மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

சச்சார் கமிஷன்

Posted by நட்புடன் ரமேஷ் Sunday, December 30, 2007

வரவேற்போம்.. அமுலாக்கம் காண்போம்

தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் கொண்டுவந்துள்ள முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது.
கடந்தகால அதிமுக மதமாற்ற தடை சட்டத்தி கொண்டுவந்து சிறுபாண்மை மக்களை மிரட்டியது போல் இல்லாமல், இம்மக்கள் மீதான புரிதல் நடவடிக்கையை திமுக அரசு துவங்கி உள்ளதன் ஆரம்பமாக இச்சட்டத்தினை கருதலாம். இதற்கு அடிப்படையான காரணங்களில் முக்கியமானதாக சச்சார்குழு பரிந்துறையை நாம் கருதலாம்.
"உலகமயம், தாராளமயம், முதலியன இம்மக்களின் பாரம்பரியத்தொழில்களைப் பாதித்துள்ளதால் வேலை வாய்ப்பு இன்னும் மோசமாகியுள்ளது. நிரந்தர வேலை, சமூக பாதுகாப்பு ஆகியவையின்றி எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலும், மற்றவர்களை ஒப்பிட்டால் குறைந்த கூலியை பெருபவர்களாகவும், பணி பாதுகாப்பில்லாத தெரு வணிகங்களிலேயே அதிகம் உள்ளனர். பீடி சுற்றுதல், காகிதம், இரும்பு சேகரித்து விற்பனை செய்வது, தோல் பதனிடும் தொழில் போன்றவைகளில் இவர்களே அதிகம். முஸ்லிம்கள் நிறைந்துள்ள பகுதிகளை பல வங்கிகள், “எதிர் மறையான அல்லது சிவப்பு பகுதிகள்” என அறிவித்து கடன் உதவிகளை செய்ய மறுக்கின்றன.
முஸ்லிம்களின் ஆரோக்கியம், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் அவர்களின் ஏழ்மையுடனும், தூய குடிநீர், சுகாதாரமான சூழல் முதலியன இல்லாமை ஆகியவற்றுடனும் உள்ளனர்.
6 - 14 வயதுள்ள முஸ்லிம் பிள்ளைகளில் 25 சதத்தினர் பள்ளிக்கூடங்களுக்கு சென்றதேயில்லை. முன்னணிக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயில்பவர்களில் 25 மாணவர்களில் ஒருவரும், பட்டமேற்படிப்பில் 50 ல் ஒருவரும் முஸ்லிம்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 13.4 சதமாக உள்ள இஸ்லாமியர்களில் (இந்தியாவில் உள்ள் 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 33 பேர்மட்டுமே முஸ்லீம்கள்) அரசுத்துறையில் வெறும் 4.9 சதமே உள்ளனர். உதாரணமாக காவல்துறையில் 6 சதம், கல்வித்துறையில் 6.5 சதம், உள்துறையில் 7.3 சதம், போக்குவரத்து துறையில் 6.5 சதம், நலவாழ்வு துறையில் 4.4 சதம், நீதித்துறையில் 7.8 சதம், ரயில்வே துறையில் 4.5 சதம், ஐ.ஏ.எஸ், ஐ,பி,எஸ் ல் 3.2 சதம், பொதுத்துறையில் 7.2 சதவிகிதமே உள்ளனர் " என்று சச்சார் கமிட்டி சுட்டியதை கவனத்தில் கொண்டுப் பார்த்தால்தான் இச்சட்டத்தின் முக்கியத்துவம் நமக்கு புரியும்.
இப்பிண்ணனியில்தான் தமிழ அரசு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சிறுபாண்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை கொண்டுவந்துள்ளது. உண்மையில் வரவேற்ககூடியதாகினும், பல்வேறு சட்டங்கள் போடப்பட்டு கிடப்பில் கிடப்பதுபோல இதுவும் ஆகிவிடக்கூடாது. தமிழக மக்களின் 150 ஆண்டுகால கனவு திட்டமும், தமிழக தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதுமான சேது கால்வாய் திட்டத்தை மததின் பெயரை பயன்படுத்தி தாமதப்படுத்துவதுபோல இதையும் தாமத்ப்படுத்த அல்லது தடுத்து நிறுத்த மதவெறியர்கள் கடுமையாக முயற்சி செய்வர். ஏனெனில்.. பல சமூக இனக்குழுக்கள் சேர்ந்திசைந்து வாழும் ஒரு நாட்டில், பெரும்பான்மை சமூகத்தின் சமூக, அரசியல் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பெரும்பான்மையின் மத அடையாளத்தை முன்நிறுத்தி சிறுபான்மை சமூகங்களை கேள்விக்குள்ளாக்குவது மதவாத அரசியலின் அடிப்படையாகு.
இந்த சட்டம் அரசியல் நடைமுறையில் மட்டுமல்லாமல், சித்தாந்த முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்த்து. இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கிறிஸ்த்துவர்களுக்கும் எதிரான கடும் கருத்து பிரச்சாரத்தை மதவெறியர்கள் பல்லாண்டுகளாக மேற்க்கொண்டு வந்துள்ளனர். இதன் விளைவு சமூகத்தின் பொதுபுத்தியில் பல்வேறு தாக்கங்களை உறுவாக்கி உள்ளது.
எனவே அம்மக்களின் நியாயமான உரிமை இது என்ற வடிவத்தில் சமூக மக்களை சந்திக்க, இந்த இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாய் திரட்ட வேண்டியுள்ளது. சச்சார்குழு பரிந்துறையை மத்திய அரசு இன்னும் அமுலாக்கவில்லை. அமுலாக்க சொல்லி இடதுசாரிகளும், வாலிபர் சங்கமும் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது போல இந்த சட்டம் அமுலாகி அம்மக்களுக்கு அதன் பலன்கள் சென்றடையும் வகையில் அல்லது அது வரையில் தொடர் கண்காணிப்பது அவசியம்.
--------------------------------------------------------------------எஸ்.ஜி.ரமேஷ்பாபு

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark