மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

சமூகப் பாதுகாப்பான வேலை, சமச்சீர் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், சகலவிதமான தீண்டாமைகளுக்கும் முடிவுகட்டுவது, அணுசக்தி உடன்பாட்டை கைவிடக் கோருவது என்ற ஐந்தம்ச கோரிக்கைகளுக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எறக்குறைய தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும், பஞ்சாயத்துகளிலும் 3000 கிலோமீட்டர் பயணித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 13ஆம் தேதி புறப்பட்ட சைக்கிள் பிரச்சாரம் கடந்த 2008 டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.


cycle strike

1980இல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை துவக்கிய போது அனைவருக்கும் வேலை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இன்றும் அந்த கோரிக்கை பொருந்தும் என்றாலும் இன்றையச் சூழலுக்கு ஏற்றவாறு அதை சொல்ல வேண்டி உள்ளது. அதனால் தான் வேலை வேண்டும் அது சமூகப் பாதுகாப்புடன் வேண்டும் என்று முழங்க வேண்டியுள்ளது.

புதுச்சேரியில் தனியார் நிதித்துறையில் மேலாளராகப் பணிபுரியும் நண்பர் ஒருவர் சொன்னார் “ பொருளாதார நெருக்கடி எங்கள் வேலைவாய்ப்பை பாதிக்காது என்று நம்பிக்கை ஊட்டுவதற்காக கம்பெனி அதிகாரி வந்து பேசினார். “உங்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடியால் பயம் வேண்டாம். யாரையும் வேலையைவிட்டு எடுக்க மாட்டோம், கூடுதலாக வேலையை செய்யுங்கள். அப்படி யாரையாவது வேலையைவிட்டு எடுப்பதாக இருந்தால் ஒருமாதம் முன்பே நோட்டிஸ் கொடுத்து பிறகுதான் வேலையிலிருந்து எடுப்போம் அதற்குள் நீங்கள் வேறு வேலையை தேடிக்கொள்ளலாம்’’ இதுதான் உலகின் முன்னணி நிதிநிறுவன கிளையின் லட்சணம்.

ஐந்தாயிரத்திலிருந்து, ஐம்பதாயிரம் வரை உங்கள் தகுதிக்கேற்ப கட்டினால் போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், ஒரு புது மாயா உலகம் காத்திருக்கிறது, நடிகைகளுடன் சிற்றுண்டி, புத்தாண்டு தினத்தை சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடும் நட்சத்திர ஓட்டல்களின் விளம்பரங்களை இந்த ஆண்டு நீங்கள் அதிகம் கண்டிருக்க முடியாது.

அதற்கு காரணம் இந்த கேளிக்கைகளில் அதிகம் கலந்துகொள்ளும் கணினித் துறையினர் எப்போது தனக்குள்ள வேலை காலியாகும் என்று தெரியாமல் நிம்மதி இழந்து தவிக்கும் போது கொண்டாட்டம் எப்படி முக்கியத்துவம் பெறும். நிதி நிறுவனங்களின், கணினித் துறையின் நிலையே இப்படி இருக்க சாதாரண வேலை செய்யும் மக்களின் நிலை என்னாவது.

பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி வெற்றி அடைந்த ஒபாமாவை போல அதையே காரணம் காட்டி அனைத்து துறையிலும் சலுகைகளை வெட்டி முதலாளிகள் லாபம் பார்க்கின்றனர். மாய கனவுகளை விதைத்த தேசம் இன்று சிதைந்திருப்பதை ஊடகங்கள் மூடி மறைத்தாலும் அந்த தேசத்தில் தினம் தினம் முதலாளிகளை பாதுகாக்க கொட்டி அழப்படும் தொகையில் ஒரு பங்காவது தங்களுக்கு கிடைக்காதா அதை வைத்து ஒருவருடம் வாழலாம் என்று ஏங்கும் மக்கள், நமது தெருமக்களைப் போல காட்சியளிப்பது உங்களுக்கு தெரிகிறதா? அதை விடுங்கள் சிங்காரச் சென்னை என்று தனக்கு பெயர் சூட்டிக்கொண்ட பெரு நகரத்தில் உழைப்பாளிகளின் நிலை என்ன? பளபளப்பான பாலங்களால் அலங்கரிக்கப்பட்ட நகரத்தில் அந்த பாலங்களை கட்டிய தொழிலாளிகள் யார்? எங்கிருந்து வந்தார்கள், எங்கு சென்றார்கள்? அவர்கள் வாழ்க்கை எப்படிபட்டது? அவர்கள் தமிழர்களா? வடபுலத்தவர்களா? எது குறித்தும் எந்த கேள்வியும் இல்லாமல் எப்படி அந்த பாலங்களை கடக்க முடிகிறது? கத்திப்பாராவில் உள்ள பிரமிக்கத்தக்க பாலத்தில் அதை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டு போன அந்த ஐந்து இளைஞர்களை உங்களுக்கு தெரியுமா? அவர்களின் குடும்பம் இப்போதுஎப்படி உள்ளது? அவர்களுக்கு ஏதாவது இழப்பீடு கிடைத்ததா? அந்த குடும்பங்களின் கண்ணீரை துடைக்க யாராவது மிச்சம் உள்ளார்களா? இன்றைய உலகமய சூழலில் எந்த வேலையும் இன்று சமூகப் பாதுகாப்புடன் இல்லை என்பது உறைக்கிறதா? சரி இது கிடக்கட்டும்! பெரு நகரம் எனில் இதையெல்லாம் கவனிக்க நேரம் கிடையாது.

கிராமங்களில் எவ்வித வேலை வாய்ப்பும் இல்லாமல் வேலத்தேடி நகரங்களை நோக்கி ஓடி வரும் மக்களை காக்க, வாழ்வியல் நெருக்கடியால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க, இடதுசாரிகள் போராடிக் கொண்டுவந்த நூறுநாள் வேலை உறுதி சட்டம் சரியாக அமலாகிறதா? இந்த மக்களுக்கான சட்டம், லஞ்ச லாவணயம் மிக்க சட்டமாய் மாறி உள்ளதே? இதை பாதுகாக்கக் கூட முடியத அரசை அம்பலப் படுத்துவதும், எதிர்த்து மக்களிடம் செல்வதும் இளைஞர்களின் கடமை என்பதால்தான் இந்த மூன்றாயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பிரச்சாரம்.

சமூகநீதி, அதை பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றவற்றை திட்டமிட்டு உருவாக்கிய கலகக்காரர், மனுவிரோதி, டாக்டர் அம்பேத்கர் இருந்தால் அவரை திருப்பாச்சி அருவாளால் வெட்டலாம், அவர் இல்லாத காரணத்தால் அவர் பெயரையாவது வெட்டலாம்? என்ற சாதி கொழுப்பு, சட்டம் படிக்கும் உயர்சாதி மாணவர்கள் பொதுபுத்திக்குள் நுழைந்தது தற்செயலான நிகழ்வா அல்லது பல்லாண்டுகாலம் மனுபுத்திரர்கள் பாதுகாக்கும் சாதிய சமூகத்தின் விளைவா என்ற கேள்வி சுவாசிக்கும் காற்றைப் போல அவசியமானது. இன்றும் தமிழகத்தில் நிலவிவரும் எழுபதுக்கும் மேற்பட்ட தீண்டாமை வடிவங்களை தலித்துகளின் சம்பந்தியான கலைஞர் அரசாங்கத்தால் ஒழிக்க முடியாதது வியப்பான செயல் அல்ல! ஏனெனில் அவரது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்தின் பெரும்பான்மை ஆதிக்க சாதிக்காரர்கள் என்பதிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.

ஜனநாயகம் பேசுகிற சுதந்திர நாட்டில் தீண்டாமைகளை அனுமதிப்பது இளைய சமூகத்திற்கு அவமானம் என்ற காரணத்தாலும், அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி,அனைவருக்கும் சுகாதாரம் என்ற கோரிக்கைகளில் “அனைவருக்கும்’’ என்ற பதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் இருந்தால்தான் அந்த வார்த்தைக்கு முழு அர்த்தம் கிடைக்கும் என்பதாலும் இந்த பிரச்சாரத்தில் தீண்டாமைக்கு எதிரான முழக்கம் பிரதானமாய் முன்வைக்கப்பட்டது.

ஒரே நாளில் இணைய தளத்தில் இருபத்தி ஐந்துலட்சம் மக்கள் செருப்பால் அடித்து மகிழ்ந்த ஜார்ஜ் புஷ்ஷு§டன் நேசம்காட்டி அவர்கள் நாட்டின் நெருக்கடியை தீர்க்க மூன்று லட்சம் கோடிக்கு மேல் நமதுநாட்டு பணத்தை அள்ளிக் கொடுக்கும், நமது நாட்டின் இறையாண்மையை காவுகொடுக்கும் அணுசக்தி உடன்பாட்டை மக்களிடம் அம்பலப்படுத்துவதில் இப்பிரச்சாரம் வெற்றி அடைந்தது. மூவாயிரம் கிலோமீட்டர்கள் கிட்டத்தட்ட 500 வரவேற்பு மையங்களில் கூட்டங்களை நடத்தி,கடுமையான வெயில், மழை, மலைகளை கடந்து இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் குழு தனது பிரச்சாரத்தை துவக்கிய முதல் நான்கு நாட்கள் கடுமையான மழையை சந்திக்க வேண்டி இருந்தது. அந்தப் பயணத் தோழர்கள் கடுமையான காய்ச்சலில் கூட தங்கள பயணத்தை நிறுத்தவில்லை, கோவைக்குழு கிட்டதட்ட 130 கிலோமீட்டர்கள் மலைப்பகுதியை கடக்கவேண்டி இருந்தது. குமரியில் புறப்பட்டகுழு மற்றக்குழுக்களைவிட இரண்டு நாட்கள் முன்பு புறப்பட்டு அதிக தூரம் கடந்தது. இந்த பிரச்சார குழுக்களின் இறுதியில் ஏதோ மிகப்பெரிய சாதனையை முடித்த உணர்வுடன் சென்னையில் சங்கமிக்கவில்லை. அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு செய்யவே சங்கமித்தனர்.

மேற்கண்ட பயணமும் அதன் முழக்கங்களும் தமிழக அரசு நிறைவேற்றிட, தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட, காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய, மாவட்டங்களில் கிடைக்கும் இயற்கை வளங்களை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்கிட, அனைவருக்கும் சமச்சீர் கல்வி வழங்கிட, புகைபிடிக்க தடைபோடும் புண்ணியமூர்த்திகள் குழந்தைகளை காக்கும் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் அரசு தொழிற்சாலைகளை மூடுவது மட்டுமல்ல மக்களின் அடிப்படை சுகாதாரத்தைக்கூட கொடுக்க மறுப்பதை எதிர்க்க, தமிழகத்தில் நிலவும் சகல விதமான தீண்டாமைக் கொடுமைகளையும் முடிவு கட்டிட அரசாங்கத்தை நிர்பந்திக்கும் போராட்ட வடிவமாக பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட அறைகூவல் விடப்பட்டுள்ளது. அந்த தினம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முத்திரைப்பதித்த கப்பற்படை எழுச்சி தினம்.அதற்கு முன்னதாக டிசம்பர் 30 மகாத்மா காந்தி நினைவுதினம் துவங்கி, பிப்ரவரி 11 சேலம் சிறைத்தியாகிகள் தினம் வரை தமிழகம் முழுவதும் பாத யாத்திரை, தெருமுனைக் கூட்டங்கள் என பிரச்சார இயக்கங்கள் நடைபெற உள்ளது.

மறியல் களம் காணுகின்ற சூழல் நமது நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடிக்கும் காலம். அந்த தேர்தலில், நடக்க உள்ள அரசியல் போராட்டத்தில் தமிழக இளைஞர்களை களமிறக்கிட, ஒரு மாற்றம் உருவாகிட இளைஞர்களை திரட்ட வேண்டிய பணியை வாலிபர் இயக்கம் செய்யும்.

மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் டிசம்பர் 15ஆம் தேதி கோவையில் புறப்பட்டகுழு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்,நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், வடசென்னை ஆகியமாவட்டங்களில் 163 மையங்களில் வரவேற்பு கூட்டங்களோடு வந்தது. இக்குழுவில் மாநில பொருளாளர் முத்துக்கண்ணன், மாநிலத் துணைச்செயலாளர் டி.வி.மீனாட்சி, செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.பாபு, மாநிலக் குழு உறுப்பினர்கள் செந்தில்,வேலுகண்ணா, ஸ்டாலின், மற்றும் மொளிணிதீன்(வடசென்னை), ஜெகன் (காஞ்சிபுரம்), சத்தியராஜ் (விழுப்புரம்), பாஸ்கர், சரவணன் (பாண்டி), சாதிக்(கடலூர்), சிவா (நாகை), ஜோதிபாசு (திருவாரூர்), மா சே துங் (தஞ்சை), ஆனந்தன், சுதாகர், மேகநாதன்(ஈரோடு), உதயகுமார் (திருப்பூர்), கரிகாலன் (மதுரைபுறநகர்), மூக்கன் (பெரம்பலூர்), சிவராமன்- (திருவண்ணாமலை), ரமேஷ், மேகநாதன் (கோவை), லெனின் (சிவகங்கை), ஜெயகாந்தன் (ராமநாதபுரம்), ஜோதிபாசு (தருமபுரி), அண்ணாமலை (கிருஷ்ணகிரி),குமார் (சேலம்), சித்திக் (நெல்லை), முத்து (தூத்துக்குடி), விக்டர் (விருதுநகர்), மகேஷ் -(நீலகிரி), கோபி(நாமக்கல்), செல்லதுரை (கரூர்), சங்கர் (திருச்சி),சுரேஷ் (திண்டுக்கல்) ஆகியோர் பங்கேற்றனர் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் டிசம்பர் 13ஆம் தேதி களியக்காவிளையில் புறப்பட்டகுழு குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை-புறநகர், மாநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி,பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தென்சென்னை ஆகிய மாவட்டங்களில் 150 இடங்களில் வரவேற்பு கூட்டங்களுடன் வந்தது.மாநிலத் துணைச் செயலாளர்கள் எஸ்.பாலா, எஸ்.லெனின், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில், மாநிலக் குழு உறுப்பினர்கள் பாப்பா,சண்முகராஜா, சசிக்குமார் இளம்பெண்கள் மாலதி, செல்வி மற்றும் அருள், மது, (திருவள்ளூர்), செந்தில், லோகு (காஞ்சிபுரம்), ராம்தாஸ் (பாண்டி),அருண் (திருவாரூர்), விஜயகுமார் (தஞ்சை), பாண்டியன் (திருச்சி), அருள் (கோவை), அஸ்ரப், குரு(திருப்பூர்), தினேஷ், மயில்சாமி (ஈரோடு), வினோத் (நீலகிரி), கோபி (மதுரை நகர்), ராமலிங்கம், முருகன் பாண்டியராஜன், செல்வி (மதுரைபுறநகர்), கண்ணன்(விருதுநகர்), சுந்தர் (திருவண்ணாமலை), லெனின்(தேனி), சுரேஷ் (சிவகங்கை), அருண்பாரதி (நெல்லை), பிரபாகரன் (பெரம்பலூர்), முருகேசன் -(சேலம்), பிரபாகரன் (கடலூர்), மணிகண்டன் (குமரி) ஆகியோர் பங்கேற்றனர்.

மாநில துணைச் செயலாளர் ஆர். வேல்முருகன் தலைமையில் டிசம்பர் 15ஆம் தேதி புறப்பட்ட குழு ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர்,புதுச்சேரி, காஞ்சிபுரம், தென்சென்னை ஆகியமா வட்டங்களில் 131 மையங்களில் வரவேற்பு கூட்டங்களோடு வந்தது. இக்குழுவில் மாநிலத்துணைத் தலைவர் ஜ.நரசிம்மன், மாநிலச் செயற்குழுஉறுப்பினர் குணசுந்தரி, மாநிலக் குழு உறுப்பினர்கள் முனியசாமி, ஆறுமுகம், முருகன், மற்றும் சுப்பிரமணி (புதுகை), சசி (விருதுநகர்), தீனபந்து, முருகேசன்(விழுப்புரம்), இளங்கோ, காரல்மார்க்ஸ் (திருவாரூர்), சாதிக்பாஷா -(தஞ்சை), சக்தி (காஞ்சிபுரம்), செல்வம்-(திருவள்ளூர்), கலைச்செல்வன் (வடசென்னை),முருகேசன் (திண்டுக்கல்), பாரதி-கண்ணன் (தென்சென்னை), பழனிசாமி, வடிவேல் - (திருப்பூர்), லோகநாதன் (திருவஷீமீளூர்), லட்சுமனன் (நாமக்கல்),கவுதம், சாமிநாத, சின்னசாமி (ஈரோடு), வாஞ்சிநாதன் (கடலூர்), கதிரவன் (பாண்டி), ஜான்சிராணி, விஜயகாந்த் (நாகை) சரவணன் (தி.மலை),சீனுவாசன் (காஞ்சிபுரம்), பிரவீன்குமார் (சேலம்),குணா (சிவகங்கை), சமயன் (மதுரைபுறநகர்), செல்வம்,லோகநாதன் (ராமநாதபுரம்) ஆகியோர் பங்கேற்றனர்.

நாம் வெல்லுவோம் குமரியிலிருந்து சென்னை வரை வந்த சைக்கிL பிரச்சாரப் பயணக்குழுவில் இடம்பெற்றிருந்த தோழர்களுடன் மாநிலத் தலைவர்கள் இராமேஸ்வரத்திலிருந்து சென்னைவரை வந்த சைக்கிள் பிரச்சாரப்பயணக்குழுவில் இடம்பெற்றிருந்த தோழர்களுடன் மாநிலத் தலைவர்கள் கோவைலிருந்துசென்னை வரை வந்த சைக்கிள் பிரச்சாரப் பயணக்குழுவில் இடம்பெற்றிருந்த தோழர்களுடன் மாநிலத் தலைவர்கள் கோவையிலிருந்து வந்த பயணக்குழுவில் இடம்பெற்றிருந்த இளம் தோழர் உதயகுமாருக்கு (14) முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் எம்.எல்.ஏ. நினைவுப் பரிசு வழங்கினார்.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

1 Responses to முடிந்த சைக்கிள் பயணமும் துவங்கிய மறியல் பணியும்

  1. Anonymous Says:
  2. you have a rapid hosting

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark