மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

தந்தை பெரியார் - பகத்சிங்

Posted by நட்புடன் ரமேஷ் Monday, March 24, 2008


(தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)
திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்
இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி மதிரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க , அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் காரியங்கள் நடைபெறுகின்றன.
இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன.
ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு, காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.
எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம்.
நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார்.
போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள்.
ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங்கூறிக்கொண்டு பாறையில் போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
நிற்க,
நம்மைப் பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடைததால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம்.
அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம்.
ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம்.
ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம்.
இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துக் கொண்டுதான் இருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்துக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம்.
அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது.
தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை.
இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.
திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள்.
இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம்.
சுபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!
இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.---
(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டிலிருந்து, வெளிக்கொணர்ந்திருப்பவர்: ச. வீரமணி)

10 comments

 1. இந்த அளப்பெல்லாம் இருக்கட்டும் என்னோட தளத்தில் ஒங்கதையத்தான் சொல்லி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். வந்து ஒம்பதிலச்சொல்லிட்டுப்போ.

  ஒங்க சி.பி.எம். மேடையிலேயே ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி, புனிதபாண்டியன்னு பேரு, அவன் பகத்சிங்கை அவமதித்து பேசினான். அப்ப எல்லோருமே பல்லக்காட்டி வழிஞ்சி நின்னீங்களே, அவனுக்கு அங்கேயே தக்க பதிலச் சொல்ல வக்கில்லாம கண்ணியம், அது, இதுன்னு சரடு உட்டீங்க. இங்க வந்து பகத்சிங் பற்றி இவ்வளவு அங்கலாய்க்கிறீங்க.

  இந்த மாதிரிக் 'கொசு'வுக்கெல்லாம் இப்படி தொடைநடுங்கிறீங்க, ஆனா பேச்செல்லாம் ஒரே புரட்சிதான் பொங்கிவழியுது. இதுவும் ஒரு பொழப்பு!  ஏகலைவன்.

   
 2. Anonymous Says:
 3. நண்பர்
  ரமேஷ் இதை பாருங்கள் .


  //
  NATPUTAN RAMESH said...
  "புத்தக புரட்சியாளர்களிண் கூடாரம்" த நா.மா.லெ.க யோக்கியர்களே! சிதம்பரம் கோயில் பிரச்சினையில் 2000 பேருடன் இந்திய ஜனனாயக வாலிபர் சங்க தோழர்கள் போராடியதை, 500 பேர் கைது செய்யப்பட்டதை மூடி மறைப்பது தான் உங்கள் யோகிதையா. ஒரு போராட்டத்தில் யார் இணைந்தாலும் மறைப்பதுதான் உங்கள் கேவலமாண புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றீர்.

  March 22, 2008 2:35 AM //  இதற்கு நண்பர் அசுரன்
  இப்படி பதில்.  //
  அசுரன் said...

  அய்யா நட்புடன் ரமேசு,
  தநா மாலேகா வுக்கும் மக இகவுக்கும் வித்தியாசம் தெரியாத அளவு உங்களது அரசியல் அறிவு இருப்பது நல்லதே ஏனேனில் இருக்கின்ற இடத்துக்கு இதுவே அதிகம். நிற்க.

  செப்டம் 2006-ல் கோயில் நுழைவு போராட்டம் என்று நடத்திவிட்டு அதையே ஏதோ இந்த போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்று திரித்து வால் போஸ்டர் ஒட்டும் வெட்கமற்ற CPMகாரர்களின் யோக்கியதை பற்றி முதலில் பேசுங்கள்.

  ஆறூமுகச்சாமி மகஇகவிடமும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திடமும்தான் இணைந்து போராடினார். நந்திகிராம் கொலைகாரர்களான பாசிஸ்டு CPM மோடு போராடவில்லை. இது சத்தியமாக மக இக வினுடைய, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினுடைய குற்றமல்ல. ஆறூமுகச்சாமியின் குற்றமுமல்ல. இதில் யாராவது குற்றம் செய்திருப்பார்கள் எனில் அது CPMதான்.

  மாறாக, இந்த பிரச்சினையை பல்வேறு தளங்களில் எடுத்துச் சென்று நான்கு வருடங்கள் தொடர்ந்து போராடியவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர். நீதிமன்றத்தில் சட்ட பூர்வமாக இதனை எதிர்த்தும், கையெழுத்து இயக்கம், தொடர் பொது கூட்டங்கள், கடைசியில் தீர்மானகரமான போராட்டம், அதற்கான விரிவான பிரச்சாரம், பல்வேறு அமைப்புகளை ஒருங்கே இணைத்து கூட்டமைப்புகள நடத்தியது என்று போராடி இந்த நிலையில் கொண்டு வந்தவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும், மக இகவினரும் தான். இந்த போராட்டங்கள் எதிலும் அமைப்பு ரீதியாக கலந்து கொள்ளாத CPM இப்பொழுது குற்றம் சொல்வது உண்மையில் நகைப்பையே வரவழைக்கிறது.


  இதில் என்ன புத்திய கண்டுவிட்டாய் அல்பையே? உன்னோட புத்தி எனன்வென்பதற்க்கு சாட்சியாக உனது தோழன் சந்திப்பு என்ற கோழை இங்கே தமிழ்மணத்தில் இருக்கீறார் அவரிடம் சென்று புத்திய பற்றி பேசு. உன்ன மாதிரி CPM அல்லக்கைகளால் சித்தாந்த ரீதியாக எதுவும் பேச முடியாது என்பதால்தான் இப்படி பொச்செரிப்பு புல்ம்பல்களை ஆங்காங்கே விட்டுச் செல்கிறீர்கள். தயவு செய்து கம்யூனிஸ்டு என்ற பெயரில் இந்த அல்பத்தனங்களைச் செய்யாதீர்கள். ஏனேனில் நேர்மை என்பதற்கும் உங்களுக்கும் சுத்தமாக அதாவது இயங்கியல் ரீதியான தொடர்பு கூட இல்லை என்ற அள்வில் வேறுபட்டு உள்ளது.

  அசுரன்

  March 25, 2008 7:09 AM \\
  இதற்கு நண்பர் ரமேஷ்
  பதிலளிப்பார் என்று கருதுகிறேன்.  தோழமையுடன்

  பொதுவுடமை தோழர்களுக்காக என்றும் துணை நிற்பவன்

   
 4. Anonymous Says:
 5. தோழர்
  ரமேஷ் இதை பாருங்கள் .


  //
  NATPUTAN RAMESH said...
  "புத்தக புரட்சியாளர்களிண் கூடாரம்" த நா.மா.லெ.க யோக்கியர்களே! சிதம்பரம் கோயில் பிரச்சினையில் 2000 பேருடன் இந்திய ஜனனாயக வாலிபர் சங்க தோழர்கள் போராடியதை, 500 பேர் கைது செய்யப்பட்டதை மூடி மறைப்பது தான் உங்கள் யோகிதையா. ஒரு போராட்டத்தில் யார் இணைந்தாலும் மறைப்பதுதான் உங்கள் கேவலமாண புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றீர்.

  March 22, 2008 2:35 AM //  இதற்கு தோழர் அசுரன்
  இப்படி பதில்.  //
  அசுரன் said...

  அய்யா நட்புடன் ரமேசு,
  தநா மாலேகா வுக்கும் மக இகவுக்கும் வித்தியாசம் தெரியாத அளவு உங்களது அரசியல் அறிவு இருப்பது நல்லதே ஏனேனில் இருக்கின்ற இடத்துக்கு இதுவே அதிகம். நிற்க.

  செப்டம் 2006-ல் கோயில் நுழைவு போராட்டம் என்று நடத்திவிட்டு அதையே ஏதோ இந்த போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்று திரித்து வால் போஸ்டர் ஒட்டும் வெட்கமற்ற CPMகாரர்களின் யோக்கியதை பற்றி முதலில் பேசுங்கள்.

  ஆறூமுகச்சாமி மகஇகவிடமும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திடமும்தான் இணைந்து போராடினார். நந்திகிராம் கொலைகாரர்களான பாசிஸ்டு CPM மோடு போராடவில்லை. இது சத்தியமாக மக இக வினுடைய, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினுடைய குற்றமல்ல. ஆறூமுகச்சாமியின் குற்றமுமல்ல. இதில் யாராவது குற்றம் செய்திருப்பார்கள் எனில் அது CPMதான்.

  மாறாக, இந்த பிரச்சினையை பல்வேறு தளங்களில் எடுத்துச் சென்று நான்கு வருடங்கள் தொடர்ந்து போராடியவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர். நீதிமன்றத்தில் சட்ட பூர்வமாக இதனை எதிர்த்தும், கையெழுத்து இயக்கம், தொடர் பொது கூட்டங்கள், கடைசியில் தீர்மானகரமான போராட்டம், அதற்கான விரிவான பிரச்சாரம், பல்வேறு அமைப்புகளை ஒருங்கே இணைத்து கூட்டமைப்புகள நடத்தியது என்று போராடி இந்த நிலையில் கொண்டு வந்தவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும், மக இகவினரும் தான். இந்த போராட்டங்கள் எதிலும் அமைப்பு ரீதியாக கலந்து கொள்ளாத CPM இப்பொழுது குற்றம் சொல்வது உண்மையில் நகைப்பையே வரவழைக்கிறது.


  இதில் என்ன புத்திய கண்டுவிட்டாய் அல்பையே? உன்னோட புத்தி எனன்வென்பதற்க்கு சாட்சியாக உனது தோழன் சந்திப்பு என்ற கோழை இங்கே தமிழ்மணத்தில் இருக்கீறார் அவரிடம் சென்று புத்திய பற்றி பேசு. உன்ன மாதிரி CPM அல்லக்கைகளால் சித்தாந்த ரீதியாக எதுவும் பேச முடியாது என்பதால்தான் இப்படி பொச்செரிப்பு புல்ம்பல்களை ஆங்காங்கே விட்டுச் செல்கிறீர்கள். தயவு செய்து கம்யூனிஸ்டு என்ற பெயரில் இந்த அல்பத்தனங்களைச் செய்யாதீர்கள். ஏனேனில் நேர்மை என்பதற்கும் உங்களுக்கும் சுத்தமாக அதாவது இயங்கியல் ரீதியான தொடர்பு கூட இல்லை என்ற அள்வில் வேறுபட்டு உள்ளது.

  அசுரன்

  March 25, 2008 7:09 AM \\


  இதற்கு தோழர் ரமேஷ்
  பதிலளிப்பார் என்று கருதுகிறேன்.  தோழர் ரமேஷ்
  natputanramesh.blogspot.com

  தோழர் அசுரன்
  poar-parai.blogspot.com  தோழமையுடன்

  பொதுவுடமை தோழர்களுக்காக என்றும் துணை நிற்பவன்.

   
 6. அல்பபுத்தி, கோழை, அல்லக்கை போன்ற தத்துவ வார்த்தைகளை பயன்படுத்தி பதில் கூறும் த. நா. மா.லெ.க அசுரா... வணக்கம்.
  கோபப்பட்டு பதில் கூறுவதால் பிரயோஜனம் இல்லை. அத்வானியுடன் நந்திகிராமில் நடத்திய புரட்சியை அடுத்து பேசலாம்
  நந்திகிராம் ப்ரச்சினையை --------- விட்டால் உங்களுக்கு தூக்கம் வராது என தெரியும். ஆக அடுத்து பேசலாம்
  சிதம்பரம் பிரச்சினையை பற்றிபேசலாம்.
  ஆனால் வார்த்தைகளில் தோழமை இருப்பது நல்லது.
  சிதம்பரம் கோயில் பிரச்சினையில் ஆறுமுகசாமியும் இன்னும் ப.மா.க, டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை கேட்டால் (சிதம்பரத்தில் நா. மா.லெ.க தோழர்கள் இருந்தால்) நல்லது. காரணம். தொடர் போராட்டம் நடத்திய விஷயங்களே தெரியாமல். இணையத்தளத்தில் பொய்களை மட்டும் வைத்து பிழப்பது ஒரு நாள் அம்பலப்படுத்தப்படும் என்பதை உணர்க.

   
 7. அய்யா ரமேசு,

  முதலில் தா.நா.மா.லெ.க. பற்றித் தெரிந்துகொண்டு இங்கே நீட்டிமுழக்கவருவது உங்களுக்கு நல்லது. இதோ இப்போது வரை அதையே நீங்கள் திரும்பத்திரும்ப சொல்லிவருவதை வைத்துப் பார்த்தால் அசுரன் உங்களுக்கு சொன்னபதிலே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

  வார்த்தைகளில் தோழமையை விரும்பும் நீங்கள் கடைசிவரை அதைக் கடைபிடிப்பீர்கள் என்றும் தொடர்ந்து விவாதிப்பீர்கள் (சந்திப்புபோல கோழைத்தனமாக இல்லாமல்) நம்பிக்கையில்தான் இப்போது பதிலலித்துக் கொண்டிருக்கிறேன்.

  நந்திகிராம் விசயத்துக்கெல்லாம் பிறகுவருவோம், இப்போது சிதம்பரம் பிரச்சினை குறித்தே விவாதிப்போம்.

  ஏதோ தொடர் போராட்டம் நடத்தியதாக சொல்கிறீர்கள். அதன்மூலம் நீங்கள் சாதித்தது தான் என்ன? தீட்சிதப்பார்ப்பனனிடம் யாசகம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதெல்லாம் போராட்டமாகாது.

  களப்போராட்டம் என்பது போலிஸ் அனுமதிகொடுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு செய்வது அல்ல. உணர்ச்சி என்பது போலீசிடம் யாசித்துப் பெறுவது அல்ல. அது உள்ளிருந்து எழுவது.


  நாங்கள் சிதம்பரத்தில் இருக்கிறோமா இல்லையா, அல்லது எத்தனைபேர் இருக்கிறோம் என்பதெல்லாம் உமக்கு கணக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அதெல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள் தேர்தலை மனதில் வைத்து கும்பல் சேர்த்துக்காட்டும் யுக்தியே அன்றி வேறல்ல. அந்த அடிப்படையில் பார்த்தால் உங்களைவிட எண்ணிக்கையில் நாங்கள் நிச்சயமாகக் குறைவுதான்.

  எங்களைவிட பெரிய அமைப்பான (அளவில் மட்டும்) நீங்கள் களத்தில் எந்த ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்கள்?

  அரசாணை பெறுவதற்குத்தான் ஒங்களால முடியல்ல, அதை பெற்றபிறகாவது ஆறுமுகசாமியுடன் கைகோர்த்து நின்றிருக்கலாமே ஏன் செய்யவில்லை? ஒருவேளை அவர் வெற்றிலைத்தாம்பூளத்துடன் வந்து உங்களை அழைக்காததினாலா?

  சரி அதன் பிறகு நடந்த போலிஸ் தடியடியில் எமது தோழர்கள் இரத்தம் சொட்டச் சொட்ட கைதுசெய்யப்பட்ட பின்பு, அனாதையாக சீந்துவாரில்லாமல் கிடந்த சிவனடியாரிடம் உங்களை அனுகவிடாமல் தடுத்தது யார்? நாங்களா?

  "எனக்கு வெளியிலிருந்தால் பாதுகாப்பில்லை, எனக்குத் துணையாக ஒருவர்கூட இல்லை, எனவே என்னையும் கைதுசெய்து அந்தப் பிள்ளைகளுடன் சிறையில் வையுங்கள்" என்று போலிசிடம் ஆறுமுகசாமி மன்றாடினாரே அது எதனால்? ஆயிரம் ரெண்டாயிரம் என்று அடையாள ஆர்ப்பாட்டத்தின்போது அட்டன்டென்ஸ் கொடுத்த உங்கள் கூட்டத்திலிருந்து ஒருவர் கூட ஆறுமுகசாமியின் கைப்பிடிக்க இல்லாமல் போனது எப்படி?


  இதற்கான பதிலைத் தாருங்கள் என்று மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

   
 8. Anonymous Says:
 9. பெரியையா ஏகலைவா..
  சில விளக்கங்கள் தேவை...
  1, த. நா.மா.லெ.க என்றால் என்ன?
  2. மறியல் கைது காவல்துறையுடண் சண்டை இதெல்லாம் யாசகம் பெருவதா?
  3. இதே மறியலை நீங்கள் செய்தால் புரட்சி மற்றவர்கள் செய்தால் கிண்டலா?
  4. இரண்டாயிரம் பேரை திரட்டி போராடுவது தவறா? உங்களைப் போல் 10 பெர் போராட்டம் செய்தால்தான் புரட்சியா?
  5. ஓட்டு பொறுக்கி என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களே உங்களை வார்த்தை பொறுக்கி எண்று அழைத்தால் தவறா?
  உடனடியாக ஒரு பக்க அளவிள் பதில் கூறவும்

   
 10. ஏன்டா கேனக்கிருக்கா.....

  கேள்வி கேட்டா பதிலச்சொல்லாம இப்படி பம்முறியே இதுதான் ஒங்க யோக்கியதை, இந்த வேலையத்தான் சந்திப்பும் செய்துகொண்டிருந்தார். ஒரு கேள்விக்கு மற்றொரு கேள்வியே எப்படியடா பதிலாகஇருக்க முடியும்.

  கேவலம், முகம் தெரியாமல் விவாதம் செய்கிற இணையத்திலேயே உனது சொந்தப்பெயரில் வந்து வாதிடமுடியாத தொடைநடுங்கி நீ, போராட்டக்களத்தில் என்ன செஞ்சிருக்க முடியுமுன்னு இப்பத்தான் தெரியுது. ஒனக்கு இந்த பதிலே ரொம்ப அதிகமுன்னு தோனுது.

   
 11. மரியாதைக்குறிய ஏகலைவன் அவர்களுக்கு
  வணக்கம்.
  கோபப்பட்டு கேணை என்ற வார்த்தையை பயன்படுத்தியதிலேயே உங்கள் யோக்கிதை தெரிகிறது. உங்களைப்போல் எனக்கும் எழுத தெரியும் என்பதை அறிக.
  ஆனால், அரசியல் அற்ற, மேற்கோள்களை பிடித்து தொங்கும் வார்த்தை பொறுக்கி தாங்கள் என்பதை நிருபணம் செய்ததற்கு நன்றி.
  முகம் காட்ட தயக்கம் ஒன்றும் இல்லை தங்கள் புகைப்படத்தை அனுப்பினால் என் படத்தையும் அனுப்பத் தயார். (பின்குறிப்பு ;முகவரியுடன்)
  பதில் சொல்லாதது பம்முவது என்றால், நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை. ஓகோ எல்லா முடிவும் நீங்கள் தான் எடுப்பீர்களோ?
  இப்பவாவது பதில் சொல்லி உன் வீரத்தை காட்டு தலைவா...
  1, த. நா.மா.லெ.க என்றால் என்ன?
  2. மறியல் கைது காவல்துறையுடண் சண்டை இதெல்லாம் யாசகம் பெருவதா?
  3. இதே மறியலை நீங்கள் செய்தால் புரட்சி மற்றவர்கள் செய்தால் கிண்டலா?
  4. இரண்டாயிரம் பேரை திரட்டி போராடுவது தவறா? உங்களைப் போல் 10 பெர் போராட்டம் செய்தால்தான் புரட்சியா?
  5. ஓட்டு பொறுக்கி என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களே உங்களை வார்த்தை பொறுக்கி எண்று அழைத்தால் தவறா?
  உடனடியாக ஒரு பக்க அளவிள் பதில் கூறவும்

   
 12. Anonymous Says:
 13. ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக....

  அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே...

  நிஜத்துலக்கூட ஒருத்தனுக்கு மூனு பேரை வெச்சிக்கிட்டு சுத்துறீங்கள்... தமிழ்நாடு முழுக்க எல்லாம் ஒண்ணா சேந்து கும்பமேளா நடத்துறதுதானே உங்க பொழப்பு....

  அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....

  பாவம்... ம.க.,.க. சரணம்............... இப்படியே கூவிக்குனு இருங்க!

   
 14. Sampath Says:
 15. திரு.அசுரன் அல்லது ஏகலைவன்,

  எனது பெயர் சம்பத்.

  மார்க்சின் கூற்றுப்படி, ஒரு நாட்டின் சூழல், மக்களின் வாழ் நிலை, அந்நாட்டின் பண்பாடு அவைகளை கொண்டு, கம்யூனிசத்தை கட்டிட வேண்டும். நமது நாட்டில் ஒரு ஆயுதப் புரட்சிக்கான சூழல் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

  மேலும், ரஷ்யப் புரட்சியோ அல்லது கியுபப் புரட்சியோ பெரும் திரள் மக்களின் ஆதரவு இன்றி நடைபெற்வில்லை. மக்களுக்கான போரட்டதில் மக்களை தவிர்த்து என்ன சாதிக்க முடியும்? ஒரு ஜனநாயக நாட்டில் அதன் சட்டதிட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டியுள்ளது. சட்ட மீறல் அல்லது போராட்டம் என்பது ஒரு கவர்ச்சியே ஆகும். இங்கே நாம் பகத் சிங்கின் உதாரணத்தை நினவு கொள்ளவேண்டி உள்ளது. அவர் தனது நண்பர் சிவவர்மாவிற்கு எழுதிய கடிதத்தி கூறுவது: புரட்சியில் எங்கள் போன்றவர்களின் தியாகம் ஒரு வைரம் போல உயரத்தில் மின்நினாலும், அதன் அடிக்கல்லாய், அஸ்திவாரமாய் இருப்பது உன் போன்ற அரசியல் பணியில் ஈடுபட்டு இயக்கதை முன்னெடுத்து செல்பவர்களே உண்மயான போராளிகள். எனவே சரியான சித்தாந்ததை தவறான புரிதலோடு கையில் எடுபதை விட ஆபத்து வேறு உண்டா.


  விளக்கம் தேவை.

  (நீங்கள் என்னை அவனே, இவனே என் கூறினாலும் சரி, விளக்கம் தேவை.)

  தோழமையுடன்
  சம்பத்

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark