மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

உலகமய பொருளாதாரக் கொள்கைகளால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேம்பஸ் இண்டர்வியூக்கள் என்ற பெயரில் நல்ல பல வேலை வாய்ப்புகளை உயர்தட்டு இளைஞர்களுக்கு மட்டும் தேடிப்பிடித்து அளிக்கிற கொடுமை அரங்கேறு கிறது என்று வாலிபர் சங்க தலைவர் எம்.பி.ராஜேஷ் குற்றம்சாட்டினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான மாநில அரசியல் முகாம் மதுரையில் நடைபெற்றது.

முகாமில் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் எம்.பி. ராஜேஷ் உரையாற்றினார். அவர் பேசியதன் சில அம்சங்கள் வருமாறு:-

இந்திய மக்கள் தொகையில் 7 கோடிக்கும் அதிகமானோர் பழங்குடி யின மக்கள்; 17 கோடிக்கும் அதிகமா னோர் தாழ்த்தப்பட்ட மக்கள். மொத் தம் 24 கோடி மக்கள், கடுமையான சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர்.

விடுதலை பெற்று 62 ஆண்டுகளா கியும், இன்றும் நில சீர்திருத்தம் நடக்க வில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை கீழேயே கிடக்கிறது.

இன்றும் குறிப்பாக, 1991 காலகட் டத்தில் உலகமயக் கொள்கைகள் இந் தியாவில் அமலான பின்னர், தாழ்த்தப் பட்ட- பழங்குடியின மக்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இம்மக்களின் நல்வாழ்வுக்கு நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட எதையும் உருப்படியாக செய்யாத அரசுகளும், ஆளும் வர்க்கமும், சாதிக்கட்டமைப்பை, சாதிய ஒடுக்குமுறையை வலுவான கருவியாக, பிரித்தாளும் சூழ்ச்சிக்கான கருவியாக பயன்படுத்துகிறது; மக்கள் சமூகத்தை பிளவுபடுத்தியே வைத் திருக்கிறது.

இது, ஜனநாயக எண்ணங்களையும், இயக்கங்களையும் கட்டுவதற்குக் கூட பெரும் சவாலாக உள்ளது.

இதற்கு எதிரான போராட்டத்தை, தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களுக்கான சமூகப்போராட்டத்தை சமரசமின்றி நடத்துவதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உறுதியாக இருக்கிறது.

சாதிய ரீதியான அமைப்புகள் புற்றீசல் போல பெருகியுள்ளன. இவர் கள், இளைய தலைமுறையை சாதியரீதியாக துண்டாடமுனைகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சுகாதாரம் என்ற முழக்கத்தின் கீழ் அனைத்து பகுதி இளைஞர்களையும் அணி திரட்டுவதில் உறுதிபட செய லாற்றுகிறது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்களின் நலன் உறுதி செய்யப்பட, அனைத்துப் பகுதி இளைஞர் களையும் அணிதிரட்டி கூட்டாகப் போராடுகிறது.

இந்தப்போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

உலகமயக் கொள்கைகளின் விளைவாலும், உலகப்பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தாலும் ஏரா ளமானோரின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை யில் அரசுத்துறையில் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும்; தனி யார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறோம்.

வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு களை பொதுவாக வெளியிடாமல், வளாகத்தேர்வு என்ற பெயரில், சில உயர்தட்டு இளைஞர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்குவது சரியல்ல. அத்தகைய சில முயற்சிகளை கேரளத் தில், கோவையில், சென்னையில் வாலிபர் சங்கம் நேரடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறது.

இப்படிப்பட்ட நேரடி நடவடிக்கைகளில், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளிலும் வாலிபர் சங்கம் களமிறங்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில், சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநில செயலாளர் எஸ்.கண்ணன், பொரு ளாளர் எஸ்.முத்துக்கண்ணன் மற்றும் தலைவர்கள் இல.சண்முகசுந்தரம், எஸ்.பாலா, ஜா.நரசிம்மன், ஸ்டாலின், சங்கர், பாபு, எஸ்.லெனின், குணசுந்தரி, எம்.கண்ணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

5 comments

 1. Anonymous Says:
 2. வளாகத்தில் நேர்முகத் தேர்வு மூலம்
  வேலை சிலருக்காவது கிடைப்பது தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு கிடைக்கும்
  வாய்ப்புகளை தடுப்பவர்களை குண்டர்
  சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டும்.

   
 3. அதேபோல் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்குகூட தலித் மாணவர்களை அனுமதிப்பது இல்லை என்று சொல்லப்படுகிறது.

   
 4. Valaipookkal Says:
 5. Hi,

  We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

  Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Thanks

  Valaipookkal Team

   
 6. Reservation in Private company jobs, private schools, colleges must be brought. But no politicians are interested in this move because they will loose money.

  In Sun TV, Kalaignar TV 90% staff are brahmins.

  IN saravana stores 95% are Nadars, Not a single SC/ST staff.

   
 7. thanks all

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark