிர்ப்பந்திக்காதது ஏன்?
உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கி வைத்து பிருந்தா காரத் பேசினார்.

“சேது சமுத்திரத் திட்டத்திற்காக இதுவரை 2400 கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் செலவு செய்திருக்கிறார்கள். இதன்காரணமாக ஒப்பந்தக்காரர்கள் ஏராளமாக பயன் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அத்திட்டத்தின் பயன், மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குச் சென்றடைய வேண்டிய சமயத்தில் இத்திட்டத்தை முழுமைப்படுத்தி நிறை வேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்து வைத்திருக்கிறார்கள்? மத்திய அரசை யும் குறிப்பாக திமுக-வையும் இது குறித்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்
 பாஜகவும், இந்து மதவெறி அமைப்புகள் சிலவும் அனுமான் கட்டிய ராமர் பாலம் அங்கே இருப்பதாகவும் அதற்கு ஆபத்து வந்துவிடும் என்றும் அறிவியல் பார்வையற்று கூறியதை அடுத்து, ஆட்சியாளர்களும் திட்டத் தைக் கிடப்பில் போட்டு விட்டார்கள் 
சேது சமுத்திரத் திட்டத்தில் காங்கிரசின் நிலை என்ன? திமுக-வின் நிலை என்ன? தமிழகத்தின் கடற்கரையோரம் உள்ள சுமார் 13 துறைமுகங்கள் வளர்ச்சியடைந்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலையளிக்கக்கூடிய இத்திட்டத்தை மதவெறி சக்திகள் தங்கள் சொந்த லாபத்திற்காக திசைதிருப்பும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின் றன. இதற்கு காங்கிரசும் திமுகவும் எப் படித் துணை போகலாம்
இப்பிரச்சனையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையில் எடுத் திருப்பதற்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து நாடாளுமன் றத்திற்கு வெளியே, ஆட்சியாளர்களின் கவனத்தை நீங்கள் திருப்பியிருக்கிறீர்கள். வரவிருக்கும் நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன் றத்திற்குள்ளே நாங்களும் இப்பிரச் சனையைக் கிளப்புவோம் என்றும் அவர் கூறினார் 



இளைஞர்களின் வேலைவாய்ப்பை   மூட நம்பிக்கைக்கு பலி கொடுப்பதா? சீத்தாராம் யெச்சூரி சாடல் 
உண்ணா விரதப் போராட்டத்தை முடித்து வைத்து சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

சென்ற பட்ஜெட்டில் சேது சமுத்திரத்திட்டப் பணிகளுக்காக மத்திய அரசு2400 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. ஆனால் அதன்பிறகு என்ன நடந்தது? ஆதம் பாலம், “ராமர் கட்டிய பாலம்” என்று கூறி அதனை இடிக்கக்கூடாது என்று பாஜக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அரசும் பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் திட்டத்தைத் தொடர முடியாது என்று கூறிவிட்டது. அரசின் சார்பில் ஆஜராகும் அட்டர்னி ஜெனரல் மூலமாக வழக்கைத் துரிதமாக நடத்தி முடித்து, திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, நாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்துத் துறைமுகங்களும் சுறுசுறுப்படைந்துவிடும். தமிழகத்து இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இந்திய இளைஞர்களில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பினை அளித்திடும். இத்திட்டம் நிறை வேறாவிடில் கொழும்புத் துறைமுகம் மட்டுமே வளம் கொழிக்கும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ராமர் பாலம் கட்டினார் என்பதெல்லாம் வெறும் புராணக் கதை. வரலாறுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அரசு வரலாற்று ரீதியாக, அறிவியல்பூர்வமாகச் செயல்படு வதை விடுத்து, புராணக் கதைகளை ஏற்றுச் செயல்படக்கூடாது. நாட்டின் கோடிக்கணக்கான இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதைப்பற்றிக் கவலைப்படாமல், அதை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது.

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இந்தியாவில் கடல் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பயன்பெறும். சர்வதேச அளவில் இந்தியா முக்கியத்துவம் பெறும். இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட நீங்கள் நடத்திடும் போராட் டத்தை வரவிருக்கும் நாடா ளுமன்றக் கூட்டத்தொட ரில் நாங்களும் நடத்திடுவோம்.

இவ்வாறு பேசிய சீத்தாராம் யெச்சூரி, பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தா

1 Responses to தில்லியில் திரண்ட 500 இளைஞர்கள்

  1. R. Saravanan Says:
  2. hi good effort made by DYFI

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark