மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

ஹு சிந்தாவின் வாழ்க்கை குறிப்பு

Posted by நட்புடன் ரமேஷ் Thursday, March 20, 2008


ஹு சிந்தாவ், ஹான் இனம், 1942ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பிறந்தார். ஆன் ஹுய் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1964ம் ஆண்டு ஏபரல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1965ம் ஆண்டு ஜுலை திங்கள் பணி புரியத் துவங்கினார். சின் குவா பல்கலைக்கழக நீர் சேமிப்பு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றார். இளங்கலை பட்டம். பொறியியலாளர்.

தற்போது, அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், சீன அரசுத் தலைவராகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பதவி ஏற்றுள்ளார்.ஹு சிந்தாவ் அவர்களின் வாழ்க்கை குறிப்பு:

1982-1984 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக்கின் மத்திய செயலகத்தின் உறுப்பினர், சீனத் தேசிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவர்

1984-1985 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக்கின் மத்திய செயலகத்தின் முதன்மை செயலாளர்

1985-1988 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குய் சோ மாநிலக் கமிட்டியின் செயலாளர், குய் சோ மாநில ராணுவ தலைமையின் கட்சி கமிட்டியின் முதன்மை செயலாளர்

1988-1992 கட்சியின் திபெத் தன்னாட்சி பிரதேச கமிட்டி செயலாளர், திபெத் ராணுவ தலைமையின் கட்சி கமிட்டியின் முதன்மை செயலாளர்

1992-1993 மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், மத்திய கமிட்டிச் செயலகத்தின் உறுப்பினர்

1993-1998 மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், மத்திய கமிட்டி செயலகத்தின் உறுப்பினர், கட்சியின் பள்ளி தலைவர்

1998-1999 மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், மத்திய கமிட்டி செயலகத்தின் உறுப்பினர், சீனத் துணை அரசுத் தலைவர், கட்சியின் பள்ளி தலைவர்

1999-2002 மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், மத்திய கமிட்டி செயலகத்தின் உறுப்பினர், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர், சீனத் துணை அரசுத் தலைவர், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர், கட்சி பள்ளியின் தலைவர்

2002-2003 மத்திய கமிட்டி பொதுச்செயலாளர், கட்சி மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர், சீனத் துணை அரசுத் தலைவர், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர், கட்சி பள்ளியின் தலைவர்

2003-2004 மத்திய கமிட்டி பொதுச்செயலாளர், சீன அரசுத் தலைவர், கட்சி மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர்

2004-2005 மத்திய கமிட்டி பொதுச்செயலாளர், சீன அரசுத் தலைவர், கட்சி மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர்

2005 முதல் இதுவரை மத்திய கமிட்டி பொதுச்செயலாளர், சீன அரசுத் தலைவர், கட்சி மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர்

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark