மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

தேச விரோதச் செயல்.

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, March 18, 2008


1914 ம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில், 452 பேர் பிராமணர்கள். 1915ல் மக்கள் தொகையில் படித்தவர்கள் எண்ணிக்கை 7 முதல் 8 சதமே 75 சதவீதம் பிராமணர்களே. 1892 முதல் 1904 வரை சிவில் சரிவீஸ் தேர்வில் வெற்றிப்பெற்ற 16 பேரில் 15 பேர் பிராமணர்களே.
2007 ல் சென்னை ஐ.ஐ.டி யில் மொத்தம் பேராசிரியர்கள் 400 பேர். இதில் பிராமணர்கள் 282 பேர். இது 70 சதம். தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்கள் 3 பேர் இது 0.75சதம்.இந்த நிலையில் தான் இந்தியாவின் உச்சநீதி மன்றம் கல்வி நிலையத்தில் இடஒதுக்கீட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பிற்கு பின்னால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களின் துரோக வரலாறு மறைந்துள்ளது.
அன்று. சிறந்த வில்லாளான இருந்ததால் ஏகலைவன் கட்டைவிரல் வெட்டப்பட்டது. பின்பு கடவுளை பார்க்க ஆசைப்பட்டதால் நந்தனின் உடல் எரித்து சாம்பலாக்கப்பட்டது .. மேலவளவில் முருகேசனும், நத்தகலம் முத்தம் பட்டியில் ஜக்கையனும் காலம் ...... காலமாய் மறுக்கப்பட்ட நீதி தேடி அலைகிறான்.....! காலம் சக்கரம் சுழல்கிறது... ஆண்டாண்டு காலமாய் பூட்டப்பட்ட கதவினை எட்டி உதைத்து படிக்கட்டுகளில் தடம் பதித்து நுழையும் தருவாயில்....பார்ப்பனியம் விஸ்வரூபம் எடுத்துத் தடுக்கிறது. நான் பி.சி சமூகத்தை சார்ந்தவன். மருத்துவக் கல்லூரிக்கு வந்துவிட்டேன், மெரிட்டில் தேர்வாகினேன், எனக்கு தகுதி இருக்கிறது, திறமை இருக்கிறது, எதற்கு இடஓதுக்கீடு?நம்மை நோக்கி விரல் சுட்டுகிறது.
நம்மை வைத்தே, நம்மை அடிப்பது தான் அவர்களின் சூட்சமம். ஏற்றத் தாழ்வின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு சமூக அமைப்பு குலைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பில் நீதிமன்றமும் உள்ளது என்பது... மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.சுயநிதி கல்லூரிகளில் ஒதுக்கீடு கூடாது, தனியார் துறைகளில் ஒதுக்கீடு இல்ல என்பதும், சொத்துரிமை அற்றவர்களாகவும், சொத்துரிமை மறுக்கப்பட்டதால் கீழிறக்கப்பட்ட தலித்/ பிற்பட்ட பகுதியினரை அப்படியே இரு, என சட்டமும், நீதி பரிபாலணங்களும் சுத்தியல் கொண்டு அடித்து கூவுகின்றன
பிற்படுத்தப்பட்டவருக்கு இடஓதுக்கீடு அளித்தால் நாடு பிளவுப்படுமாம். பொதுப் படடியல் சாதியினர் பாதிக்கப்படுவார்களாம்.சாதி கணக்கெடுப்பு சரியானதாக தெரியலையாம். ஓட்டுக்காக இப்படிப்பட்ட சலுகைகள் பேசப்படுகின்றனவாம், இப்படி இட ஒதுக்கீடு உரிமைக்காக கியூவில் நிற்பது இந்தியாவில் மட்டும்தானாம். இது நீதிமன்றத் தீர்ப்பின் சராம்சம்.
ஆதிக்க வர்க்கத்தின் வார்த்தைகளை அப்படியே சொன்னது போல் தோற்றம் அளிக்கிறது. இதுவரை ஏமாந்தது போதும், இனியும் ஏமாற நாங்கள் புழுபூச்சிகள் அல்ல. சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்புக் குடிமக்களும் பட்டியல் குலத்தினர்க்கு... இவ்வகுப்புக்களின் முன்னேற்றங் கருதி எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும் செய்வதையும் யாரும் தடுத்திட முடியாது. அரசியல் சட்ட விதி 29(2) ல் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தப்பட்ட முதல்விதி. இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் எரிக்கமுடியாத பகுதி.. எனவே இடஓதுக்கீட்டை எதிர்ப்பது அரசியல் சட்டத்தை எதிர்ப்பது தான்.. இது தேச விரோதச் செயல்.
---------------------------------------------------------------------எஸ்.ஜி.ரமேஷ்பாபு

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark