மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

அறிவு ஜீவிகளும் நந்திகிராமும்

Posted by நட்புடன் ரமேஷ் Friday, February 29, 2008


ஒரு திட்டமிட்டப் பொய்யைக் கட்டமைத்து அதன் மேல் அடுக்கடுக்காகப் புனையப்படு வார்த்தைகளால், அந்தப் பொய்யை உண்மையாக மாற்றி, அதன் மூலம் கலவரங்களை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடையும் நடைமுறை உலகின் வரலாற்றில் நிறையவே நடந்துள்ளன.

இந்த அரசியல் ஆதாயக் கலவரக்காரர்கள் மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல், அவர்களின் அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் தவிப்பவர்கள். இவர்கள் முதலாளித்துவப் பத்திரிகைகளின் போலி விளம்பரங்களை நம்பி நடமாடும் காகிதப் புலிகள். இந்தியாவின் “நவீன இடதுசாரி அறிவு ஜீவிகள்” என்று தங்களை அறிவித்துக்கொள்ளும் சிலர், இத்தகைய கலவரக்காரர்களுக்குப் புனைவு வார்த்தைகளையும், கட்டுரைகளையும், விளம்பரங்களையும் இலவசமாகக் கொடுத்து காகிதப் புலிகளுக்கு உதவி வருகின்றனர்.

திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டப் பொய் இதுதான்: நந்தி கிராமத்தில் இடது முன்னணி அரசு நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிர.

நவீன இடதுசாரி அறிவு ஜீவிக் கூட்டத்தில் தன்னையும் ஒருவராக அறிவித்துக் கொண்டவர்களில் ஒருவர் அரிந்தம் சவுத்திரி, தி சன்டே இந்தியன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர். சில இதழ்களுக்கு முன் இதே பத்திரிகையில் மார்க்சியம் வெல்லுமா? என்று தலைப்பிட்டு உலகம் எங்கும் வெல்லும், ஆனால் இந்தியாவில் வெல்லாது என்று ஆரூடம் எழுதி மகிழ்ந்தவர் இவர்.

அந்தப் பத்திரிகையின் கடந்த இதழின் அட்டைப்பட வாசகமே இதுதான் “நல்லவர் வேடத்தில் ஓர் இரக்கமற்ற ஹிட்லரியவாதி’’ இரத்தம் தெறிக்கும் பின்னணியில் புத்ததேவ் படம் வேறு. அட்டைப் படம் துவங்கி வாசகர் கடிதம், முற்றம் பகுதியை (ஒரு பக்கம்) வெறுமையாக விட்டு நந்திகிராம மரணங்களுக்கு அஞ்சலி, கொடூரத்தின் கையேடு என இரண்டுப் பக்கங்கள் ரத்தமயமான பிணங்களுக்கு மேல் புத்ததேவ் சிரிக்கும் படம் என பத்துப்பக்கம் தனது மன அரிப்பான “மேற்குவங்கத்தில் நடக்கும் ஆட்சியின் பயங்கரத்தையும், அந்தச் சர்வாதிகார அரசை ஏன் ஜனநாயக இந்தியா தூக்கியெறிய வேண்டும்’’ என்பதை விளக்கும் கட்டுரைகள்தான்.

உண்மையை மறைப்பது ஒருவகை, உண்மையை திரித்துக் கூறுவது வேறுவகை. இவர் இதில் இரண்டாம் வகை.

அக்கட்டுரையில் முதலில் சில உண்மைகள் என தனது பொய் மூட்டையை அவிழ்க்கிறார் “நந்திகிராம் படுகொலைகளுக்கு நான்கு நாட்களுக்கு முன்னாள் மார்க்சிஸ்ட் கட்சியினரைக் கொண்ட முகாம்கள் ஊரைச் சுற்றி அமைக்கப்பட்டன. அதன் பிறகு மாநிலக் காவல்துறை குவிக்கப்-பட்டன. போலிஸ் வண்டிகளில் காவலர்கள் வந்தனர். பின்னாள் காலி டிரக்குகள் (செத்தவர்களின் உடல்களை உடனடியாக அப்புறப்-படுத்த). படுகொலை அன்று 2000 காவல் வீரர்கள், காவலர் சீருடையில் கட்சித் தொண்டர்கள். மற்றும் இரண்டு மடங்கு அதிகமான சாதாரண உடையணிந்த கட்சித் தொண்டர்களும் திட்டமிட்டக் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 20கிமீ முன்பே ஊடகங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. முரடர்கள் உள்ளே நுழைந்ததும் பெண்களும், குழந்தை-களும் அவர்களை எதிர்கொண்-டார்கள். புத்ததேவின் தொண்டர்கள் என்ன செய்தார்கள்? பின்வாங்-கியிருக்க வேண்டிய நிலையில் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். ஏழைகள், எடை குறைவான பலவீனர்கள், சரியாக உணவு உண்ணாத பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள் ஆகியவர்கள் மீது. அவர்களுக்கு அந்த நிலம் தேவை. அறுபது ஆண்டுகளாக மனிதத் தன்மையற்ற அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட, துரோகம் செய்யப்பட்ட, கற்பழிக்கப்பட்ட தேசத்தின் மக்கள் அவர்கள். காவலர்கள் சுட்டார்கள். பயந்து ஓடிப்போனவர்களைக்கூட துரத்திப்போய் சுட்டார்கள். துப்பாக்கிச் சூட்டி-னால் இறக்காத பெண்களை கற்பழித்தார்கள். சாட்சிகள் கூற்றுப்படி சிறு குழந்தைகளைக் கால்களைப் பிடித்துக் கிழித்து, உடல்களை நதியில் வீசி எறிந்தார்கள். உலகம் முழுவதும் கம்யூனிஸ்டு-கள் இப்படித்தான் நடந்து வந்துள்ளார்கள்’’.அதீதக் கற்பனை வளமும், இரத்தத்தில் ஊறிப்-போன தத்துவ எதிர்ப்பும் கொண்ட வார்த்தைகள் இவை.

இடதுசாரி எதிர்ப்பாளர்கள் கூட சிந்திக்கமுடியாத வன்மம் கொண்ட வாசகங்கள் மேற்கண்டவை. அங்கு நிலம் கையகப் படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மீண்டும் மீண்டும் மேற்குவங்க இடது முன்னணி அரசு தெளிவாக அறிவித்த பின்பு நடந்தத் திட்டமிட்டக் கலவரம் இது. இந்த உண்மையை திரித்துக் கூறிய பின்பு அதற்கு முட்டுக் கொடுக்க அடுக்கடுக்காகப் புனைவுகளை அள்ளித் தெளிக்க துவங்குவதன் விளைவுதான் இது.30 ஆண்டுகளை கடந்தும் மேற்குவங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சியை அசைக்க முடியாமல் திண்டாடும் மம்தா கூட்டமும், நக்சலைட்டுகளும், காங்கிரசும் அங்கு தொழில் வளர்ச்சி இல்லை என்று கண்ணீர் சிந்தினர். ‘மேற்குவங்க இடது முன்னணி ஆட்சி அம்மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. தனியார் துறைகளை அனுமதிப்பதில்லை.

சுருக்கமாகச் சொன்னால் இந்திய இடதுசாரி இயக்கம் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையின் மிகப்பெரிய தடையாக அமைந்திருக்கிறது’, என்று எழுதிய அறிவுஜீவி அரிந்தம் கவலையையும் தெரிவித்திருந்தார்.

ஆனால் மேற்குவங்க அரசு தொழில் மயப்பாதையில் நடைபோடத் துவங்கியதும் இந்தக் கூட்டங்களுக்கு வேர்த்துக்கொட்ட துவங்கி விட்டது. காரணம் நிலச்சீர்-திருத்தத்தின் மூலம் சாதாரண ஏழை, எளிய மக்களை நில உடமையாளர்களாகத் தலைநிமிர வைத்த மக்கள் அரசு, தொழில் துறையிலும் காலடிவைத்தால் இன்னும் நூற்றாண்டுகள் இவர்களுக்கு அங்கு வேலையில்லை என்பதை அறிந்து கொண்டனர்.

எனவே மக்களிடம் தவறான செய்தியைப் பரப்பிக் கலவரங்களுக்கு வித்திட்டனர்.இரண்டரை மாதமாக ஒட்டுமொத்தமாகச் சில பஞ்சாயத்துகள் கலவரக்காரர்களால் சிறைவைக்-கப்பட்டன. அந்த கிராமங்களுக்குள்ளே காவல்-துறையினர், அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட-வில்லை. நந்தி கிராமம் உள்ளிட்ட சில கிராமங்-களில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள்.

இதன் விளைவாக 2 ஆயிரத்து 500க்கு அதிகமான மக்கள் கிராமங்-களிலிருந்து விரட்டப்பட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டார்கள். இப்படிப் பாதிக்கப்-பட்டவர்களைத் தான் தாக்குவதற்கு முகாமிட்ட-வர்கள் என்று ‘சன்டே இந்தியா’ கதை கட்டுகிறது. நந்தி கிராமத்திற்குச் செல்லும் பாதைகள் பலப் பகுதிகளில் வெட்டப்பட்டன. பாலங்கள் இடிக்கப்-பட்டன. தொலைத்தொடர்புச் சாதனங்கள் உருக்குலைக்-கப்பட்டன. பாதிக்கப்பட்டு ஊரை விட்டு வெளியே தங்கியிருந்த மக்களையும், கலவரக்-காரர்கள் தாக்கத் தொடங்கிய போதுதான் இரண்-டரை மாதமாக நிதானமாகக் கலவரக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்த மேற்குவங்க அரசு அமைதியை நிலைநாட்ட நந்தி கிராமத்திற்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

கடந்த 30 ஆண்டுகால ஆட்சியில் ஒரு முறைக் கூட மக்களை நோக்கி துப்பாக்கியை அல்ல, தடியைக் கூட உயர்த்-தாத மேற்குவங்க அரசு துப்பாக்கியைத் தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அமைதியை நிலை-நாட்டச் சென்றக் காவல்துறையினரும், அரசு ஊழியர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அவர்கள் மீது குழல் துப்பாக்கியாலும், கட்டை-களாலும் தாக்கிய போதும் எதிர்வினை ஆற்றாமல் இருந்தனர். அதையும் மீறி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு அப்பாவி மக்களுக்குப் பாதிப்பு என்ற நிலை உருவான போதுதான் துயரச் சம்பவம் நடந்தது.

மேற்குவங்க அரசு நந்தி கிராம மக்களுக்கு விருப்பம் இல்லாமல் ஒரு பிடி மண்ணைக் கூட அங்கிருந்து எடுக்கமாட்டோம் என்று மீண்டும் மீண்டும் அறிவித்தாலும், அம்மக்களிடம் அரசு சார்பில் யார் வந்தாலும் நிலத்தைப் பிடுங்கவே வருகிறார்கள் என்று மம்தா வகையறாக்கள் அவதூறுப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்ட-விழ்த்துவிட்டனர்.

அதுமட்டுமின்றி மேற்குவங்க அரசின் நிலச்சீர்திருத்தத்தால் பாதிக்கப்பட்ட நில முதலைகளும், முதலாளிகளும் இதற்கு மேலும் தூபம் இட்டனர். இதன் விளைவாகத் திரண்ட மக்களை முன்வைத்து அவர்கள் பின்னாள் நின்று பிணம் திண்ணிகள் போல கலவரத்தை முடித்து-விட்டார்கள்.நிலமை இப்படி இருக்க வீழ்த்த முடியாத ஒரு அரசை வீழ்த்துவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த முதலாளித்துவ ஊடகங்கள் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அவதூறு-களை அள்ளிவீசுகின்றனர்.

ஏழைகள், எடை குறை-வான பலகீனர்கள், சரியாக உணவு உண்ணாத பெண்கள், சிறுவர்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துச் சேவை புரிந்து வருகிற மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது சன்டே இந்தியாவும் தன் பங்கிற்குச் சேற்றைவாரி வீசியது.

ஆனால், நரேந்திர மோடி குஜராத்தில் நர வேட்டையாடிய போது கண்களைக் கட்டிக் கொண்ட இன்னும் பிற மாநிலங்களில் உழைக்கும் மக்கள் உணவுக்காக வீதிவீதியாய் அலையும் போது எழுதுகோலை திறக்க மறுக்கிற, குழந்தை விபச்சாரமும், இடம் பெயர்ந்து போகும் சோகமும், பணிச் சுமையும் வாட்டிவதைக்கிற எதார்த்தத்தைக் கவர்ச்சிப் படங்களால் மூடிமறைத்து வியாபாரம் செய்கின்ற பத்திரிக்கைகள் மேற்கு வங்க அரசை பக்கம் பக்கமாய் குறைகூற முதலிடம் கொடுத்தன.

அதிலும் குறிப்பாக இடதுசாரி சாயலாகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட, இரண்டு இதழ்-களுக்கு முன்பு மேற்கு வங்க தொழில் வளர்ச்சியைப் பற்றி முதலைக் கண்ணீர் வடித்த இப்பத்திரிகை நந்தி கிராமத்தில் தலைகீழ் நிலை எடுத்தது வியப்பானது அல்ல.

ஏனெனில் சாயம் வெளுப்பதற்கு எப்போதும் நேரமாகாது.மேற்கு வங்க வரலாறு அறியாத ஞாயிறு இந்தியர்கள் எத்துணை புழுதி வாரித் தூற்றினாலும், பொய்களைக் கடை விரித்தாலும், மக்கள் ஆதரவோடு இருக்கிற மேற்கு வங்க அரசை அசைத்திட முடியாது. ஏனெனில், மேற்கு வங்க அரசு அம்மக்களின் சுவாசத்தோடு கலந்த ஒன்று

70 களில் பாசிச அவசர நிலை பிரகடன நேரத்தில் மக்களைப் பாதுகாக்க பல்லாயிரம் உயிர்களை இழந்த, ஆட்சிக்கு வந்தவுடன் நிலச் சீர்திருத்தத்தில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ள, பெண்களுக்கு நிலப் பட்டா வழங்கிய பல்லாண்டு காலமாக மனிதத் தன்மையற்ற அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட, துரோகம் செய்யப்பட்ட, கற்பழிக்கப்பட்ட தேசத்தின் மக்களை தன் இதயத்தில் வைத்திருக்கிற ஆட்சி அது.

எனவே, மம்தா, நக்சலைட்டுகள், போலி அறிவு ஜீவிகள் கூட்டணியால் அந்த ஆட்சியை கலைத்திட முடியாது.

----------------------------எஸ்.ஜி.ரமேஷ்பாபு-------------------ஏப்ரல் 2007

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark