மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

தனியார் கல்லூரிகளின் பணக் (பகல்) கொள்ளை...

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, February 26, 2008

அடிமை இந்தியாவில் கண்டக் கல்விக் கனவு நிறைவேராமல், சுதந்திர இந்தியாவிலும் கனவாகவேத் தொடர்கிறது.ஆட்சிகள் மாறுகின்றன, ஆட்சியாளர்களும் மாறுகின்றனர். ஆனால் அவர்கள் பின்பற்றும் கொள்கைகள் மட்டும் அச்சிலே வார்க்கப்பட்டதைப் போல் மாறமல் தொடர்கிறது.
கல்வி, சுகாதரம், விவசாயம், இளைஞர் நலன் போன்றவற்றிற்கு மாணியங்களைக் குறைப்பதும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியவர்களே சூறையாடுவதும் ஒவ்வொறு ஆட்சியிலும் இன்னும் கூடுதலாகப் பின்பற்றப்படுகிறது.
மக்கள்நலன், தேசநலம் பொன்றவற்றை காற்றிலே பறக்க விட்டு சுயநலத்துடன் ஆட்சி நடத்துவது கொள்கையாகவே மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டுக்குள் “14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி” என்ற திட்டம் நிறைவேற்றப்படாமல் பலப் பத்தாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இன்னும் கோஷமாகவே உள்ளது.
கல்வியில் மத்திய மாநில அரசுகள் காட்டும் அக்கறையின்மையும் கல்வி வியாபாரத்தில் அரசோடு கைகோர்க்கும் நீதிமன்றத் தீர்ப்புகளும் ஏழை எளிய மக்களின் கல்வியை மேலும்மேலும் கேள்விக்குறியாக்கி வருகின்றது. இந்தியாவில் கல்வி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் தனியார் சுயநிதி கல்லூரிகள் 2002 - 2003 ல் மட்டும் 5719 புதிதாக முளைத்து மொத்தம் 11,117 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரத்தில் மொத்தம் உள்ள 240 கல்லூரிகளில் சுயநிதி கல்லூரிகள் 230 ஆகும். அதேபோல் கர்நாடகத்தில் உள்ள 122 தொழில்நுட்பக் கல்லூரிகளில் 102 சுயநிதி கல்லூரிகள். தழிகத்தில் 233 கல்லூரிகளில் 221 சுயநிதி கல்லூரிகள்.

இந்த அபாயகரமான வளர்ச்சியினால் கல்வியின் தரமும் மாணவர்களிடையேயான சமத்துவமும் உடனடிப் பாதிப்புக்குள்ளாயின.கேரள அரசு, தனியார் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த சட்டம் இயற்றியுள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் அங்கு வாங்க வேண்டும், மீறினால் கிரிமினல் நடவடிக்கை பாயும் என அரசு எச்சரித்துள்ளது. அங்கு தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு ஆண்டுக்கட்டணம் ரூ 13,000 மட்டுமே. ஆனால் தமிழகத்தில் ரூ 1,30,000 என அரசு நிர்ணயித்துள்ளது, இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத தனியார் கல்லூரிகள் ரூ 4,00,000 வரை வசூலிக்கிறது.
கேரளத்தைப் போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் சுயநிதி கல்லூரிகளைக் கட்டுப்படுத்த கராரான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். மேலும் அரசுகல்லூரிகள் குறைவாக இருப்பதும் தனியார் கல்லூரிகளின் கட்டுக்கடங்காத பணக்கொள்ளையும் கல்விப்பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ள இத்தகைய சூழலில் கல்விக்கு அதிக நிதி, மாணியம் ஒதுக்கப்பட வேண்டியதும் வங்கிகளில் கல்விக் கடன் வழங்குவதும் அவசியமாகிறது.
---------------------------------------------------------------------------------ஜூலை 2007

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark