மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!





அன்பு நிறைந்த இணயதள வாசக நண்பர்களே!
இணைய தளத்தை ஆரோக்கியமான அரசியல் விவாதங்களுக்கு பயன் படுத்தும் முறை கொஞ்கம் கொஞ்சா£க சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் தங்களை அக்மார்க் புரட்சியாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே முத்திரை குத்திக்கொள்ளும் சில அனானிகளும், த.நா.மா.லெ.க மற்றும் ம.க.இ.க வகையராக்களுகம் அவர்களை யாராவது விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்பவர்களை தரம் தாழ்ந்து கேவலமான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தி ஒன்று அவர்களை அடுத்த முறை விவாதம் நடத்த விடாமல் செய்வது அதையும் மீறி நின்றால் அடுத்தது அந்த பக்கம் தலை வைத்து படுக்காமல் ஓடிவிடுவது இந்த இரண்டு நிலையையே எடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் வர்க்க எதிரி மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான்.
நந்திகிராமை முடிந்த அளவு அவதூறு செய்ய பயன் படுத்தினார்கள் அதை எதிர்த்து சந்திப்பு, விடுதலை போன்ற வளைத்தளங்களில் பதிலடி கிடைத்தவுடன் அடுத்து காரப்பட்டு விவகாரத்தை கையில் எடுத்து "பொய் பொய்யை தவிர வேறில்லை" என்ற அடிப்படையில் எழுதினார்கள். அதற்கும் சரியான பதிலடி கொடுத்த பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது லால்கர் பிரச்சனை. மாவோயிஸ்டுகள் அத்வானி மற்றும் மம்தாவுடன் கொஞ்சி குலாவுவதை இவர்களால் கண்டிக்க முடியாது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாட நடந்த போராட்டத்தில் அவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தியதாய் பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் உலாவ விடுகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி போராட்டம் நடந்தப்பட்டது. அதில் ஆறுமுகசாமி உள்ளிட்டு ப.ம.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ தோழர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதற்கு பின் அங்கு நடந்த பல போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் கலந்துக்கொண்டன. ஆனால் வெட்டி பரபரப்பும் வார்த்தை ஜாலங்களையும் முதலீடாக மற்றி, காவல் துறையுடன் மோதுவது போல சீன் போடும் இவர்கள் தற்போது நடராஜர் ஆலயத்தை விடுவிக்க ஆகப்பெறும் வேலையை தாங்கள் மட்டுமே செய்ததாக மார்தட்டுகின்றனர்.
ஒரு போராட்டட்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்களை அங்கீகாரம் செய்யத்தெரியாத அல்லது அவர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. தங்களது கட்சியின் பெயரை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டு அதாவது த.நா.மா.லெ.க என்ற பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பல்வேறு பெயர்களில் உலாவந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது கட்சி திட்டம் எப்படி காலாவதியானது என்று வரி வரியாக சந்திப்பு கிழித்து காயப்போட்ட பிறகு அதற்கும் பதில் சொல்ல தயாரில்லை. ஆனால் இணையதளத்தில் வேலை செய்யும் பல அப்பாவி இளைஞர்களை தங்களது போலி புரட்சிகர வசனங்களால் மூளை சலவை செய்து, வளைதளத்தில் எழுதியே புரட்சியை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்கின்றனர்.
கருத்துக்களை தூர எரிந்துவிட்டு வார்த்தைகளை தேடித்தேடி பொறுக்கி அவர்கள் எழுதுவது அவர்களுக்கே உரிய கலை. (தலைப்பு இப்போது புரிந்திருக்கும்) உதாரணமாக: "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று மாமேதை லெனின் சொன்னதை பயன்படுத்தி மற்ற கட்சிகளை வீராவேசத்துடன் திட்டுவார்கள். ஆனால் "தேவையேற்படும் போது அதையும் கம்யுனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்" என்று அவரின் அடுத்த வரியை மறைத்து அல்லது மறந்து விடுவர். (இப்படி இவர்களது "கட்டிங் பீஸ்" பல உள்ளது தேவையெனில் எழுதுவோம்) ஒரு சம்பவம் குறித்து அவர்களின் பொய் எப்படி பட்ட அடிபடையற்றது என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ளது, வேண்டு மென்றால் இதற்கு பிண்ணூட்டம் அவர்கள் அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அவர்கள எத்துனை அய்யோக்கியதனமான பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை நிருபனம் செய்யலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சேர்ப்பதற்கென்றே அவர்கள் ஒரு பிரிவை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவை சார்ந்த வர்க, வெகுஜன இயக்கங்கள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டங்களில் துண்டு பிரசுரத்துடன் நுழைவது வேண்டுமென்றே கலகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேப்போல் தனிநபர்களை தாக்காமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. அவர்கள் எழுத்து நடையின் லட்சனம் அதுதான். கேட்டால் பெரிய லட்சிய கொம்பர்கள் போல கதையளப்பார்கள். எத்தனை பேர் அவர்களுக்கு பிண்ணூட்டம் அனுப்பினாலும் அத்தனை பிண்ணூட்டங்களையும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு நபர்கள் அனுப்புவதாக கற்பனை செய்துக்கொண்டு தனிநபர் தாக்குதலில் இறங்குவார்கள். அவர்களின் நரகல் எழுத்து நடையை படிப்பவர்கள் உடன் கண்டு பிடித்து விடலாம். அவர்கள் அனானி போலவும், புனைப்பெயரிலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எதிர்த்து எழுதுபவர்கள் அவர்களது முகவரி மற்றும் ஜாதகத்தை வெளியிட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். என்னே ஒரு ஜனநாயக மான்பு. இப்போது இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் எத்துனை நரகல் நடை பதில் வரும் என்று பாருங்கள். ஒன்னு அப்படி வரும் இல்லை எனில் இதை படித்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொய்கள் ஆதாரத்துடன் அடுத்தடுத்து நிருபிக்கப் படும் என்று மேலே உள்ளது அல்லவா.
இன்னும் கூட பல அப்பாவி நண்பர்கள் அவர்களை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். த.நா.மா.லெ.க வினர் புரட்சிகரமான வார்த்தைகளை பொறுக்குவார்களே அல்லாது எதையும் அவர்களால் களத்தில் நின்று செய்யமுடியாது. இலங்ககை பிரச்சினையில் அவர்கள் ஒருப்பக்கம் தமிழ் என்று கதைப்பார்கள், மறுபக்கம் புலிகளின் ஆதரவு முகம் காட்டுவார்கள், முத்துக்குமரனை வீரனாக சித்தரிப்பார்கள், மற்றொறுபுறம் அந்த அப்பாவி இளைஞனை கேவலப்படுத்துவார்கள், இலங்கை பிரச்சினையில் அவர்கள் நிலை என்ன என்று கண்டு பிடிப்பத்ற்குள் உங்கள் தலைமுடி பாதியாகிவிடும். இவர்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுவார்கள் இணையதள வாசகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கூட்டத்தை அடையாள படுத்தவே இந்த பதிவு இங்கு செய்யப்படுகிறது.

9 comments

  1. தீபா Says:
  2. அவர்களிடம் நிறைய கேள்வி கேட்ட அனுபவம் எனக்கும் உண்டு.
    பதிலுக்கு என்னையோ அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ வசை பாடினார்களே தவிர வேறெந்த உருப்படியான விவாதத்திற்கும் வந்ததில்லை அவர்கள்.
    இவர்கள் சரியில்லை அவர்கள் சரியில்லை, இது சரியில்லை அது சரியில்லை என்பார்கள். அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் அல்லது என்ன திட்டம் வைத்திருக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கும் விடை இல்லை.
    பாராளுமன்ற ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக குப்பை என்று சொன்னார்கள். அதற்கான மாற்று இருக்கிறதா என்று கேட்டால் நம்மை திட்டி தீர்ப்பார்கள்.

    http://soccpiml.blogspot.com

     
  3. Anonymous Says:
  4. hi,
    interesting to see your response to the "net dynamics" of the current le(f)t movement. sorry to say you also chose to speak the way the people you seem to accuse. wasn't your point to be derogatory? well, just another outburst, i guess! you are and they too are most welcome, for emotional outbursts, but, but where is the point? a point that would make a difference at the end of the day?

     
  5. Anonymous Says:
  6. yes , this article pictures true

     
  7. ///வார்த்தை பொருக்கிகளான இன்டர்நெட் புரட்சியாளர்களும் அவரதம் எழுத்து நடையும்.....///

    உங்களது இந்த எழுத்து நடையும் வார்த்தைக் கோர்வைகளும் மாபெரும் இலக்கியத்தை ஒத்த வடிவத்தில் இருக்கிறது பாராட்டுக்கள்(!)

    இக்கட்டுரையினை எழுதியது நண்பர் ரமேஷ்தானா என்று சந்தேகம் வருகிறது.

    ரமேஷ்தான் இதனை எழுதிப் பதிந்தார் என்பது உண்மையானால், இதுபோன்ற அரைவேக்காடெல்லாம் எப்படி மாநில பொறுப்பாளராக வரமுடிந்தது என்ற ஐயமும் கூடவே எழுகிறது.

    நண்பர் ரமேஷ், எனது சந்தேகம் சரியானதா? எனது இந்த எழுத்து நடை கொஞ்சம் சுமாராக இருக்கிறதா?

    இது தங்களது வலைதளத்தில் பிரசுரிக்கப்படுகின்ற அளவுக்கு தரமாக இருக்குமா என்று தெரியவில்லை. எனக்கு உங்கள் அளவுக்கு டீசண்ட்டாக(!) எழுத வராது என்ன செய்ய...

     
  8. Unknown Says:
  9. comrade ramesh good article.........
    so called revolutionaries good for nothing people this (mkelk)their only agenda of whole life is abusing CPI(M)recently cpm and all the left parties mobilized more then 80,000 people against price rise......... the only genuine communist party is cpm coz cpm is the only party mobilizing people for people we r not a computer revolutionaries..... like mao said once paper tigers......

    care on comrade ramesh

     
  10. ///////தீபா Says:
    August 15, 2009 11:21 AM
    அவர்களிடம் நிறைய கேள்வி கேட்ட அனுபவம் எனக்கும் உண்டு.
    பதிலுக்கு என்னையோ அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ வசை பாடினார்களே தவிர வேறெந்த உருப்படியான விவாதத்திற்கும் வந்ததில்லை அவர்கள்.
    இவர்கள் சரியில்லை அவர்கள் சரியில்லை, இது சரியில்லை அது சரியில்லை என்பார்கள். அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் அல்லது என்ன திட்டம் வைத்திருக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கும் விடை இல்லை.
    பாராளுமன்ற ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக குப்பை என்று சொன்னார்கள். அதற்கான மாற்று இருக்கிறதா என்று கேட்டால் நம்மை திட்டி தீர்ப்பார்கள்./////////

    தோழர் தீபா அவர்களுக்கு,

    மேற்கண்ட உங்களது தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அரசியல் விவாதங்களில் பங்கேற்று இறுதிவரை விவாதிப்பதில் எமது தோழர்கள் எப்போதும் பின்வாங்குவதில்லை. இருப்பினும் உங்களது கேள்விகளை நீங்கள் இந்த தளத்திலேயே பதிந்து விவாதிக்கலாம் வாருங்கள், பதியுங்கள். இல்லையென்றால் கீழ்காணும் எனது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொண்டு உங்களது கருத்துக்களை முன்வைக்கலாம். கருத்தைக் கருத்தாக எதிர்கொள்வதில் அரசியல் காழ்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல உங்கள் தரப்பிலிருந்து வேறு தோழர்கள் விவாதிக்க விரும்பினாலும் தாராளமாக உங்களது கருத்துக்களைப் பதியலாம். தொடர்ந்து விவாதிப்போம்.

    இவற்றைச் செய்யாமல் மீண்டும் மீண்டும் நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பொய்பிரச்சாரத்தை நடத்துவது நாகரீகமாக இருக்காது என வலியுறுத்திக் கொள்கிறேன். நன்றி!

    தோழமையுடன்.
    சுரேஷ்.

     
  11. ///////////leninv87 Says:
    March 17, 2010 2:29 PM
    comrade ramesh good article.........
    so called revolutionaries good for nothing people this (mkelk)their only agenda of whole life is abusing CPI(M)recently cpm and all the left parties mobilized more then 80,000 people against price rise......... the only genuine communist party is cpm coz cpm is the only party mobilizing people for people we r not a computer revolutionaries..... like mao said once paper tigers......

    care on comrade ramesh///////////

    நண்பர் லெனின்,

    விமர்சனம் என்பது யாரும் யார்மீது செய்துவருவதுதான். எமது அமைப்பினர் சி.பி.எம். கட்சியை விமர்சிப்பது உள்நோக்கமுடையது என்று நீங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும். உமது கட்சி ஏனைய கட்சிகளை விமர்சிப்பதே கிடையாதா? ஜெயலலிதாவோடு கூட்டணி கட்டிக்கொண்டிருக்கும் போது கருணாநிதியையும் அவருடன் இருக்கும் போது இந்த அம்மையாரையும் உயர்க்குரலெடுத்து நீங்கள் விமர்சிப்பதில்லையா? ஆக விமர்சிப்பதை யாரும் விரும்பாமலில்லை. அத்தகைய விமர்சனங்கள் தம்மை நோக்கித் திரும்பும்போது அதனைச் சகித்துக்கொள்ள முடியாமல் அரற்றுவதும் நிகழ்கிறது. அதுதான் நண்பர் ரமேஷ் பாபுவின் இப்பதிவிலும் மேற்கண்ட உமது பின்னூட்டத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.

    எமது விமர்சனம் எதற்காவது பதில் சொல்லிய பழக்கம் உங்களுக்கோ அல்லது நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கோ இருக்குமானால் எனது பின்னூட்டங்களை மறுத்துப் பதிவிடுங்கள், தொடர்ந்து விவாதிக்க முயன்றுபாருங்கள்.

    சி.பி.எம். கட்சி 80,000 பேரை திரட்டியது குறித்து பெருமை கொள்கிறீர்கள். போகட்டும், பா.ஜ.க. கூடத்தான் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிட இதனினும் ஏராளமான கூட்டத்தைக் கூட்டினார்கள். கூட்டம் கூடுவதைக் கொண்டுதான் ஒரு கட்சியின் தரத்தை மதிப்பிட வேண்டுமென்றால் உமது கட்சிக்கு கடைசி இடம்தான் கிடைக்கும், என்பதை நினைவில் கொள்க. கூட்டம் கூட்டுவதை மதிப்பிடுவதைவிட அக்கூட்டம் திரட்டப்பட்ட நோக்கத்திலிருந்துதான் எதையும் மதிப்பிட வேண்டும். வர்க்க அரசியலைச் சொல்லி கூட்டத்தை கூட்டி எதிரி வர்க்கத்தின் காலடியில் சமர்ப்பிக்கின்ற அரசியல் மக்கள் நல அரசியலாக இருக்க முடியாது.

    இறுதியாக, நண்பர் ரமேஷும் நீங்களும் எம்மை கம்ப்யூட்டர் புரட்சியாளர்கள் என்று வசைபாடுவது குறித்து சில வரிகள் பதியவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

    விமர்சனம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்கொண்டு அதற்கு உரிய விளக்கத்தை அளிக்கவேண்டியது பிரதான அரசியல் கடமையாகக் கருதுகிறேன். இணையத்தில் விவாதிப்பதற்கான வாய்ப்புகள் கடந்த காலங்களில் கிடையாது. இப்போது அந்த வாய்ப்பு அறிவியல் முன்னேற்றத்தின் வாயிலாக நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, இதனைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக விமர்சிப்பது தவறில்லை என்பது எனது கருத்து. முகம் தெரியாத யாருடனும் எந்த நேரத்திலும் சமூகரீதியாக உரையாடுவதைத் தவறு என்று குறிப்பிடுபவர்கள்தான் மேற்கண்ட வசைகளுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இணையத்தில் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் வசைபாடலுக்கு உட்படுத்துகிறீர்களே, அத்தகைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் இருட்டடிப்பு செய்து விலகுவதை எப்படி மதிப்பிடுவீர்கள்? முதலில் விவாதிக்க திறந்த மனத்துடன் முயன்று பார்த்துவிட்டு பிறகு உமது வசைகளைத் தொகுத்து வெளியிடுங்கள். அதில்தான் நேர்மை அடங்கியிருக்கிறது.

    தோழமையுடன்,
    து.சுரேஷ்

     
  12. அன்புள்ள நண்பர் சுரேஷ் அவர்களுக்கு வணக்கம். இது உங்களின் சொந்த பெயரா என தெரியாது. இருக்கட்டும் சுரேஷ் என வைத்துக்கொண்டே விவாதிக்கலாம். பெயரையும் முகத்தையும் மறைத்தே உமது தோழர்கள் எழுதுவாதால் இந்த சந்தேகம்.

    1. “””””அரசியல் விவாதங்களில் பங்கேற்று இறுதிவரை விவாதிப்பதில் எமது தோழர்கள் எப்போதும் பின்வாங்குவதில்லை.””””” என்று நீங்கள் எழுதுவது எந்த அரசியல் என தெரியவில்லை. உமது தோழர்கள் என்மீதான மூன்றாம்தர வசையாடல் பின்னூட்டங்களை தாங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். தனிமனித தாக்குதல்களில் மிகவும் கீழ்த்தனமான தாக்குதல்களால் அவர்களுடன் விவாதிப்பதை எந்த மனித பண்புள்ளவனும் செய்ய மறுப்பான். நன்பரே எப்போதும் உமது தோழர்கள் அரசியல் விவாத்தை அரசியல் விவாதமாக நடத்தியது கிடையாது. தனிமனிதனை கோபப்படுத்தி கீழ்தரமான விமர்சனங்களையே முன்வைப்பர். உங்களுக்கு ஆதாரம் வேண்டுமானால் அவர்களையே கேட்டுவாங்கி படியுங்கள்.

    2. ””””””இறுதியாக, நண்பர் ரமேஷும் நீங்களும் எம்மை கம்ப்யூட்டர் புரட்சியாளர்கள் என்று வசைபாடுவது குறித்து சில வரிகள் பதியவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்””””””” உங்கள் கருத்து சரிதான் விளக்கம் கொடுப்பது உங்கள் கடமை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் தாங்கள் ஒன்றை நினைவில் வையுங்கள். உமது தோழர்கள் உண்மை பெயரை மறைத்து அனானிகளாக, அதிதீவிர புரட்சியாளரகளாக போடும் பின்னூட்டங்கள்
    அவர்கள் மீது எந்த வித மரியாதையையும் ஏற்படுத்தாது. ஒரு சிலரே பல பெயர்களில் தாங்கள் பெரிய கூட்டம் இருப்பது போல எழுதுவதை முதலில் நிறுத்தச்சொல்லுங்கள்.
    3. “’’’’’’’’’’’’’’சி.பி.எம். கட்சி 80,000 பேரை திரட்டியது குறித்து பெருமை கொள்கிறீர்கள். போகட்டும், பா.ஜ.க. கூடத்தான் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிட இதனினும் ஏராளமான கூட்டத்தைக் கூட்டினார்கள். கூட்டம் கூடுவதைக் கொண்டுதான் ஒரு கட்சியின் தரத்தை மதிப்பிட வேண்டுமென்றால் உமது கட்சிக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்””””””””””””””” மிகவும் சிறப்பான ஒப்பீடு என நினைத்து எழுதி உள்ளீர்கள் நண்பரே! பாவம் அது உங்கள் குற்றமல்ல உங்கள் தோழர்கள் மம்தாயிஸ்டுகளாக மாறினால் ஒப்பீடு இப்படிதான் போகும். மேற்குவங்கத்தில் கடந்த ஐந்து மாதஙக்ளில் உமது மம்தாயிஸ்டு தோழர்கள் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை 257 ஆகும். இறந்தவரகள் “”அழித்தொழிக்கப்பட்ட வேண்டிய” நிலபிரபுக்கள் அல்ல. சாதாரண கூலித்தொழிலாளிகள். இவர்கள் செய்த பாவம் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததும், ஆதரவாளர்களாக இருந்ததும்தான். மாவோயிஸம் இதை செய்யாது. மம்தாயிசம்தான் இதை செய்யும். செய்துக்கொண்டிருக்கிறது. மேற்குவங்க அரசு நிலங்களை உடைத்து மக்கள் க்கையில் கொடுத்தால் கோபப்பட்ட நிலமுதலைகள், முதலாளிகள் மம்தாவின் பின்னால் அணிதிரல்கின்றனர். ஆனால் மாவோயிஸ்டுகள் ஏன் அப்படி?
    விவாதிப்போம் நண்பா. நன்றி

     
  13. Unknown Says:
  14. Weapons are an important factor in war, but not the decisive factor; it is people, not things."Mao'

    now India's Maoist believe only weapons not masses again Mao said once "Let a hundred flowers bloom, let a hundred schools of thought contend." we have believe in this quotes so we welcome all the thoughts not like Maoist. killing innocent people in the of revolution because their supporters of cpim. mr. suresh i believe u have to think rationally coz when u compare CPIM and BJP that time onwards u lost it.... we welcome the debates and criticism but we will oppose the allegation... Mr. suresh if u think u r left supporter are sympathizer there are so many criteria s are there. but criticizing CPIM is not only criteria or the criteria... plz think.... i'll not ask sorry to u not calling comrade coz when u compare CPIM 80,000 people mobilization against price rise with BJP.... sorry u lost it....

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark