மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

நீங்கள் யார் பக்கம்?

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, February 26, 2008

அந்த மிருகம்

லாபம், பணவெறி பிடித்தது

எண்ணெய் வளத்தைகொள்ளை

அடிக்க நீண்டஅந்த கைகள்

பல உயிர் பறித்தது..

அந்த மிருகத்திற்கு

பிறந்த குழந்தை என்றும்

முதிர்ந்த உயிர் என்றும் இல்லை

இரத்தம் தான் இலக்கு

இதுதான் அதன் தொடர் வரலாறு..

இதோ சதாமின்

உயிர் பறித்த அந்த மிருகம

தனது கரத்தை

உங்களைநோக்கியும் நீட்டுகிறது.

அந்த மிருகத்திற்கு

அமெரிக்க என்றும்

இன்னொறுபெயர் உண்டு..

புஷின் வார்த்தையில் கேட்பதென்றால

நீங்கள் யார் பக்கம்?

ஒன்று மிருகத்தின் பக்கம்

அல்லது அதன் எதிர்பக்கம்

நடுநிலை என்று தப்பிக்க முடியாது.
---------------------------------------------------------------------------------ஜனவரி 2007

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark