மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

பட்ஜெட் - 2008

Posted by நட்புடன் ரமேஷ் Sunday, March 9, 2008


பட்ஜெட்டுக்கு முன் தினம் நிதியமைச்சர் நாட்டின் பொருளாதார ஆய்வரிக்கையை சமர்பித்தார். அதற்கு முன்தினம் லாலு ரயிவே பட்ஜெட்டை சமர்பித்தார். பொதுவாக இரண்டு பட்ஜெட்டுகளும் பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டாலும், உள் நுழைந்து பார்த்தால் இந்த அரசின் வர்க நலன் பளிச் என தெரியும்.

பொருளாதார ஆய்வரிக்கை 1982-83ல் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 36.4 சதமாக இருந்தது, 2006-07ல் 18.5 சதமாக, அதாவது 25 ஆண்டுகளில் சரிபாதியாக குறந்துவிட்டது. கடந்த நிதியாண்டில் 3.8 சதம் எதிர்பார்க்கப்பட்ட விவசாய வளர்ச்சி, 3.6 சதமாக குறைந்துள்ளது. உணவு உற்பத்தியில் தேக்கம் நீடிக்கின்றது.

தொழில் துறையில் வளர்ச்சி 2006-07ல் 11.6 சதமாக இருந்தது, 2007-08ல் 9 சதமாக அதாவது 2சதம் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த பிண்ணனியோடு சரிவுகளை ஈடுகட்டும் எனறு எதிர்பார்புடன் பட்ஜெட்டை பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

நான்கு கோடி விவசாயிகள் பயன் பெரும் வகையில் 60 ஆயிறம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக பட்ஜெட் அறிவித்திருப்பது சிறப்புதான், எனினும் தேசத்தில் உள்ள விவசாயிகளில் 42 சதம் பேர் வெளியில் கடன் வாங்கி, அதுவும் 30 சதம் வட்டி எனும் கடும் விஷ வலையில் சிக்கி உள்ளனர் என்பதோடு இதை இணைத்துப் பார்க்க வேண்டும். பொருளாதாரத்தை பாதுகாக்க நிதி திரட்சியை ஏற்படுத்த வைத்துள்ள திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை, நவரத்தினா பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை 10 சதம் தனியாருக்கு விற்பனை செய்வது. நிலக்கரி சுரங்கங்களில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது. தொழிலாளிகளின் வேலை நேரத்தை அதிகரிப்பது. எண்ணெய் வயல்களை அந்நிய முதலாளிகளுக்கு விற்பனை செய்வது. இன்சூரன்ஸ் துறையில் நேரடி வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிப்பதோடு 51 சதம் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது. டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களின் போக்குவரத்தை முழுமையாக தனியாருக்கு கொடுப்பது போன்ற அபாயகரமான ஆலோசனைகளை நிதியமைச்சர் பொருளாதார ஆய்வரிக்கையில் கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் ஒருபடி மேலே சென்று "சந்தை மிகவும் பசியாக இருக்கிறது, இன்னும் சில பொதுத்துறை நிறுவனங்களை வ்ற்பனைக்கான பட்டியலில் அறிவிக்க வேண்டியுள்ளது" என்று அறிவிக்கிறார். சந்தைபசி என்பது டாட்டா, பிர்லா, அம்பாணி, மிட்டல்களின் லாபபசி என்ற "மொழிபெயர்ப்புடன்" பார்க்கப்பட வேண்டும்.

இதே நடைமுறைதான் ரயில்வே பட்ஜெட்டிலும் உள்ளது. பயணிகள் கட்டண குறைவும், இந்திய ரயில்வே சில ஆண்டுகளாக ஏற்படுத்தி வரும் லாபமும், சுமார் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை காவு கொடுத்துப் பெறப்படுவதாகும். புதிய ரயில் வாகனங்கள், புதிய ரயில் பெட்டிகள், சரக்குப் பெட்டகங்கள், முக்கிய ரயில் நிலையங்களின் மேம்பாடு என வரிசையாக தனியார்மயம் நுழைக்கப்படுகிறது. ஏற்கனவே அவுட்சோர்ஸ்சிங் என்ற ஆக்கிரமிப்பு பலபகுதிகளில் துவங்கிவிட்ட நிலையில், தற்போது பெட்டிகளைக் கழுவதற்குகூட தனியாரை அழைத்துள்ளனர்.

ராணுவத்திற்கு கடந்த பட்ஜெட்டில் 96 ஆயிரம் கோடி என்றிருந்தது, தற்போது 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 கோடி என்று அதிகரித்துள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு வெறும் 20 கூலியில் வாழ்க்கை நடத்துகின்ற கிராமப்புற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட கிராமப்புற வேலை உறுதி சட்டத்திற்கு ஒதுக்கீடு மிகவும் பாவமாய் காட்சியளிக்கிறது.

200 மாவட்டங்களில் அமலாக்கம் இருந்த போது 11,300 கோடியாக இருந்த தொகை, 596 மாவட்டங்களாக உயர்ந்த பின் வெறும் 16,000 கோடி மட்டுமே. அதாவது 296 மாவட்டங்கள் உயர்ந்தாலும் 4,700 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

உணவு மானியம் அதிகரிப்பு, பொது விநியோக முறையை பலப்படுத்தல், விலைவாசி உயர்வு குறித்தெல்லாம் இந்த பட்ஜெட் கவலை கொள்ளவில்லை.

கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ஐந்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு பின்னோக்கி செல்கிறது. உலகமயத்தின் பரிசான வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி இப்போது வேலை இழப்பு வளர்ச்சி என்ற கட்டத்தை நோக்கி செல்கிறது.

பண்ணாட்டு நிறுவனங்களின் நிதி மூலதனத்தின் சூதாட்டம் காரணமாக இந்தியாவில் பெருகி வரும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்க்கை குறித்து இந்த பட்ஜெட் அக்கறை கொள்ளவில்லை.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல இனிப்பு தடவிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் இடதுசாரிகளும், மக்களும் பலத்துடன் போராடாமல் அது சாத்தியமில்லை.

ஏனெனில் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் அறிவித்த பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும் போது "ஐந்தாவது பிள்ளைக்கு கிடைக்கும் குச்சிஐஸ்" போல மாறி விடுகிறது. உதாரணமாக கடந்த நிதி ஆண்டில் "பாரத் நிர்மாண்" என்ற வளர்ச்சி திட்டத்தில் குடிநீர் வசதி 5,52,000 வீடுகள் என்று இலக்கு தீர்மாணிக்கப்பட்டு வெறும் 1,74,000 வீடுகளையே எட்டியது. கிராமப்புற வீடுகள் 60 லட்சம் என்று இலக்கு தீர்மாணிக்கப்பட்டு வெறும் 26 லட்சமே கட்டப்பட்டது.

கிராமப்புற சாலைகள் 66,802 கி.மீ என்று இலக்கு தீர்மாணிக்கப்பட்டு வெறும் 12,327 கி.மீ மட்டுமே போடப்பட்டது.

கிராமத்தை பழுது பார்த்தல் 3,40,316 கி.மீ என்று இலக்கு தீர்மாணிக்கப்பட்டு வெறும் 89,533 கி.மீ மட்டுமே பழுது பார்க்கப்பட்டது.

தொலைபேசி இணைப்பு 66,822 கிராமங்களுக்கு என்று இலக்கு தீர்மாணிக்கப்பட்டு 47,747 கிராமங்களை மட்டுமே தொடர்பு கொண்டது.

ஆக தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெறும் அறிவுப்புகளை அள்ளி வீசி மக்களை மகிழ்விக்க முயற்சிக்கும் காங்கிரஸ், தான் ஒப்புக்கொண்ட குறைந்த பட்ச பொது திட்டத்தில் உள்ள அம்சங்களை அமல் படுத்தினால்தான் தேசம் வளர்ச்சி எனும் பாதையில் நடைபோடும்.

------------------------------------------------------- மார்ச் 2008

2 comments

 1. Excellent.... Inspiring.... Catching... Keep it up.

  Specially the web layout is good.

  Revolutionary Greetings.
  K. Selvaperumal

   
 2. thanks selvsperumal

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark