மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

  எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இந்த மண்ணில் வர்க்கம் இருக்கிறது. அதற்கு பக்கத்திலேயே சாதியும் இருக்கிறது. இங்கு காற்றுக்கும், பாசன கால்வாய்க்கும், விளையும் பூமிக்கும், கோவிலுக்கும், குளத்திற்கும், பள்ளி கட்டிடத்திற்கும், ஊர் பொது இடத்திற்கும், உண்ணும் உணவிற்கும், குடிக்கும் தண்ணீருக்கும், உடுத்தும் உடைக்கும், பேசும்மொழிக்கும், இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அரசுக்கும், அதன் சட்டத்திற்கும், நீதிக்கும், நீதிமன்றத்திற்கும், பிணத்திற்கும், மயானத்திற்கும், சாமிக்கும், பேய்க்கும் கூட சாதி இருக்கிறது.

இதற்கு சிறந்த உதாரணம், தமிழகத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை இருப்பதை அரசே ஒப்புக் கொண்டது. நாகரீகம் உயர்ந்த நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாட்டில்தான், ஆலயங்களில் நுழையத் தடை, கோயில் விழாக்களில் பாரபட்சம், டீக்கடைகளில் இரட்டை கிளாஸ் முறை, பெஞ்சுகளில் உட் கார முடியாமல், பொதுக்குழாய்களில், கிணறு களில் தண்ணீர் எடுக்க முடியாமல், குளங்க ளில் குளிக்க முடியாமல், பொதுப்பாதைகளில் நடக்கமுடியாமல், குடைபிடிக்க முடியாமல், செருப்பு போட முடியாமல், தோளில் துண்டு போடமுடியாமல், பொது மயானத்தை பயன் படுத்த முடியாமல், தனி மயானத்திற்கு பாதை மறுக்கப்பட்டு, சலூன்களில் முடிவெட்ட முடியாமல், துணிகளுக்கு இஸ்திரி போட முடியாமல், பிணக்குழி தோண்ட கட்டாயப் படுத்தப்படுவது, மலம் அள்ள கட்டாயப்படுத் தப்படுவது, சாவு சேதிச் சொல்ல கட்டாயப் படுத்தப்படுவது, தப்படிக்க கட்டாயப்படுத்தப் படுவது, செத்த விலங்குகளை அப்புறப்படுத்த கட்டாயப் படுத்தப்படுவது, தலித் பெரியவர் களை ஒருமையில் அழைப்பது, தலித் பெயரில் மரியாதை பகுதியை அழைக்காமல் விடுவது, தலித் பெண்களை பாலியல் பலாத் காரம் செய்வது, அவர்களை துன்புறுத்துவது, சாதியின் பெயரால் திட்டுவது, தலித் தரும் பணத்தை கையால் தொடாமல் இருப்பது, தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிமை மறுப்பது, உரிமையை நிலைநாட்டினால் படுகொலை செய்வது, தலித் பகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் தடுப்பது, பள்ளிக ளில் தலித் மாணவர்களை பாரபட்சமாக நடத் துவது, கிராம பொது சொத்துக்களை தலித்து கள் பயன்படுத்தாமல் தடுப்பது, தலித்துகளின் நிலங்களை அபகரித்து திருப்பித்தர மறுப்பது, பொது விநியோகம் - அரசு அலுவலகங்களை தலித் குடியிருப்பு பகுதியில் அமைக்க மறுப்பது, தலித் குடியிருப்புகளில் அடிப்படை வசதி களை செய்துதர மறுப்பது, தலித் மக்களிடம் காவல் துறையின் பாரபட்சம் என தொடர் கிறது.... 

இந்த கொடுமைகளிலிருந்து அம்மக்கள் வெளியேற, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக அந் தஸ்து பெற்றிட, அடிப்படையில் அவர்களுக்கு கல்வியும், வேலையும், நிலமும் அவசியமாகிறது. 

ஆனால் நடப்பதென்ன? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துவக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்டங்களும், அவைகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதிகளும் அம்மக்களுக்கு முழுமை யாய் செலவிடப்படாதது மட்டுமல்ல; அந்த தொகை பல மாநில அரசுகளால் திருப்பி அனுப்பப்படும் அவலமும் நடக்கிறது. இந்த பின்னணியில் மனிநேயமற்ற, லாபத்தை மட்டுமே குறிகோளாய்க் கொண்ட உலகமயம், வேலைவாய்ப்புகளை வெட்டிச்சுருக்குவதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விழுங்குவதும் மேலும் மேலும் தலித் மக்க ளையே பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. “பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 2002 - 2007 இந்தியாவில் வேலைசெய்வோரின் எண் ணிக்கையில் 35 மில்லியனாக அதிகரிக்கும் என்றும், 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை 2001-02 இல் 8.87 சதமாக இருந்த வேலை யின்மையின் விகிதம் 2004-05 இல் 9.11 சதமாக உயர்ந்திருக்கக் கூடும் எனக் கூறு கிறது. பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தின் இறுதியில் இது இன்னும் அதிகரிக்கக் கூடும், உலகமய பொருளாதாரக் கொள்கை யை நமது அரசுகள் அமுலாக்க துவங்கிய பிறகு பத்து லட்சம் மத்திய அரசு பணிகள் ஒழித்துக்கட்டப்பட்டிருப்பதாக மதிப்பிடப் படுகிறது. அதாவது ஏழு லட்சம் பணியிடங் கள் ரத்து செய்யப்பட்டன, நான்கு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே போய்விட் டன. இதன் விளைவு, இடஒதுக்கீட்டில் தலித் இளைஞர்களுக்கு கொஞ்சம் நஞ்சம் கிடைத்த வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டுள் ளது. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கிடையாது. அப்படி கேட்டால் தகுதி, திறமை குறித்து விவாதம் மீண்டும் நடத்தப்படுகிறது.

இந்த பின்னணியில், இருக்கும் வேலை யை பாதுகாக்க போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது, அதே நேரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இளைஞர்களை திரட்ட வேண்டிய கடமையும் உள்ளது. அப் படி அனைத்து தரப்பு இளைஞர்களையும் திரட்ட, முன் நிபந்தனையாக தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நிற்கிறது. ஒன்றுபட்ட போராட்டங்கள் நடக்காமல் இருக்க சாதி, மத, இன, மொழி அடையாளங்களை தூண்டி விட்டு இளைஞர்களை பிளவுபடுத்தும் சக்தி களுக்கு எதிரான போரட்டம், வேலைக்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். 

தமிழகத்தின் இன்றைய நிலை என்ன? கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வேலைதேடி பல பகுதிகளுக்கு அலைகின்றனர். வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரால், தங்கள் இருப்பிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப் படுகின்றனர். தங்கள் கைகளில் கிடைத்த துண்டு துக்காணி நிலத் தை விவசாயம் செய்ய முடியாமல் இழந் துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இருபது சதமான விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக, தரிசு நிலங்களாக மாறி யுள்ளது. தொழிற் பேட்டைக்கு என்று அர சாங்கம் கொடுத்த மானிய விலை, நிலங்களை கோடி கோடியாய் கொள்ளையடிக்க பிளாட் போட்டு விற்கும் ஒசூர் தொழிற்பேட்டை கொள்ளையர்களை அரசு எதுவும் செய்யாது. தொழில் நடக்கவில்லை எனில் எந்த மக்க ளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டதோ அந்த மக்களுக்கு அவர்களின் நிலங்களை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற நியாயம், அரசின் அகராதியில் கிடையாது. தங்கள் வாழ்விடங்களை இழந்து, அரசு கொடுத்த சொற்ப தொகையில் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாத மக்கள் எங்கெங்கு அலை கிறார்களோ?

கிராமங்களிலிருந்து வேலைதேடி செல்லும் இளைய சமூகத்திற்கு வேலை கொடுக்கும் இடமாக தமிழகத்தில் திருப்பூர் முதலிடத்தை பிடிக்கிறது. இங்கு மூன்றரை லட்சம் தொழிலாளர்களில் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களை சார்ந்தவர்கள். அங்கும் தற்சமயம் வேலை மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லாத அத்தக் கூலிகளாக அலைகின்றனர். வேலையில் லாக் கூட்டம் அதிகமாக அதிகமாக, முதலாளிகள் கொடுக்கும் கூலியின் அளவு குறைகிறது, நியாயம் கேட்டால் உடன் வெளி யேற்றப்படுவது உறுதி.. 

அடுக்குமாடி கட்டிடங்களும், உயர உயர மாய் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது. நகரங்களுக்கு வெளியே நகரங்களை இணைக்க பிரம்மாண்டமான புறவழிச்சாலைகள் வழுக்கிச் செல்கின்றன. கண்களை விரியச்செய்யும் பாலங்கள் மிரள வைக்கின்றன. ஆம் இந்தியா நகர்மயமாகி வருகிறது. கவனிக்கவும் நகர்மயமாகி வருகிறது ஆனால் தொழில்மய மாகவில்லை. தொழில்வளர்ச்சி இல்லாத நகர்மயம், சேரிகளையும், சமூக குற்றங்களை யும் அதிகரிக்கின்றது. உலகமயம், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித் மக்கள் மீது இரண்டு வகையில் இரக்கமற்ற தாக்குதலை தொடுக்கிறது. ஒன்று- அவர்களை நிலங்களிலிருந்து வெளியேற்றுகிறது. இரண்டு- கிடைக் கும் வேலைவாய்ப்புகளை விட்டு அறவே துடைத்தெறிகிறது. காலங்காலமாய் ஒடுக்கப் பட்ட, ஊருக்கு வெளியே நிறுத்தி வைக்கப் பட்ட அம்மக்களின் வாழ்க்கை குறித்து எவ்வித அக்கறையுமற்ற ஆட்சியாளர்களை எதிர்த்து தமிழக இளைஞர்கள் போராட்டக் களம் காணும் நிகழ்வுதான் பிப்ரவரி 18ம் தேதி வாலிபர் சங்கம் நடத்துகிற மறியல் போராட்டம்.

1 Responses to தீண்டாமைக்கு தீயிட.. கல்வியும், வேலையும் ஆயுதம்

  1. Anonymous Says:
  2. நண்பரே நீங்கள் கம்யூனிஸ்டுகள் என நினைக்கிறேன்

    நீங்கள் ஆளும் கேரளாவில இதனை அமுல்படுத்தி சாதியை ஒழித்து விட்டீர்களா ? ஒருவேளை இது மத்திய அரரசின் தவறான கொள்கை என்றால் 4 ஆண்டுகள் ஒன்றாக இருந்தீர்களே ... கலைஞர் தனது குடும்பநலனுக்காக அரசை மிரட்டும போது மக்களுக்காக இந்தப்பிரச்சினையில் அரசினை மிரட்டியிருக்கலாமே

    நீங்கள் வேலை கிடைத்துவிட்டால் இந்த சமூக அநீதி மாறி விடும் என்று சொல்கின்றீர்கள். உமா சஙகள் ஐஏஎஸ் தனது பேட்டி ஒன்றில் இந்த நம்பிக்கையை உடைத்து விட்டார். வேலைக்கான போராட்டம் என்பது ஒரு பொருளாதாரத்திற்கான பகுதிப் போராட்டம். அதனை அரசியல் திசைவழியில் சாதி ஒழிப்பிற்கு பயன்படுத்த நினைக்கின்றீர்கள். ஆனால் சாதி மத இன உணர்வுகளால் இவர்கள் பிரிந்து இருப்பதாக மதிப்பிடுகின்றீர்கள். இதனை மறந்து வேலை வேண்டும் என்பதற்காக ஒரு தலித் ம், அவரை ஒடுக்கும வாண்டையாரும் ஒன்றினைவது அதுவும் ஒரு வேலை என்பதற்காக மட்டுமே இணைவது சாத்தியமா. மேல்சாதிக் காரனின் வெறும் பொருளாதாரவாதம் அவனது இட ஒதுக்கீடு பற்றிய எரிச்சல் எல்லாம் அவனிடம் வெளிப்படாமலா இருக்கும். அப்போது என்ன செய்வது...

    சாதி ஒழிப்பு என்பது அரசு என்ற ஒரு ஒடுக்குமுறைக் கருவியில் பங்கு கொள்வதால் மாத்திரம் சிலரால் அச்சாதியின் பெரும்பான்மைக்கு சாத்தியமாகும் என்று எந்த அடிப்படையில் சொல்ல முடியும்..

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark