மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

லிபரான் கமிஷன்

Posted by நட்புடன் ரமேஷ் Saturday, July 18, 2009 ,

இந்திய நாட்டின் ஆறாத ரணமான பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்து நடந்த மதவெறியாட்டமும் கடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. அன்று இந்து மதவெறியர்கள் விதைத்த கலவர விதை இன்று பெரும்பான்மை சிறுபான்மை என இருபக்க மதவெறியையும் விருட்சமாய் வளர வைத்துள்ளன.

அத்வானி ர(த்)த யாத்திரை நடத்தி தேசத்தை பிளவுபடுத்தியபோது நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி வேடிக்கை பார்த்தது. அதன் விளைவுகளை அவர்கள் மட்டுமல்ல இந்த தேசமும் சந்தித்தது. அத்தகைய விளைவுகள் தொடராமல் இருக்க மதவெறியர்களை மக்கள் மத்தியில் அம்பலபடுத்த ஒரு நல்ல வாய்ப்பு இப்போது வந்துள்ளது.

மிகவும் திட்டமிட்டு, பல ஆண்டுகளாக தயாரிப்பு செய்து, பயிற்சியளித்து, மதவெறியை மூலதனமாக்கி அம்மசூதி இடிக்கப்பட்டது. மாநில அரசுக்கும் பல உயர் அதிகாரிகளுக்கும் அதில் தொடர்பு இருந்தது. காக்கி சட்டை காவிசட்டையாக பெருமளவில் இந்தியாவில் மாற்றப்பட்ட முதல் சம்பவம் அது.

பாஜக தலைவர்கள் சுற்றி நின்று உற்சாகப்படுத்தி இடிக்கச் சொன்னதும், அந்த வரலாற்றுச் சின்னம் உடைந்து நொறுங்கியபோது கட்டிபிடித்து, கைதட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்தியதும் தொலைகாட்சி பத்திரிக்கைகளில் வந்தது என இவைகள் அனைவருக்கும் தெரிந்த ரகசியம். அந்த இடிப்பு வழக்கில் யாரும் கைது செய்யப்படாததே இதற்கு உதாரணம்.

இச்சம்பவம் நடந்து 10 தினங்கள் கழித்து இதை விசாரிக்க லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. நமது நாட்டில் அமைக்கப்படும் விசாரனை கமிஷன்கள் இருக்கும் பொதுவான நம்பிக்கையை காப்பாற்றும் வகையில்மிகவும் “விரைவாக” கமிஷனின் முடிவு வந்துள்ளது. 1993 மார்ச் மாதம் 16ம் தேதி வந்திருக்க வேண்டிய இந்த அறிக்கை 48 முறை நீடிப்பு பெற்று, 17 ஆண்டுகளில் 8 கோடி ரூயாய் செலவு செய்து, 400 முறை கமிஷன் கூடி இப்போது தனது அறிக்கையை தந்துள்ளது.

மும்பை கலவரத்தை விசாரித்த கிருஷ்னா கமிட்டி கமிஷன் போல பல கமிஷன் முடிவுகள் கண்டுகொள்ளபடாமல் அலைகழித்தது போல இதுவும் நிகழ்ந்து விடகூடாது. நீதி என்பது காலத்தில் கிடைத்தால்தான் அது நீதியாக இருக்கமுடியும். காலம் தாழ்த்தி வழக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதியே.எனவே மத்திய அரசு லிபரான் கமிஷன் அறிக்கையை உடனே நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அதில் உள்ள விபரங்களை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதில் குற்றம் சாட்டபட்டவர்கள் மீது உறிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அறிக்கை கிடத்தும் காலம் தாழ்த்துவது இந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும். மதவாதிகளுடன் காங்கிரஸ் அரசு செய்துக்கொள்ளும் சமரசத்தின் விளைவாக இந்த நாடு ஏற்கனவே நிறப்ப ரத்தம் சிந்தியுள்ளது. தேசப்பிதா என்று அவர்களால் கொண்டாடப்பட்ட மகாத்மா காந்தியை படுகொலை செய்த ஆஎஸ்எஸ் அமைப்பின் மீதூ அன்று காங்கிரஸ் கடுமையான நடவடிக்கை எடுத்திறுக்கும் என்று சொன்னால் அதன் பின் நடந்த பல நிகழ்வுகளை தடுத்திருக்க முடியும்.

ஆனால் ஆட்சி என்ற ஒரு இலக்கிற்காக இவர்கள் இந்து மதவெறியர்களுடன் செய்த சமரசத்திற்கு இன்று வரை விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இன்று வெளிப்படையாக மதவெறியர்கள் ஆட்டம் போட முடிகிறதென்றால் அவர்களுக்கு தார்மீக பலத்தை உறுவாக்கியதில் தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ§க்கும் பங்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.ஒவ்வொரு முறையும் இந்த மதவெறியர்கள் தப்பித்த காரணத்தின் விளைவாக பிஜேபியால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆட்சியை பயன் படுத்தி கல்வி, வரலாறு, அதிகாரிகள், இராணுவத்தினர் என பல இடங்களில் மேலும் பலமாக அவர்களால் ஊடுறுவ முடிந்தது.

அதன் வெளிப்பாடுதான் மலேகாவ் குண்டு வெடிப்பில் இராணுவ அதிகாரிகளின் தொடர்பு. இன்னூம் எத்துனை ராணுவ அதிகாரிகள் ராணுவ சீருடைக்குள் காவி வண்ணம் பூசி இருக்கிறார்கள் என தெரியவில்லை. எனவே பாபர் மசூதி இடிப்பின் குற்றவாளிகளை, அவர்களது தொடர்புகளை, அவர்களாது நோக்கங்களை, அவர்களது எதிர்கால திட்டங்களை மக்களிடம் அம்பல படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இதை காங்கிரஸ் அரசு புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பது காலம் விதித்திருக்கும் பணி. ஆனால் எத்துனை முறை வாய்ப்பு கொடுத்தாலும் காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ளாது என்பதுதான் வரலாறு. மக்கள் போராட்டம் மட்டுமே இவர்களைப் பணிய வைக்கும்.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark